Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: அழிகளம்

10: மயக்கு விளி

Posted on May 25, 2024

“போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே” என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் வாகை சூடன்.அவனது இடக்கால் சதைகள் துள்ளியணைந்தன. “என் உடலில்…

09: படையல் விளி

Posted on May 24, 2024

“மூநாள் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. ஒரு லட்சம் குடிகளுக்காவது உணவிட வேண்டும் மச்சாள். நீ அரியும் வெங்காயங்களை வைத்து ஒரு குழந்தைக்கு கூட உணவு கொடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு வெற்றிலை வாயைத் துப்பிவிட்டு ஒவ்வொருவரையும் அவர்கள் சினம் கொள்ளுமளவுக்கு வைதபடி பெருஞ் சமையல்…

08: பலி விளி

Posted on May 24, 2024

மாலை கரைசேரும் யவன மரக்கலனில் தனக்கான வலிநீக்கு ஒளடதங்கள் வந்து சேரும் எனப் பேராவலுடன் காத்திருந்தான் தமிழ்க்குடியின் முதற் பரதவ அரசன் நீலழகன். போரில் அங்கங்களை வெட்டி வீழ்த்தும் போதும் ஆயிரமாயிரம் அம்புகள் பெருமழைப் பெருக்கென எதிரிகளின் படை மீது குவிந்து சதை புகும்…

07: சித்த விளி

Posted on May 23, 2024

ஆடற் சித்தனின் சாம்பல் ஊறிய மேனியில் நெளிகாற்றொன்று மோதி கடுங்குழலைக் கலைக்க முடியாமல் அஞ்சி விலகி இன்னொன்றாக உருமாறிச் சென்று மறைந்தது. பல பருவங்களாக ஆறுகளிலும் குளங்களிலும் ஆழியிலும் குளித்துத் துணியால் உலர்த்தாமல் வெய்யிலில் காய்ந்த சடை இறுகியிருந்தது. தடித்த கரும் புருவங்களின் நுனிகள்…

06: யட்சி விளி

Posted on May 22, 2024

பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் பட்ட புண்களினாலும் அவன் பலநாட்களாக வலியில் துடித்தான். மருத்துவிச்சிகள்…

05: மந்திர விளி

Posted on May 21, 2024

ஆழியின் மேற்பரப்பு செந்தீயென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்தியின் மேகங்கள் பழுப்புப் பச்சையும் பொன் மஞ்சளும் குழைந்த ராட்சத மேக ரதமென உருவமைந்திருந்தது. ஆழிப் புறாக்கள் மரக்கலத்தின் பின்னே குறுவால் எனத் தொடர்ந்து பறந்து வந்தன. அகன்ற பாய்களுடன் சொப்பிரஸ்ஸா கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மரக்கலத்தில்…

04: நாத விளி

Posted on May 20, 2024

பதும்மையின் அறைச் சாளரத்தை மாலையின் குளிர் வருடியபடி இருந்தது. மணிக்கதவம் தாழிடப்பட்டிருந்தது. பதும்மை தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். விரும்பும் போது வெளியே வருவாள் என முதுபரத்தை அங்கினி வேறுகாடாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். வேறுகாடார் தாம்பூலத்தை மடித்து முதுபரத்தைக்கு நீட்டினார். அவள் பாதி கடித்து மறுகடிக்கு…

03: களி விளி

Posted on May 19, 2024

சாமியாடி தங்கிட தத்தரின் மகள் சுழல்விழி ஆகாயத்தின் கடைசி விண்மீன்கள் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அதிகாலையில் கற்கோவிலுக்குச் செல்லும் பெருவீதியால் நடக்கத் தொடங்கினாள். சூழ நின்றிருக்கும் ஒவ்வொரு நெடுவிருட்சமும் அவளின் துணை தெய்வங்கள். கைகளில் ஏந்தியிருந்த கூடையில் செவ்விரத்தைகளையும் தாமரைகளையும் இட்டு நிரப்பியிருந்தாள். குளத்தில்…

02: துதி விளி

Posted on May 18, 2024

பதும்மை தன் காம்புகளை ஆடியின் முன் நின்று விரல்களால் நீவினாள். ஈரலிப்பான காற்று அறைக்குள் நுழைந்து சுற்றியிருந்த திரைச்சீலைகளைக் கைளால் சுருட்டி அலைத்தது. சாளரத்திற்கு அருகில் நின்ற மல்லிகைக் கொடி தன் நறுமணத்தை அறைக்குள் அள்ளி எறிந்தபடியிருந்தது. கூடத்தில் ஆண்களும் பெண்களும் சிரிக்கும் ஒலிகளும்…

01: ஊழி விளி

Posted on May 17, 2024

காலம் இன்னதென்று கணக்கிடாக் காலமொன்றில் ஓர் ஊழி எழுந்தணைந்த பெருநிலத்தில் குழல் கலைந்து தோள் புரள நிற்கிறான் இளம் பாணன். மிச்சமிருக்கும் புடவிக்குத் தன் உதிரத்தின் ஒவ்வொரு சுழிப்பிலும் மூழ்கியெழும் மானுடக் காதைகளைப் பாடுதற்கு அவனுளம் கூர்ந்தது. ஓடும் காட்டுப் புரவிகளுடன் சமநேரத்தில் ஓடி…

Posts pagination

Previous 1 … 12 13
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,902)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme