90: சுவடிகை
கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் பற்றிக் கொண்டு துயில் மயக்குக் கலைய எழுவதும் நினைவுகள் பின்னாலென இழுக்கச் சாய்வதுமாக உழன்று கொண்டிருந்தாள். முற்புலரியில் அரண்மனை நோக்கித் திரும்பிய லீலியாவின் புரவியில் அவளின் பின்னே குரங்குக் குட்டியென அணைத்துக் கொண்டு சுவடிகை களித்திரள் மெல்ல விலகி மழையில் உலர்ந்த பறவைச் சிறகென மனைகளிலும் மரத்தடிகளிலும் திண்ணைகளிலும் சத்திரங்களிலும் ஒடுங்குவதை நோக்கிக் கொண்டு விழிகள் துயிலில் வீழச் சென்று கொண்டிருந்தாள். புரவியின் ஓட்டம் இனிய துயிற் தாளமென ஒலித்ததாக எண்ணிக் கொண்டாள்.
அரண்மனை முற்றத்தில் தீப்பந்தங்கள் வான் நோக்கியென எரிந்தன. முற்பகுதியின் குளிர்மணலில் கால்வைத்த போது மேனி மெய்ப்புக் கொண்டது. மலர்களும் கனித் தோல்களும் கொட்டிக் கிடந்த மஞ்சமென அரண்மனை முற்றம் குலைந்திருந்தது. தானகியைத் தோளில் சாய்த்தபடி கள் மயக்கில் ஆடுமிருவர் போல சென்று கொண்டிருந்த நிலவை லீலியாவைக் கண்ட போது விழி உயர்த்திப் புன்னகைத்து “லீலி” எனக் கூவினாள். லீலியா இளம் பிள்ளை போல மகிழ்வுடன் கையசைத்தாள். சுவடிகையைத் தட்டியெழுப்பி “பேரரசி” எனக் காட்டினாள். எளிய குடிகளின் ஆடையிலிருந்த நிலவை புழுதிக் களியாடிவள் போலவும் தேகம் கருஞ் சிலையில் அடித்த புழுதிப் புயலால் வண்ணம் கொண்டது போலவும் நின்றிருந்தாள். அவளது நரையிழை கூந்தலில் ஆடவர் சூட்டிய மல்லிகைகள் வெள்விண்மீன்களென நடுங்கிக் கொண்டிருந்தன. பெருஞ் சிலைகளுக்குரிய அவளது தோற்றம் மட்டும் வணக்கத்திற்குரியவள் எனத் தோற்றியது.
தானகியைத் தன் மஞ்சத்தில் வளர்த்திய பின்னர் உசை எழுந்து விழிபிரட்டி நோக்க “வந்துவிட்டேன் உசை” எனச் சொல்லிச் சிரித்தபடி “நீராடிய பின்னர் துயில்வது நல்லது” எனச் சுவடிகையை நோக்கிச் சொன்னாள் நிலவை. சுவடிகை லீலியாவுக்கு மொழிபெயர்த்தாள். மூவரும் தளர் நடையுடன் நீரகத்தை நோக்கிச் சென்றனர். நீரகத்தின் வடிவமைப்பை நோக்கிய லீலியா புன்னகைத்தாள். கானகத்திற்குத் தன் ஒரு சுவரை அவிழ்த்து நிற்கும் நீரகமே நிலவை என எண்ணிக் கொண்டாள். தன் தலையாடையை அகற்றியவள் மாற்றாடையை அருகே வைத்து விட்டு தன் கறுத்தத் திரைச்சீலை போன்ற ஆடையைக் கீழிருந்து மேலாக மாயத்திரைக்குள் மறைந்து வேறொருத்தியாக எழுபவள் போல கழற்றினாள். நிலவை தன் மேலாடையை அகற்றிச் சுழற்றி வீசினாள். அவளின் பெருங்கனி முலைகள் வியர்த்துக் கசிந்து மழையாடியவை போலிருந்தன.
லீலியா ஆடைகளுக்குள் மேலும் உள் ஆடைகளை அணிந்திருந்தாள். இடையாடை மார்புக்கச்சை என்பன விந்தையான துன்னுதல்கள் கொண்டிருந்தன. நிலவை அவளது ஆடைகளை நோக்கிச் சிரித்தாள். லீலியாவின் முகமும் கூந்தலும் கழுத்தும் விடைமார்புகளின் குவை வளைவுகளும் அழகில் அரக்கியெனத் தோன்றச் செய்தது. அவளது கட்டியான பாலாடை வண்ண தேகம் இருளில் பனிக்காற்றில் சுடர்த்தது. ஆமைக்குட்டியொன்று முதன் முறை தவழ்ந்து மென்பாதங்களை எடுத்து உலகினை நோக்கி அச்சங்களை அறியாமல் நீரே தன் கருப்பையென அறிந்து கடல் நுழைவதைப் போல சுவடிகை ஆடைகளை வீசிவிட்டு கால்களை எடுத்து மென்மையாக வைத்து நீரகத்தில் மயக்குக் கொண்டவள் போலப் பாய்ந்தாள். சிறிய கரங்களும் சிறிய உடலும் கொண்டவள். மெல்லிதின் வாளிப்பும் காற்றுலாவும் வீச்சும் அவளில் நிறைந்திருந்தன. நீரடியைச் சென்று தொட்டு நீள் மீனெனெ மேலெழுந்து வந்தாள். முற்புலரியின் குளிர் வெய்யிலில் குடையான நிழலெனக் கவிழ்ந்திருந்தது. நிலவை தேகத்தின் களியைக் காற்றில் ஆறவைத்திருந்தாள். லீலியா படிக்கட்டில் அவளின் அருகமர்ந்து நீண்ட வெளிர் மஞ்சட் கால்களை நீரில் அலைய விட்டிருந்தாள். இருவரும் விண்மீன்களை நோக்கிக் கொண்டு அதன் நடுநடுக்கத்தில் எரியும் நீலச் சுழலை உற்றனர். தீயிலைத் துதியை எடுத்து அகலில் பற்ற வைத்த நிலவை புகையை ஊதியபடி மீண்டு அவளருகில் வந்தாள். இருவரும் சீர்தாளத்தில் துதியைக் கைமாற்றிப் பற்றிப் புகைத்தனர். தேகங்கள் அருகருகே ஆறக் கற்படியில் சாய்ந்தனர். பசுங்கருமை கொண்ட பாசியின் நுண்தலை நுனிகள் அவர்களை ஏந்தின.
சுவடிகை நீராடலில் பித்துக் கொண்டவள் போலச் சுழன்றாள். துயில் எங்கு சென்றதெனத் தெரியாது நீரை அள்ளிக் கூத்தாடினாள். அரை நாழிகை நீந்தியாடியவள் எழுந்து லீலியாவின் அருகில் வந்தமர்ந்தாள். நிலவை எழுந்தமர்ந்து சுவடிகையை நோக்கி “உங்களது பெயர் என்ன” எனக் கேட்டாள். அவள் குரலில் விரிந்த கனிவைக் கேட்டவள் மெல்லிய பணிவுடன் உடலைக் குறுக்கி “எனது பெயர் சுவடிகை. மதுரை மாநகரிலிருந்து வருகிறேன். எனது குடியினர் யவன வணிகத்திலிருந்தனர். அங்கனம் நானும் யவனர் மொழி பயின்றேன். வணிகர்களுடன் சொல்லாடும் அளவுக்கு யவனம் அறிவேன். இப்பயணத்திற்கென என்னை அனுப்பியிருக்கிறார்கள்” என்றாள். சுவடிகையின் குரல் கீச்சிடும் குருவிக் குரல் போல ஒலித்தது. அதைக் கேட்டுச் சிரித்த நிலவை “நல்லது. எங்கள் பட்டினத்திற்கு மதுரை மாநகரின் பேரழகியை வரவேற்கிறோம்” என்றாள். “நான் பேரழகியில்லை அரசி. என்னை என் தோழிகள் கரும் பல்லியென அழைப்பார்கள்” எனச் சொல்லிக் மெல்லிய குழி கன்னத்தில் எழச் சிரித்தாள். அவளுடைய பற்கள் முல்லையின் இதழ்கள் போல மெலிந்து வெண்மையாய் தோன்றின. “எவர் சொன்னார் உங்களை அழகியில்லையென்று. மெலிந்து பொலிவதற்கு வரம் வாங்கி வரவேண்டும். என்னைப் பாருங்கள் எங்கேயாவது ஆலயங்களில் வாயிற் காவல் பூதத்திற்குப் பதிலாக என்னை அங்கே நிறுவலாம். கையில் கதையும் வைத்துக் கொண்டால் அப்படியே பூதம் தான். ஆடவரும் அஞ்சும் பூதம்” எனச் சொல்லிக் கெக்கட்டமிட்டுச் சிரித்தாள். சிரிக்கும் பொழுது நிலவையின் கன்னங்கள் மூக்கு நோக்கிக் குமிந்து மூக்கு ஒரு நெளிவில் கூர்வதின் எழிலை நோக்கி வியந்த சுவடிகை “அய்யோ அரசி. நான் இளவயதிலிருந்தே உங்களின் மகிமை கேட்டு வளர்ந்தவள். தென்னகத்தின் தெருக்களில் பாணர்கள் உங்களைப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். போர்க்களமும் நாற்களமும் களிக்களமும் ஆடிடும் பேரரசியெனத் தமிழ்க் குடியில் உங்களைப் போல பிறிதெவர் உண்டு. காவியங்களில் கூட உங்களைப் போன்ற முழுமை கூடிய பெண்ணைக் கேட்டதில்லை. காவியங்களில் பெண்ணைச் சித்தரிப்பவர்கள் ஒன்றில் அன்னை. அகுதிலால் காதலி. கொழுநனின் கைப்பாவை. அதுவும் இல்லையென்றால் வஞ்சினம் கொண்டவள். விழைவுகளால் அலைவுறும் அரக்கி என்றே அறிந்திருக்கிறேன். நீங்கள் அனைத்துச் சொற்களாலும் பாடப்படுகிறீர்கள். ஒவ்வொரு காவியத்திலும் பாடலிலும் மின்னிடும் சொல்லென எழுந்து தோன்றுகிறீர்கள். நீங்கள் தென்னகம் வந்தால் மும்முடி சூடி ஆண்டிடல் எளிது. பெண்கள் உமக்கென நிரை வகுத்துப் படையமைத்துக் களம் நிற்போம்” என்றாள். அவள் அச்சொற்களை மெய்யான ஆர்வத்துடன் சொல்வதைக் கேட்ட நிலவை “பெண் முழுமையானவள் அல்ல சுவடிகை. ஆணைப் போலவே. முழுமை என்பது காவியப் பொய். அந்தக் கற்பனைகளுக்கு எதிராக என் வாழ்நாளெல்லாம் நிகர் நின்று போரிட்டு என்னை ஆக்கிக் கொண்டேன் என்பது மெய்தான். ஆனால் நான் விழைவது என் இளமையில் நான் கொண்டிருந்த எளிய கனவுகளின் இனிமையை. காப்புச் சங்கிலியென முறைமைகள் இழுத்துச் செல்லும் நான் தன்னை விடப் பெரியதான அன்னப் பருக்கையை தன் களஞ்சியம் நோக்கிக் கொண்டு செல்ல வழியற்ற
அரச பாவை. குடிகளின் விளையாட்டுப் பொருள்.
பாணர்கள் பாடுவதையும் குடிகளின் புகழ் சொற்களையும் என் செவிகள் பொருளாக்கிக் கொள்வதில்லை. அது நிலவை எனும் பேரரசியின் கதையென எண்ணிக் கொள்வேன். நான் அறிந்தது வனமும் அரண்மனையுமே. நீ அறிந்தது நீலப் புரளல்கள் கொள்ளும் ஆழிகளை. பருவங்கள் தோறும் வண்ணங்கள் மாறும் நிலங்களை. விதவிதமான மானுடர்கள் போன்ற மொழிகளை. பிறிதொரு குடிகளுடன் நாடோடி வாழ்க்கையினை. நான் அங்கனமே புடவியை ருசிக்கவும் நோக்கவும் களிக்கவும் விரும்புகிறேன்.
