கவிதைச் சுவரொட்டி
ஓஷோவின் சொல்லுண்டு “உண்மை சந்தையிடத்துக்கு வந்தாக வேண்டும்” என்று. நான் அதை ஏற்பவன். இலக்கியமோ கலையோ அது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஒரு குறுங்குழுவின் தனிக்களியல்ல. மொத்த மானுடத்தினதும் பண்பாட்டினதும் திரண்ட அறுவடை. அதில் ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும். எனது கவிதைகள் சிலவற்றை நண்பர்கள் சுவரொட்டிகளாகச் செய்து வருகிறார்கள். அதன் முதலாவது சுவரொட்டி இது.