112: ஒருகணம்
விண்ணென்பது இளங் கருமையின் மாபெரும் வதனமெனத் திரண்டிருந்தது. சாம்பலின் கருமை தலைப்பட்டினத்தின் மீது அகண்ட காளான்களின் மலைக் குவைகளெனக் கவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இளமழையின் தூவல்கள் வெளிநோக்கி நிலைத்திருக்கும் இளங் காதலியின் விழிமயக்கென எண்ண இயலாத தழைவில் விழுந்து கொண்டிருந்தது. முகம் வெண்ணிறமாகி மேனி பொன்மணலென கத்திகளின் அடுக்குத் தோலெனச் சிறகை விரித்துப் பருந்தொன்று மேகத்தில் மெல்லிய காற்று வட்டத்தை உண்டாக்கி அப்பாலிருந்த சூரியனின் துண்டொளியில் மினுங்கிக் கொண்டு இறங்கியது. காற்றில் இன்னொரு காற்றின் அலை நுழைவதைப் போல.
ககனம் தலைப்பட்டினத்தை நோக்கி வர அனுப்பிய இருவிழிகளென பருந்தின் குறுவிழிகள் அகன்றிருந்தன. இரண்டு மகாநோக்குகளைக் கொண்ட முனிவனென பருந்து பட்டினத்தை நோக்கியது. பொற்கால்களில் துடிக்கும் நகங்களால் பட்டினத்தைத் தூக்கிச் செல்ல முயல்வது போலச் சுழன்று வட்ட நூலொன்று வானிலிருந்து கழன்று விழுவது போல பருந்து மிதந்து இறங்கிக் கொண்டிருந்தது. அதன் நோக்கில் ஒருகணம் பட்டினம் உறைந்து உட்சென்றது. அதிகனவில் வாயில்கள் திறந்து கொள்ள ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குள் தாவி நுழைந்து நோக்கி அகலும் விண்ணோனின் விழிகளைப் பருந்து அளியெனக் கொண்டு நோக்கியது.
தலைப்பட்டினத்தின் மானுடர்களில் ஒருதுளியை நீளமான காலக்கோட்டில் ஒன்றென நிறுத்தியது. தெய்வங்கள் நோக்கும் மானுடரெனப் பட்டினம் திறந்து கொண்டது. பருந்தின் அலகுகளில் ஒருதுளி தூவல் சொட்டிச் சிதறி விழத் தொடங்கியது காலம்.
*
“மானுடரைக் காவியத்தில் மெய்யென்று தொடுவதென்பது ஓடுகின்ற புதுப்புனலின் நிழலை நோக்குவது போன்றது” என்றான் இளம் பாணன். யாதினி முகத்தைச் சொடுக்கி அவனது குருத்துக் கரும் வதனத்தை நோக்கினாள். ஒருகணம் இறுகித் தளர்ந்து “பெருங்கவியே மானுடரில் மெய்மை புரவிக் காமத்தைப் போன்றது” என்றாள். இளம் பாணன் விழிகளில் உவகை மின்ன பிறிதொரு வெளியில் நோக்கியிருந்து “காமம் ஆடலின் பின் கைவிடப்பட்ட அம்பலம்” என்றான். முன் விளையாடிக் கொண்டிருந்த மழலைகள் தாளமிடும் மழையின் சிறுமேனிகளென இதழ்கள் நுரைக்கக் கூச்சலிட்டனர். புரவிகள் கனைத்துக் குளிரை உடலில் உதறிச் சுழியிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் பெருங்கருவிழிகளில் மழையின் திரையை நோக்கினாள் யாதினி. இளம் பாணன் தொலைவுக்கு வெளியே மலையின் உச்சியொன்றில் தனிமையில் அமர்ந்திருக்கும் முதியவரிடம் சென்று சேரும் பாணர் குடிப் பைதலென முகம் மலர்ந்திருந்தான். முடிவடையாத கதைகளின் பெருக்கே மானுடம் எனும் பெருங்கனவை ஆக்கி அளித்ததென வழிதோறும் எண்ணிச் சென்றவனென அவனது அகம் பட்டினத்தின் பெருங்களிக்கு வந்து சேர்ந்தது.
