கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்

வணக்கம் கிரிசாந்,
உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன்.
மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது எங்களை அறியாமலே அந்த நாவலுக்குள் சென்று அங்கே நடப்பதை எல்லாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு அந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. நான் பல நாவல்கள் வாசித்துள்ளேன். ஆனால் இந்த நாவல் மிகவும் சுவாரசியமாகவும் மற்றும் கதைக்களங்கள் மெய்சிலிர்க்கும் தன்மையை கொண்டவையாகவும் வாசகர் மத்தியில் ஏற்படுத்துகின்றது. சொல்லப்போனால் அருமையான குறுநாவல் உங்கள் காலங்களில் இவ்வாறான பல நாவல்களை நீங்கள் எழுதவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த குறு நாவலின் சில குறைபாடுகளை முன் வைக்கலாம்
என நினைக்கிறன். எல்லாம் சரி, வர்ணனை தான் கொஞ்சம் கூடி போச்சு. மற்றது முடிப்பு வந்து கொஞ்சம் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். முடிப்பு கொஞ்சம் சப்பையா முடிஞ்ச மாதிரி இருக்கு. நான் எதிர்பார்த்த அளவுக்கு முடிப்பில்லை என்றாலும் பரவாயில்லை உங்களுடைய முயற்சிக்கு நான் பாராட்டுகின்றேன். இதுதானே உங்கட முதல் நாவல் அடுத்து வரும் நாவல்களில் இவ்வாறான
தவறுகளை குறைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
தில்லானா திவ்யநாதன்
*
வணக்கம் தில்லானா,
உங்கள் கடிதம் கிடைத்தது. உங்களது வாசிப்பும் எனக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருகாலத்தில் எழுத்துக்கூட்டிப் படித்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று ஒரு குறுநாவலுக்கு வாசகர் கடிதம் எழுதுமளவு முன்னேறியமையைக் கண்டு இன்னும் மெய்சிலிர்க்கிறது. நீங்கள் வாசித்த நாவல்கள் எவை என அறிய விரும்புகிறேன்.
நன்றி
கிரிசாந்