உனது நாட்டையல்ல. புடவியையே ஆளக் கொடுத்தாலும் அதுவோர் சிறையே. ஆள்பவர் குடிகளால் தளையுண்டவர். குடிகள் தம் எளிய இயல்பினாலேயே விடுதலை கொண்டவர்கள். அரசர்களையும் அரசிகளையும் எண்ணி அவர்கள் சொல்லும் சொற்களை அவர்கள் நாவுகள் கிளிப் பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்கின்றன. எனது குடிகள் என்னை அன்னைக்கும் அன்னை. தெய்வமானவள் எனச் சொன்னதை நேற்று இரவும் கேட்டேன். அங்கனமே வசைகளையும் இளிவரல்களையும் கொடுஞ் சொற்களையும் கேட்டிருக்கிறேன்.
எனக்குள் தெய்வமென்றோ தீதெய்வமென்றோ என்று எதுவுமில்லை இளம் பெண்ணே. நான் அன்னையல்ல. நான் தெய்வமுமல்ல. கனவு கொண்ட பெண். ஆண்களின் களங்களை நான் வென்றேன் என்பது மெய்தான். ஆனால் பிற பெண்கள் அக்களத்தை வென்று செருக்கி நிற்கும் தளங்களை அமைக்க இடைவிடாது பணிகள் என் முன் உலகின் பெருமலையளவு குமிந்திருக்கிறது. விடுதலை பெற்று எழும் பெண்ணில் தோன்றும் தாய் விடுதலையை அனுபவிக்க ஒப்புவதில்லை. நாமே அறங்களையும் நெறிகளையும் புடவியில் நிறுவியவர்கள் சுவடிகை. ஆகவே நமது விடுதலை என்பது கூட நம் பயணத்தின் தொடர்ச்சியே. பெண்கள் தனி உயிரிகளாக ஆணுலகால் ஒடுக்கப்பட்டு அமைந்த பின்னர் நாம் ஆக்கிய நெறிகள் உதிரத் தொடங்கின. ஆணை முதன்மைப்படுத்தும் எண்ணங்களே தொடர்ந்து முன் வைக்கப்பட்டன. மகவென்று தோன்றும் ஆணை முதன்மையில் நோக்குபவள் தாயல்லவா. மனையாளன். காதலன். தந்தை. அண்ணன். தம்பி. உறவினன். தோழன். குடியினன். மானுடன் என ஒவ்வொரு நிலையிலும் ஆணின் அதிகாரத்தை நாங்களே முதன்மையாக்குகிறோம்.
ஆகவே நாம் இங்கிருக்கும் சிந்தனைச் சிடுக்கின் நூலிழைகளால் வலையிடப்பட்டிருக்கிறோம். அதில் நானொரு ராணிச் சிலந்தி. அவ்வளவே.
காவியங்கள் எதிர்நிலை கொண்டவர்களையும் ஏற்கெனவே உள்ள நெறிகளையும் அறங்களையும் ஓரடுக்கு அகலித்து அதன் நுண்மையான சிடுக்குகளை அவிழ்பவர்களையுமே நாயகர்களாக்குகிறது. பெண்கள் தங்கள் விழைவுகளால் வஞ்சங்களால் பேதமைகளால் முன் வைக்கபடுவதும் அதனாலேயே. ஆனால் ஆடவர் மையக் கதைகள் ஆணையே முதன்மை நற்குணனாகச் சித்தரிப்பவை. அவனுக்கே அதைச் சூடும் தேவையெழுகிறது. ஆணே முதன்மையாக நல்வழிப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு அக்கதைகளின் நாயகர்களே அடைய வேண்டிய உச்சங்களென வகுக்கப்படுகின்றன. முழுமை கூடிய ஆணும் பெண்ணும் பயில்வினாலும் அறிதலினாலும் பகிர்வதினாலும் விவாதித்துத் தொகுத்துக் கொள்வதினாலும் மீறுவதாலும் களங்கத்தாலும் தீயில் வேகி புனலில் அவிந்து புடமிடப்பட வேண்டியவர்கள். அவர்கள் எதிர்வருங் காலத்திற்குரியவர்கள். நாம் காலத்தால் எல்லை கொண்டர்கள். பெருங் கனவுகளால் விரிவு வாய்த்தவர்கள். கற்பனையால் வரமளிக்கப்பட்டவர்கள்.
நாம் காவியங்களைப் புனையும் காலத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து ஆக்கும் புடவியின் நெறிகளும் அறங்களும் அதுவரையான அனைத்திற்கும் மேலானதாகவே நின்றிருக்கும். ஐயமின்றிச் சொல்கிறேன். ஒரு பெண் எழுந்து சொல்லும் பெருங்காவியமே மானுட மாகதையின் பெருங்கனவை முற்றளிக்கும். அக்காலம் நிகழ்வதற்கு இன்னமும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நெடு யாத்திரை உள்ளது சுவடிகை. இன்று நாம் இக்கணத்தில் விழைவதை அனுபவித்து நிகழ்வதை வென்று இயன்றதை முயன்று அந்த நெடு யாத்திரையின் இன்னும் சில காலடிகளை எடுத்து வைப்போம். கோடி கோடிப் பெண்களும் ஒரேயடியில் எடுத்து வைக்க வேண்டிய காலடியின் எடையில் புடவி அதிரும் ஒரு நாள்” என்றாள் நிலவை. காகங்கள் புலரியைப் பாடியபடி கரையும் ஒலிகள் கேட்கத் தொடங்கின. சுவடிகை நிலவையில் எழுந்தணைந்த பேரரசியை விழியெடுக்காது நோக்கி நின்றாள். தெய்வத்தைக் கண்ட அடியவளென.
லீலியா படிக்கட்டில் எழுந்து நீரை இருகைகளாலும் விரித்து மாபெரும் அன்னமொன்று சிறகுதைத்து நீந்துவது போல உள்ளே நுழைந்தாள். நீரகம் அசைந்து ஆர்த்தது. புறநீச்சிலில் கூந்தலிலைகள் பிரிந்து நீர்வேர்கள் போல மிதக்க செந்தாமரையொன்று முற்றவிழ்ந்து விரிந்தது போல அவள் முகம் நீரில் முகிழ்த்தது. தேகத்தின் சூட்டை நீரகம் முலைமுட்டிக் குடிக்கும் ஆட்டுக் குட்டியென உறிஞ்சிக் கொண்டிருக்கிறதென எண்ணிய லீலியா சிரித்து எழுந்து நிலவையை நோக்கி வாவென அழைத்தாள். “காவியங்களை விட முக்கியம் நாம் ஆடக் கிடைத்திடும் களிகள் பெண்ணே. வா. நீரலைகளில் நீந்தும் கரும் பல்லியே” எனச் சொல்லிச் சிரித்தபடி சுழன்று களம் பாயும் வேலைப் போல எறிந்து குதித்தாள் நிலவை. பேரலைகள் எழுந்த நீரகம் மூச்சுத் திணறுவது போல கரைக்கற்களை அலைக்கரங்களால் பிடித்து ஊன்றி நிலை கொண்டது. சுவடிகை நீருக்கு நோகாது கருமையான நீர்ப்பாமொன்று மேற்பரப்பில் மிதந்து நுழைவதென வழுகினாள். லீலியாவின் தோள்களைப் பற்றிய நிலவை அவளது முதுகைத் தேய்த்து அழுக்கை அகற்றினாள். திரும்பிய லீலியா தன் ஆடைகளை நீருக்குள்ளே கழற்றிப் படிக்கட்டில் எறிந்தாள். அலசியும் அழுக்குகளை அகற்றியும் நீரள்ளிப் பெய்தும் குளித்துக் களித்தனர். நிலவையும் லீலியாவும் எதிரெதிரே நின்று நீரலைகளை இறக்கைகளால் விலத்துவது போல அடித்துக் கொண்டு நீர்வழியும் மேனிகளை நோக்கினர்.
