கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும்.

ப. பார்தீபன்
22-05-2025

*

ஈழத்திலிருந்து ஒரு புதிய குரல். மயக்கும் மொழியை கைவரப் பெற்றிருக்கிறார். ஈழத்து
வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு சில பகுதிகளை இயல்பாக
கொண்டுவந்திருக்கிறார். இன்னும் பேச எவ்வளவோ இருக்கிறதே, அதெல்லாம் எப்போது என்ற கேள்விக்கு இக்குறுநாவல்
பதிலாக முளைத்திருக்கிறது. இவரிடமிருந்து பெரும் படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இக்குறுநாவல்
ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்த்துகள் கிரிசாந்.

ஹரிசங்கர்

TAGS
Share This