வணக்கப்பாடல்: கடிதம்
முதல் வாசிப்பில் காமக் கிழங்கே என்ற இடத்தில் தான் என் கவனம் போனது மீண்டும் வாசித்தேன்.
ரசிக்கும் ஆணுக்குள் தான் பொங்கும் பச்சை அரிசி பாறையின் மூடி அடி வெப்பத்தில் தட்டி தட்டி விழுவதை பற்றித் தெரியும். அப்படியே கவிதை தடித்து போன உணர்ச்சி மிக்கவை தான். மரத்துப் போனவை என்பதை சொல்லி அந்த வெப்பத்துக்கு சுடர்இருள் என பெயர் இட்டு வளர்கிறது. அங்கே ஒரு கட்டத்தில் நா(க்)கலப்பையின் உழுகை பற்றி எழுதும் காம சூத்திரம் தெரிந்தவன் நீ. அப்படிப் படைத்த பிரம்மனுக்கு சற்றும் குறைவிடாத நீ காலின் சருமத்தில் வரும் உரசல் விசையின் போது வரும் குயில் முனகல் கானத்தைப் பற்றிய கதையும் புனிதமானது தான். இப்பதான் அந்த கதிரின் விரிவை பற்றிய பார்வைக்குள் வருகிறேன் நான். அதாவது இவற்றின் பின்தான் நான் காயவிட்ட கதிரின் விரிவை காண்கிறேன். அதற்குள் மேல் சொன்ன நுனி உழுகை எல்லாம் கதிர்மீது வெண் சுக்கிலமாய் ஒரு படத்தை எழுதி குவித்து இருக்கிறாய். ஆனந்த தாண்ட நடராஜா.. இந்த ஆடலும் மதன வணக்கமும் ஒரு ஓங்கிய வானமாக உயர்ந்து பார்க்க வைக்கிறது.
நன்றி. மதன வந்தனம்.
– Rtr Kirishanth –