அழிகளம்: புனைவு விடுமுறை

அழிகளம்: புனைவு விடுமுறை

சொற்களின் எல்லையை எதுவரைக்கும் உள்ளம் விரித்துச் செல்கிறது என்பதை அறிய ஒரு புனைவை எழுதிப்பார்க்க எண்ணினேன். நான் பொதுவாகவே நீண்ட புனைவுகளை எழுதுவதற்கு எதிரான மனப்பயிற்சி உள்ளவன். ஒரு வகைப் புனைவெழுத்து எதிர்ப்பாளன் என்று கூடச் சொல்லலாம். இப்பொழுது சொற்களில் புரவியேற்றம் செய்யும் ஆசை வந்திருக்கிறது.

அழிகளம் எனும் புனைவை ஒரு மொழிப்பயிற்சியாக எழுத எண்ணுகிறேன். யாருக்கேனும் தொடர்ந்து வாசித்து புனைவு தொடர்பில் கருத்துகள் இருப்பின் எழுதி அனுப்புங்கள்.

அழிகளம் என்ற சொல் அரவானின் இறப்பு நிகழ்வு நடந்த களத்தைச் சொல்வது. கொண்டாட்டமும் துயரும் அடுத்தடுத்து நிகழும் புனைவு வெளியது. அத் தொன்மத்தின் ஒரு சில அம்சங்களைத் தவிர அழிகளத்தின் யாவும் கற்பனையே.

வரலாற்றையோ தத்துவத்தையோ முறையாகப் பரிசீலித்து எழுதும் கதை அல்ல அழிகளம். எழுத்துப் பயிற்சி மட்டுமே. ஆனால் எழுதத் தொடங்கியதிலிருந்து அவ்வுலகில் இருந்து வெளியே வரமுடியவில்லை. சொற்கள் பெருகிவரும் சத்தம் எனக்குள் ஒலிக்கிறது. ஆகவே அடுத்த சில நாட்களோ மாதங்களோ அழிகளம் எதுவரை நிகழ்கிறதோ அதுவரை புனைவை மட்டுமே ஒவ்வொரு நாளும் வெளியிடுவேன். கவிதைகள் பற்றி எப்பொழுதேனும் நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என நினைக்கிறேன்.

இந்தப் பித்திற்குள் சென்று வாழ்ந்து வெளிவருவது தான் இதைக் கடந்துவர உதவும். தோன்றும் பொழுது வாசக அபிப்பிராயங்களை எழுதி அனுப்புங்கள்.

TAGS
Share This