Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: அழிகளம்

120: சிலைப் புன்னகை : 02

Posted on October 3, 2024

விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் செய்தது. நோக்கில் அவள் எளிய அருள் கொண்டிருந்தாள். விழைவும்…

119: சிலைப் புன்னகை

Posted on October 2, 2024

தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென. பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி பின்னிக் கொண்டிருந்தான். அவளது தேகம் அவன் முன் ஊழ்கத்திலென…

118: ஒரு தீச்செந்தழல்

Posted on October 1, 2024

“எத்திசை செல்வதென எண்ணாது திசை தோறும் பொழிந்திட்ட பெருமழைப் பெருக்கிலும் ஆழ்சுனை ஊற்றுகளின் கனவுகளிலும் உருவேறி ஓடிய மகத்தான ஆறொன்று எத்திசையும் திறக்காத பாழிருளில் தான் எங்கு பிரிகிறேன். எங்கு அழிகிறேன். இருக்கிறேனா. உலர்ந்தேனா என அறியாது திகைத்து நின்ற போது பாதாளம் உடைந்து…

117: நீர்க்கொடி : 02

Posted on September 17, 2024

உளத்தில் கசந்து கொண்டிருந்த நச்சில் ஒருதுளியை எச்சிலென மண்ணில் உமிழ்ந்தான் வாகை சூடன். “பாணரே. காமம் கூடாதவன் பழக வேண்டியது போரே. உடலை ஒருக்கி அதைப் படைக்கலமென மாற்றினால் ஒழிய ஆணால் காமத்தை வெல்ல முடியாது. எய்யப்படாத காமம் கொண்ட ஆணளவுக்கு கீழ்மை கொண்டவன்…

116: நீர்க்கொடி

Posted on September 16, 2024

மானுடர் அடையும் சிறுமைகளும் அவமதிப்புகளும் எண்ணவியலாத விசையை அரிதான சிலருக்கு அளிக்கின்றன. ஒன்றில் அவர்கள் கனிந்து நிறைவடைபவர்களாகவும் இல்லையேல் கனன்று பேரழிவின் ஊற்றுகளாகவும் மாறுவார்கள். ஒரு மானுடர் இன்னொரு மானுடரைச் சிறுமை செய்வதை இளையோர் களியெனவும் மூத்தோர் அச்சத்துடனும் நோக்குவது அதன் பொருட்டே. எண்திசைத்…

115: ஒருகணம் : 04

Posted on September 15, 2024

நீர்க்குமிழியில் காற்று நுழைவது போல வெண்தலை கொண்ட பருந்து சிறகை அசையாது ஏந்தியபடி அரண்மனையின் காவற் கோபுரத்தின் மேலே தாழ்ந்து கொண்டிருந்தது. அரசு சூழும் அவையின் சாளரத்தில் நின்றிருந்த நீலழகனின் முகத்தில் சாம்பலின் வண்ணமிகு சிற்றொளி பரவி உறைந்திருந்தது. சாளரத் துண்டில் நீலன் ஆடியில்…

114: ஒருகணம் : 03

Posted on September 14, 2024

பெருந்தோல்வியைச் சந்தித்து உச்சங்களிலிருந்து வீழ்பவனை விட ஆயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளால் வீழ்பவன் கொள்வதே மகத்தான அவமதிப்பும் தீமையின் விழைவும் என எண்ணினான் அசல. நீண்டு விரிந்திருந்த குளத்தில் இளமழை தாமரைகள் மேல் பொழிந்து கொண்டிருந்தது தன் பல்லாயிரஞ் சின்னஞ் சிறு தோல்விகளை. வனத்திலிருந்து…

113: ஒருகணம் : 02

Posted on September 13, 2024

அக்கணத்தில் விழி திறந்திட்ட உருக்கு வாள் முனை போன்ற விழிகளால் சுழல் விழி இளம் பாணனை எண்ணிக் கொண்டாள். அவனது இளம் புரவிக் குழலும் சிறுவனின் அகங்காரம் கொண்ட விழிமணிகளும் அகன்ற மார்புகளில் தேக்கின் மதர்ப்பும் கூடியிருந்தது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அலைந்தபடி அங்கு இங்கென்றில்லாது…

112: ஒருகணம்

Posted on September 12, 2024

விண்ணென்பது இளங் கருமையின் மாபெரும் வதனமெனத் திரண்டிருந்தது. சாம்பலின் கருமை தலைப்பட்டினத்தின் மீது அகண்ட காளான்களின் மலைக் குவைகளெனக் கவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இளமழையின் தூவல்கள் வெளிநோக்கி நிலைத்திருக்கும் இளங் காதலியின் விழிமயக்கென எண்ண இயலாத தழைவில் விழுந்து கொண்டிருந்தது. முகம் வெண்ணிறமாகி மேனி…

111: மெய்த்தோழன் : 02

Posted on September 11, 2024

வலைக்குள் வலையென நுண்ணியும் விரிந்தும் அகன்றும் உருவாகிய புலிகளின் குழு முற்றொருமை கொண்டு பிற குழுக்களைத் தாக்கி அழித்து அரசாணை கொண்டெழுந்த போது அரசு சூழ்தலின் தலைமைப் பொறுப்பினை தமிழ்ச்செல்வனிடமே காலம் கையளித்தது. சூர்ப்பனகர் அவர்களது மதியூகியர்களில் முதன்மையானவராக இருந்தார். எதை எங்கு எதன்…

Posts pagination

Previous 1 2 3 … 13 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,995)
  • காதலின் முன் பருவம் (1,968)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,902)
  • விடுதலையில் கவிதை (1,881)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme