குறுந்தொகை : ஜெயமோகன் உரை

குறுந்தொகை : ஜெயமோகன் உரை

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் கொண்டிருந்தது. நவீன எழுத்தாளர்கள் அதைச் சுகிப்பதற்கான பல வாயில்களை உண்டாக்கினர். ஜெயமோகனின் பார்வைக் கோணம் அன்றாட வாழ்விலிருந்து சங்கக் கவிதைகளை அணுகுவது. ஒரு தியானப் பயிற்சியின் போது நுண்சொல் போலக் கவிதையை ஏற்றுக் கொள்வது. இந்தவகை வாசிப்பு முக்கியமானது. சொல் பழுதின்றி கற்பனையின் வாயில்களைத் திறந்து கொண்டு அக்கவிதைகளுக்குள் நுழையத் தூண்டுவது. இந்த உரை அதற்கான சில அவதானங்களை அளிப்பது.

TAGS
Share This