*
பொன்னன் அகன்ற தன் இளமார்புகளை விருபாசிகையும் செழியையும் உறிய காம்புகள் மிதந்து மலர்வதை நோக்கியபடி “எத்தனை நுணுகியிருந்தால் உங்கள் நாவுகள் என்னை உளிகளெனச் செதுக்கும்” என்றான். செழியை அவன் காம்பை நாவால் தட்டிக் கொண்டு “சுவைக்கும் நாவுக்குக் கல்லும் இளகும்” என்றாள். விருபாசிகை சிரித்துக் கொண்டே காம்பைக் கடித்துக் கொண்டு “அத்தனை கனிந்திருந்தாலே காமம் பொலியும் சிற்பியே. பல்லாயிரம் விழிகளால் நோக்கப்படும் பலகோடி அண்டங்களில் காமம் ஒவ்வொரு முறையும் புதியதென்றே மலர்கிறது. மலரைத் தொடும் காற்றின் கரமும் உளியே. அதே போல உள்ளிருந்து அவிழ வேண்டுமென எண்ணும் மலரின் கனவும் ஓர் உளியே. இரண்டு முனைகளால் தொடப்பட்டே சிற்பம் முழுமையடைவது போல காமமும் நிறைகிறது” என்றாள். பொன்னன் தலை சாய்ந்து உருகி விழுபவன் போல நின்று கொண்டு “உளியும் கல்லும் தொட்டுக் கொள்ளும் போது பொறியென எழுந்தது காலம். அச்சிறு கணத்தில் அனைத்தும் அனைத்தையும் சென்று கடந்து விடும். தேவை தொடும் உளியும் தொடப்படும் பாறையும்”என்றான்.
முத்தினி அவிழ்ந்த நறுங்கூந்தலை சுற்றி முடிந்து கொண்டு விருபாசிகையின் பிருஷ்டங்களை விரித்து அவள் அல்குலில் தன் ஆண்குறியை நுழைத்தாள். விருபாசிகை சிணுங்கி அவளது நா ஒருமுறை துடித்துப் புரண்ட போது ” கூவலில் சினக்கும் குயில்களே மோகமென்றாவதன் இசை. ஆயிரம் இசைக்கருவிகள் எழுந்து தொடும் ஒற்றை உச்சத்தின் சதைத்துண்டு. மேனிகளில் இரண்டு திரவங்கள் ஊற்றப்பட்டிருக்கின்றன. நான் இரண்டாலும் ஆசீர்வதிக்கப்பட்டவள். ஒருகணம் ஒன்று குவளையாகிக் கொள்ள மற்றையது நிறைந்து கொள்கிறது. மறுகணம் மற்றையது அளிப்பதில் மற்ற ஒன்று முழுமை கொள்கிறது. தேகமென்பது மாபெருங் குவளை” என்றாள் முத்தினி. மஞ்சம் கலைந்து கிடந்து உதறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாசனையும் உதட்டிலிருந்து எழுவதென ஒருவரின் இதழ்களை இன்னொருவர் சுவைத்து மணந்து அறிந்து கொள்ளத் தவித்தனர். நறுமணங்களாலான காற்று அவர்களைத் தழுவிக் கொண்டு காலத்தில் ஊறியது. அப்பொற்கணம் அங்கனமே உறைவதாகவெனத் தூபிகை வாழ்த்துவது போல என எண்ணினான் பொன்னன்.