வெண்பளிங்குக் குன்று போல நின்றாள் லீலியா. கருங்கல்லின் வைரக் கருமையில் மின்னினாள் நிலவை. இருவரின் முலைகளும் நான்கு புடவிகள் நீரில் நீந்துவது போல தோன்றின. சுவடிகை நீர்ப்பாம்பு போல இருவருக்கிடையிலும் நீந்திச் சுழன்றாள். நீரகத்தின் களிப்பாசி மணல்கள் காலில் பட்டு எழுவது வழுக்கும் படிக்கட்டு நகர்வது போல அலைக்க லீலியா நிலவையை நோக்கி நகர்ந்தாள். ஒரு மென் வழுக்கலில் அவளின் திசையை அறிந்த நிலவை இருமுலைகளும் அவளின் இருமுலைகளில் அழுந்த காம்புகள் ஒன்றை ஒன்று தழுவி அறிமுகம் செய்து கொள்ள லீலியாவின் பெருந்தேகத்தை விரல்களால் தடவினாள். ஒவ்வொரு வளைவையும் நீண்ட தொலைவுகளையும் விரல்கள் அளைய நாணங் கொண்ட லீலியா நிலவையின் தோள்களைப் பற்றிக் கொண்டாள். சுவடிகை இருவரின் தொடுகையையும் நோக்கிச் சிரித்தாள். “இந்தக் களியில் எளிய பல்லி எந்த மலையில் ஏறும்” எனக் கூவி மெளனத்தைக் கலைத்தாள். “கரும் பல்லியே உன் இச்களால் எங்கும் தொல்லையே. வா. மெளனத்தில் மொழியின்றி அறியும் தேகங்களுக்கு உன் மொழிபெயர்ப்புத் தேவையில்லை” என்றாள். புலரியின் பனி திரைமழையென நீரகத்தின் மேல் பெய்து கொண்டிருந்தது. கானகத்தின் மலர்கொள் காற்றில் அறியாத நறுங்கலவைகள் எழ சுவடிகையும் லீலியாவும் நாசியை உறிஞ்சிச் சுகித்தனர். இயற்கையின் போதைப் புகையே மலர்வாசனை என்றாகியது என எண்ணினாள் சுவடிகை.
லீலியாவின் உதடுகளின் நீர்மையைத் தொட்டுத் தடவினாள் நிலவை. சுவடிகை அருகில் சென்று லீலியாவின் தோளைத் தொட்டாள். அவளின் தளிர் விரல்கள் பட்டுப் பெருமலை அதிர்வது போல நடுங்கினாள் லீலியா. அந்த நடுக்கம் ஓய்வதற்குள் பாலைவனப் புதர்கள் வெள்ளத்தில் அமிழ்ந்தது போல நீருற்றுக் கிடந்த லீலியாவின் அல்குலை நிலவை மயிலிறகென வருடினாள். வருடலில் மேனி அதிர்ந்து மின்னல்கள் படர்ந்தன. நிலவை அவளின் அதிர்வுகளையும் குலைவுகளையும் நோக்கி நின்று “இவள் தேகம் காமத்தை அறிந்தது அரிதே” எனச் சொன்னாள். சுவடிகை அதை மொழிபெயர்த்து லீலியாவின் செவிகளில் மூக்குரச ஒட்டிச் சொன்னாள். சொடுக்கித் திரும்பும் நாகம் போல தலை சுழன்று சுழன்று ஆடிய லீலியா “ஓம்” என நிலவையை நோக்கித் தலையசைத்தாள். பெருந்தேகத்திற்குள் அலையும் மெல்லிய காமம் ஒரு நெடுங்கொடியென லீலியாவில் வளர்ந்திருந்தது. பாலைவன மழையைப் போல அரிதாகவே அவள் மேனி பிறரால் தீண்டப்பட்டிருந்தது. அவளது பேருருவும் மாயக்காரியென்ற பணியும் கந்தோஸ் பிலிப்புவின் காவலும் அவளைச் சுற்றி எப்போதும் இருந்தன.
நிலவை அவளது தோள்களிலிருந்து நழுவி நடந்து முலைகளை அள்ளிக் காம்புகளைக் கட்டை விரலால் தொட்டு நசித்துத் துள்ளினாள். நீர் மூச்சு விடுவது போன்ற ஒலி உதடுகளில் முனகல்களெனவும் விம்மல்களெனவும் எழுந்தன. பெருங்கரடியொன்றைக் கட்டித் தழுவும் சிறு மந்தியென லீலியாவின் பின்னிருந்து தன் மென்சிறு கொய்யாக்கனி முலைகள் அவளில் உரச கட்டியணைத்தபடி இடையைக் காலால் சுற்றிப் பற்றினாள் சுவடிகை.
