வணக்கப் பாடல்
மூதக் கிழவியொருத்தி
ஓங்கிய வானம் போய்
தூர விழுந்ததடி
காயும் கதிர் விரிவே.
உழு நிலமே ; கனற் கன்றே
நுனித்த மார்பே ; பசுந் தோலே
கூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டே
காமக் கிழங்கே
கொல் நெருப்பே ; குளிர் இரும்பே
வடியுதடி பாத்திரச் சோறு.
விடைத்த கரும்பே ; பெய் மழையே
ரோமக் காலே ; இமைச் சலாகைகளே
பின் தோள் வெளியே ; பிருஷ்ட சாதுக்களே
வெண் சுக்கிலமே ; விண் சிலம்பே
பரல் கொட்டுதடி சுடரிருள்.
வீற்ற பெரும் பெண்ணே
உன் மதனம் வாழ்க
உன் மதர்த்தம் வாழ்க.
(2017)
(புதிய சொல்)