*
பதும்மை பனித்திரை கசிந்த ஆடியின் முன் நின்று கொண்டு தன்னைத் தான் அறிய முடியாமையின் உவகையில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை அவளே காமுறுபவளென நோக்கினாள். கரிய இருமுலைகளும் மேலுமிரு விழிகளென நோக்குக் கொண்டு விறைத்திருந்தன. துளிக்கணத்தில் இமைகள் இரண்டும் கருநீல வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் சூடி எழுந்து மிதப்பவையென ஆடியமைந்தன. நோக்கில் ஒரு மயக்குக் கொண்டு நோக்கை மறந்து தன் இருப்பில் கரைந்து கொண்டிருந்தாள் பதும்மை. நெடுந்தனிமையில் சிறகடித்து மிதக்கும் வண்ணத்துப் பூச்சியின் அருகை உணர்ந்தவளென. அகம் என்பது ஒற்றைக் காலில் நடக்கும் உயிர் என எண்ணினாள் பதும்மை. மறுகணம் கூந்தலைக் குலைத்துக் கொண்டு பல்லாயிரம் கால்களில் எது எத்திசை நடக்க வேண்டுமென வகுத்துக் கொள்ளாத களிக்குடிகளின் மயக்கு நடை கொண்டதென அகத்தைச் சொல்லிக் கொண்டாள். அவளில் விழையும் சுனைக்குழி ஒருதுளிக்கே நிறைந்து கனிவதைக் கண்டு நகைத்தாள். பற்களில் வெண்மை வெளிச்சமென துலங்கியது. அவளது அறைச் சாளரத்திற்கு வெளியே புலரியின் மல்லிகைகள் நான் நீயென விழுந்து கொண்டிருந்தன மழைக்குள்.
*
அங்கினி தன்னுடைய அறையில் குளித்து முடித்து கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு புன்னகைத்தாள் ஆடற்சித்தரின் பெருந்தோள்களென விரிந்திருந்த மஞ்சத்தில் அமர்ந்து முலைக்காம்புகளில் இனிமையை உணர்ந்தவாறே “பித்தன்” என்றாள். தனிமையில் காதலனை அழைக்கும் பித்தியெனத் தன்னை எண்ணிக் கொண்டு உவகை மாறாமலேயே வேறுகாடாரை எண்ணிக் கொண்டாள். மேனியில் குளிர்ந்த மெய்ப்புல்கள் நாகக் குட்டிகளின் தலைகளென எழுந்து கொண்டன. கால்களை விரித்து உலர்ந்த துணியால் துடைத்துக் கொண்டே பாதங்களின் தண்மையில் மேனியை உணர்ந்து தொடுகையில் மயக்குக் கொண்டு விழிகளை அல்லியின் மடல்களென மூடினாள். ஒரு விழியில் ஆடற் சித்தரும் மறு விழியில் வேறுகாடாரும் பெருந்தேகங்கள் விரிய இரண்டு வேழங்கள் மேலேறி விரிந்துறைந்த வியப்பின் நோக்கெரிய அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். புருவத்தின் இடையில் எப்பொழுதென அறியாமல் இளம் பாணனின் சிரிக்கும் உதடுகள் மட்டும் துடித்துப் பாய்வது காட்சியென்று விரிய அல்குலின் முதல் மயிர்த் தலையில் அவன் நாவு தொட்டதெனத் துடித்தாள். விபரிக்க முடியாத எதுவோ ஒன்று தன் காதலர்கள் இருவரின் சாயலில் அவனில் ததும்புகிறதென எண்ணினாள். ஒரு இளஞ் சிரிப்பெழ கூரையை நோக்கிச் சரிந்து படுத்துக் கொண்டு பச்சைத் தென்னோலைகளின் மேல் இளமழை தொடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். இரு வேழங்களுக்கிடையில் ஒரு பொன்வண்டின் மேல் ஊர்ந்து வந்த இளம் பாணனின் இடத் தொடையில் பதும்மை வீற்றிருப்பதைக் கண்டு அவளது மூடிய விழிகளும் வதனமும் முலைகளும் சிரித்துக் கொண்டன. அறைக்குள் விம்மிய மெல்லிய வெம்மை தேகத்திலிருந்து வீசுகிறதென எண்ணியபடி காலத்தை வியந்து கொண்டு அதன் அழைப்புகள் ஒவ்வொன்றிலும் மகிழ்ந்து துள்ளும் இளஞ்செடியென தன்னைத் தான் அசையாது நோக்கியிருந்தாள்.