மூவரும் தேகங்களை உரசி அறிந்தனர். தீ மூளும் இடங்களில் தீயை மலையென்றாக்கி எரித்தனர். அனல் கொள்ளும் கணங்களில் முத்தங்கள் பித்துடன் ஒருவர் வாயை இன்னொன்று கவ்வின. அருந்தின. சுவடிகையின் இரு சிறு முலைகளையும் வாய்களுக்குள் சிறிய இனிப்பை வைத்து உறிபவர்கள் போல உறிந்த போது சுவடிகை வசைகளால் கூவினாள். “வேசைகளே. அய்யோ என்னைக் கொல்கிறீர்கள். அய்யோ மடிகிறேன். என் முலைகள் எங்கே. அய்யோ. என்னை என்ன செய்கிறீர்கள் பூதங்களே. யட்சிகளே என்னை விடுங்களடி” எனக் கூவியார்த்தாள். நிலவை அவளைத் தூக்கி லீலியாவிடம் கொடுத்து சுவடிகையின் அல்குலை உயிராழம் வரை சென்று துழைத்து உறிந்தாள்.
சுவடி நிலநடுக்கம் ஒற்றை முனையில் குவிந்து யோனியால் பெருகுவதைத் தாங்க முடியாமல் லீலியாவின் கழுத்தை கட்டிக் கொண்டு துடித்தாள். நிலவையின் நாக்கில் அவளது யோனியின் மடல்கள் இழுபட்டு விரிந்தன. கனிந்த இளஞ் சிறுவனின் ஆண்குறியென நிலவையின் நாக்கு புழை நுழைந்து கூத்தாடியது. அவளை விளையாட்டுப் பாவையென லீலியாவும் நிலவையும் மாற்றி மாற்றி அல்குல் நக்கினர். லீலியா உறியும் போது உள்ளங் கையளவு நீர்ச்சுனையை உறிஞ்சும் வேங்கையைப் போல வெறியுடன் பருகினாள். நிலவையைக் கட்டிக் கொண்டு அங்கங்கள் துடித்தாள் சுவடிகை. திரும்பத் திரும்ப மின்னல்கள் தாக்கும் ஒற்றை மரமென்றானாள். இருவரும் அவளை முத்தமிட்டார்கள். இரு பெரும் புயல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட வாழை மரமென உலைந்தாள். மதனம் குருதியென உடலெங்கும் எழுந்தாள்.
படியிலேறி நீரகத்தின் மஞ்சத்தில் மூவரும் சரிந்தனர். நிலவை துதியைக் காய்ந்த தீயிலை மலர்களால் நிரப்பினாள். புகையை அள்ளி லீலியாவுக்கும் சுவடிகைக்கும் புகை முத்தம் கொடுத்தாள். உதடுகள் கனலும் தணல்கள் போல எரிந்தன. “கலவியென்பது தேகத்தை அறியாத காலத்தில் மானுட மொழியின்றி மின்னலில் தோன்றிய முதற் தீயைக் கண்ட வியப்புடன் தொடப்பட வேண்டியது” என்றாள் நிலவை. சுவடிகை சிரித்துக் கொண்டே லீலியாவுக்கு மொழிபெயர்த்தாள். “காமமென்பது அழியாத பாலைவனத்தில் பெருகும் மணற் துளிகள்” என்றாள் லீலியா. சுவடிகை அதை நிலவைக்கு மொழிபெயர்த்தாள். “காமமும் கலவியும் இரு வேறு நிலங்களின் தொல்தெய்வங்களின் போரில் சிக்கிக் கொண்ட மானுடியின் அச்சம்” என்றாள் சுவடிகை. அதை லீலியாவுக்குச் சொல்ல லீலியா தொடையில் கைகளை அறைந்து சிரித்தாள்.
