நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு.

ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் நகைச்சுவை உண்டு. அது ஒரு அம்சம். ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு திறப்பு. ஒரு கிரியேட்டிவ் தருணம். வீட்டின் ஒரு பக்கம் என்பதைப் போல.

தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையவர்கள் வரை குறும்பும் எள்ளலுமாகப் பேசக் கூடியவர்கள் அல்லது எழுதக்கூடியவர்கள் பலரும் உண்டு. பல வகை நகைச்சுவைகள் நிகழும். அதற்கு இலக்கிய மதிப்பென எதுவுமில்லை. அது ஒரு சிறிய விளம்பர இடைவேளை மட்டுமே.

அராத்துவின் நூல் வெளியீடொன்றில் சாரு நிவேதிதாவுன் ஜெயமோகனும் கேள்வி பதிலில் அளித்துக் கொள்ளும் நகைச்சுவை மூத்தவர்கள் எனும் பீடத்தில் ஏறி நின்று என்றும் இளமை தரும் ஒன்றே இலக்கியம் எனக் கூவிக் களியாடும் மனநிலையில் இளையோருக்குச் சவாலளிப்பது.

ஈழத்தில் நகைச்சுவை தடை செய்யப்பட்ட வஸ்து என்பதில் ஆச்சரியமில்லை. ஷோபா சக்தியும் அ. முத்துலிங்கமும் மட்டுமே இரண்டு சின்னச் சாளரங்கள். பெரும்பாலானவர்களின் முகத்தில் எள்ளும் எழுத்தில் கொள்ளும் வெடிப்பதையே பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. இறுக்கமான ஈழ இலக்கியம் என்றாவது சிரிப்பும் களியுமாக ஆக வேண்டும். ஆனால், தமீழத்தை விடத் தொலைவில் உள்ள கனவு அது.

TAGS
Share This