*
வேறுகாடார் திண்ணையில் சாய்ந்து கொண்டு எவரும் அறியாமல் இருதியாளின் விழிகளை உற்றிருந்தார். அவரில் எழுந்த எதுவோ ஒன்று உதட்டில் சுடர்வதை நோக்கிய இருதியாள் பல்லாயிரம் வயதுகள் இளையவள் போல நாணங் கொண்டு புன்னகைத்தாள். “மூப்பதில் பெண்ணின் புன்னகை ஓராயிரம் ஒளியலைகளின் பாடல்” என்றார் வேறுகாடார். இருதியாள் செவியில் தழைந்த வெண்கூந்தலின் இழையொன்றை செவியில் கொழுவி பின்னால் இழுத்தபடி “எவ்வயதிலும் பெண் அடையும் நாணம் மூப்பதில்லை காடாரே. பெண் ஒவ்வொரு பருவத்திலும் நாணத்தை மேலும் மெல்லிய அணியென ஆக்கிச் சூடுவாள். அதன் வழி தன் அகத்தை நாவால் தொட்டுத் துழாவிக் கொண்டிருப்பதைப் போல இளமைக்கு மீண்டு கொண்டிருப்பாள். பெண் மூப்பதேயில்லை” என்றாள். “பெண் மூப்படைய விழைவதில்லை” எனச் சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டு அம்மாயச் சிரிப்புக்குள் எப்போதைக்குமெனக் கரந்து வைத்திருக்கும் நுண்பார்வையால் இருதியாளின் நோக்குக்குள் தொட்டுக் கொண்டிருந்தார் வேறுகாடார். அது மின்னற் கயிற்றில் அறுபடாத மின்னென நிகழ்ந்து கொண்டேயிருக்கும் காலச்சுழியென எண்ணினாள் இருதியாள். இளமழைக்குச் சேர்ந்த நீரில் உதிர்ந்து குலையழகுடன் கிடந்த மலர்களை காற்று ஊதி ஊதி எழுப்பியது. அவள் காலங்களை மறந்து கடலின் கரையில் உப்பில் உப்பென ஒளிரும் வெண்மையிலிருந்து ஒரு சிட்டிகை புன்னகையை அணிந்து கொண்டாள். அவளுக்கு அப்புன்னகை அருமலர்களின் நறுஞ்சாந்தைப் பூசுவதை நோக்கிக் கொண்டேயிருந்தார் வேறுகாடார். வசுதா எனும் வெண்நாகம் அவர் குழலெனச் சுழன்று தோள்களில் அணைந்து மார்பை எட்டித் தொட்டுத் தழுவிக் கொண்டிருந்தது. மானுடர் அறியாத காலத்தின் விளையாட்டென.
*
“பாடப்படாத வரலாற்றின் பாடல்களுக்குள் வாழும் எளிய மானுடரின் தெய்வமென மண் வந்தோன் நீலன். அழகு மானுடரில் கூடுவது தனக்கு அப்பால் விசை கொண்டிருக்கும் ஊழிடம் பொருதும் மானுடர்களில் எழுவது மட்டுமே. பிறிதனைத்தும் சொல்லுக்கு அகப்படும் எளிய அழகுகள். நீலனில் எழுந்திட்டது தன்னை அழித்தெழும் ஒளிச்சுடரின் பேரழகு. அவன் முகத்தில் ஒட்டியிருக்கும் துயர்கள் மானுடர் அவனுக்குப் பதிலளித்த அளிகள். மானுடரிற்கென எவர் எழுந்து வாளைச் சுழற்றுகிறாரோ அவர் சென்று சேர வேண்டிய நாடகப் பாத்திரமொன்றின் தோழனாய் இருக்கிறேன்” என எண்ணி இளநகை கொண்டான் தமிழ்ச் செல்வன். லாகர்ணன் சுடுபாலை மூங்கில் குவளையில் நுரைப்புகை எழும் கோலத்தில் கொணர்ந்து கொடுத்தான். நீலன் இடைநாழியால் சென்று மறைகையில் அவன் நிழல் ஒருகணம் தயங்கிப் பின் நின்று அவனிடமிருந்து விலகியிருந்து அவனைத் தொடர்கிறது என நோக்கினான் தமிழ்ச் செல்வன். இளமழையின் நீர்த்தூவிகள் சுடுபாலில் வீழ்ந்து கொண்டிருந்தன. வெம்மையில் கலக்கும் நீர்மையின் இருப்பை உணர்ந்து கொண்டு சுடுபாலை அருந்தினான். லாகர்ணன் அவனது முகத்தை எப்பொழுதெல்லாம் நோக்கும் வாய்ப்புக் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் நோக்கினான். உளம் விழையும் பெண்ணை அவள் சோதரரின் முன் நோக்குபவனென நாணமும் அச்சமும் கொண்டான். ஆண் கூர்ந்து நுணுகிக் காலங்களை ஆழ்த்தும் புன்னகைய உதடுகளில் ஏந்துகையில் அவர்கள் அடையும் பேரழகே ஆண்மையென்றாவது என எண்ணிக் கொண்டான் லாகர்ணன். வாயிற் கோபுரம் இளமழை ஒழுகி குளித்து எழும் நீரருவிப் பாறைகளென கருமை கூடிக் கொண்டு பொலிந்தது. அரண்மனையைச் சுற்றிலும் நூற்றுவர் படை நிலை கொண்டமைந்தது.