“தொல்தெய்வங்களை வெல்லும் மானுடப் போரே விழைவு சுவடிகை. நீ பெண். பெண் வெல்லாத களமென்று எதுவும் இருக்கலாகாது. தெய்வங்களை வெல்லும் விசையென்பது உனக்குள் என்றுமிருப்பது. அதை ஒன்றாகிக் கூராக்கிக் கொள். தெய்வங்களை எதிர் நிற்கும் வல்லமையே பெண்” என்றாள் நிலவை. ஆணையின் குரலில் சீறல் போல ஒலித்த அவளின் சொற்கள் தீயிலை மயக்கில் நின்றெழுந்த சுவடிகையில் ஒலிப்பிழம்பாகத் தோன்றியது. இருபேரதானங்களுக்கிடையில் மெலிந்த பேராறென அவள் தன்னை உணர்ந்தாள். இருவரின் கழுத்தையும் கொல்லும் விசையுடன் கரங்களால் இறுக்கினாள். லீலியாவும் நிலவையும் அவளின் மெலிர் கரத்தில் எழுந்த விசையைக் கண்டு புன்னகை கொண்டனர். “அங்கனமே இளம் பெண்ணே. கொல்லும் கருணையின்மையே பெண் காமம்” என்றாள் நிலவை. அவர்களை இழுத்து முத்தமிட்டாள் சுவடிகை. இருவரது நாக்குகளுடன் மெய்ப்போர் புரிந்தாள். வெல்வேன் வெல்வேன் என எழுந்த நாக்குகள் நிகராற்றல் கொண்டவர்கள் பொருதும் போரெனச் சமநிலை கொண்டது.
இருவரின் மேலும் பாய்ந்து கடிக்கும் வேட்டை விலங்கென அலைந்தாள் சுவடிகை. பெரு மலைகளில் ஊன் தேடி அலையும் தனித்த பசி கொண்ட கூட்டத்தில் விலகிய ஓநாயென. மூவரும் களியாடி முற்றி எழுந்த போது மூவரின் மேனிகளும் ஒரே தழலூற்றின் சுவாலைகள் எனக் கண்டாள் சுவடிகை. மூன்று நோக்குகளும் ஒரே தெய்வத்தில் எழும் ஒற்றை இமையாக்கணம் எனக் கண்டாள். உவகையில் ததும்பிய முனகல்களில் எழுந்தவை ஆர்ப்பரித்தெழும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒன்றேயெனக் கண்டாள். ஒன்றே பெண். ஒன்றில் விளையும் பலதே உடல்கள். ஊனாய் மண்ணிறங்கி ஊனை அறுத்துண்டு ஊனைப் பெருக்கி ஊனைக் காமுற்று ஊனைக் காதலித்து ஊனைப் பெற்றெடுத்து ஊனை வளர்த்துப் பருக்கச் செய்து ஊன் தேய்ந்து ஊன் வற்றி ஊன் உலர்ந்து ஊனுருகி அழிபவள் பெண்.
சதைகளே எத்தனை விம்மல்களில் நீங்கள் சுடருகிறீர்கள். என்னைப் புணரும் தெய்வங்களே எத்தனை அழகில் நீங்கள் பொலிகிறீர்கள். என்னுள் எழும் விசைகளே எத்தனை ஆழங்களில் இத்தனை காலம் துயிலிருந்தீர்கள். மயக்கே. மாயமே. போரே. கலவியே. முத்தமே. முயங்கலே. அணைப்பே. தழுவலே. வேகமே. மெல்லிதே. விசையே. நீங்கலே. படரலே. பற்றலே. படைப்பே. அழிவே என்னை எடுத்து என்னை ஆட்டும் பித்தே உன்னை வெல்வேன் நான். உன்னைக் கொல்வேன் நான். கொன்று என் உயிர்த்தீயில் எரித்துப் பொடிப்பொடியாக்குவேன். சாம்பலை அள்ளி மேனியெங்கும் பூசி பேய்க்களியாடி மலையிலேறி உச்சியில் நின்று ஓங்கிச் சிரித்து உலகெலாம் ஒலிக்க ஒரு முழக்கமாவேன். நான் பெண்.