நான் இப்போது ஒளி

நான் இப்போது ஒளி

எந்த இருட்டிலும் என்னை நீங்கள் எறிந்து தள்ளலாம்
எரிவதால் அல்ல
ஒளிர்வதால் நான் ஒளி

என்னை எரித்து மிஞ்சும் கரியில் வைரங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்
பிறகு
வைரங்களில் ஒளிர் விடும் பட்டைகளில்
ஊர்ந்து செல்லும் நீர்த்துளியென என்னைக் கண்டு கொண்டேன்

ஒளிக்கு இருளேயில்லை.

TAGS
Share This