இந்த முறையாவது

இந்த முறையாவது

இடையில் எழுந்தமர்கிறது
ஒரு தணற் பாம்பு

எவ்வளவு நிரப்பியும் ஓட்டையாய் வழியும்
எங்கு திரும்பினும் நெற்றியில் இடிக்கும்

வாழ்வு.

ஆலகாலத்தைக் கடையக்
கயிறு வேண்டும்
ஓயாத தலைவலியில் கிடந்த உன் தலையை மத்தாக்கினோம்
உடம்பைக் கயிறாக்கினோம்
இரண்டு பக்கமும் அசுரர்கள் கூடிக் கடைந்தோம்

விஷம் தீராத பாயில்
நீ கிடந்து உறங்கு யுகம் யுகமாய்
எனது காலிடையில் பூஞ்சணம் படிந்த பாம்பு
தன் தலையை அறுத்துவிட்டுச்
சுருண்டு படுக்கும்
ஒவ்வொருநாளும்

உனக்கு என் வருத்தங்கள் கண்ணே
உனக்கு என் பூஞ்சணம்
உனக்கு என் அசலிருள்

இந்த முறையாவது ஏமாறாதே.

TAGS
Share This