*
மதுச்சாலையின் நிலவறைக்கான இடைச் சுரங்கப் பாதையில் இளமழையில் நனைந்த காட்டுக்கோழியென உடல் விதிர்த்து நின்ற அரூபியின் அல்குலில் வாயை நுழைத்து மதுரசம் அருந்திக் கொண்டிருந்தான் இராப்பிரியன். இளமையில் காமம் உவகையின் தீர்த்தம் என எண்ணியெண்ணி அல்குலை நாவால் தொட்டான். இளையவனின் காமத்தில் உந்தும் ஒருதுளி அறியாமையின் வேட்கை போருக்குச் சென்று பெருங்களமாடி மாவீரெனனப் பெயர் கேட்டுச் சொல்லெடுக்க விழையும் சிறியவனின் முதிரா ஞானம் கொண்டதென எண்ணினாள் அரூபி. மானுடர் ஒவ்வொரு பருவங்களிலும் ஒவ்வொரு நாவைச் சூடிக் கொள்கிறார்கள். திகைப்பில் விரியும் இளமையின் நா. தொட்டு அறிந்து துழாவ விரும்பும் அறிந்ததின் நா. தொட்டும் தொடாமலும் தொடப்படக் காத்திருக்கும் முதுமையின் நா. உவக்கையில் இனிநா. தவிக்கையில் துடிநா. தாபத்தில் உலர்நா. துறவில் வற்றுநா. துயரில் கசப்புநா என எத்தனை நாவுகள் கொண்டெழுகிறது உடல். பிரிந்திருக்கையில் நாவென்பது உலர் பாலையில் தேரை. கூடுகையில் மதுவில் வெறியாட்டுக் கொண்ட மந்தி. அரூபி அவனை நோக்கிய விழிகளை எடுக்காமல் முள்ளில் குற்றிய மீனென அவனை உறுத்திருந்தாள். நிலவறை இடைச்சுரங்கப் பாதையில் குளிர்காற்று தீப்பந்தங்களை சிலிர்த்துச் சிலிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. இளையவனின் நரம்பில் முத்தங்களால் மின்னல்களென.
மதுச்சாலையின் திண்ணை மரக்குற்றிகளால் நிறைக்கப்பட்டது போல் குடிகளால் நிரம்பியிருந்தது. புலரியில் அருந்திய மதுவும் கள்ளும் துயிலுக்குள் துயிலென அவர்களை ஆழ்த்தியிருந்தது. கீர்த்த மந்திரர் முதிய விறலியொருத்தியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு அவள் தூங்கு முலைகளை நீர்க் கோளத்தைப் பற்றுவதைப் போலப் பற்றியிருந்தார். எருவீரன் கால்களைப் பரத்திக் கொண்டு பிலவில் உறுமும் சிம்மத்தின் நீளொலியெனக் குறட்டை கொண்டு ஆழ்துயிலில் கிடந்தான். மதுச்சாலைத் திண்ணை இன்மையிலிருந்து இருப்பிற்குள் நுழையும் தோரண வாயிலில் செல்லவேண்டிய திசையொழிந்து துயிலில் அழிபவர்களின் மேடை போல அயர்ந்திருந்தது.
*
மஞ்சத்தறையில் நனைந்த ஆடைகளை உதறிக் கொண்டும் புதிய ஆடைகளை அணிந்து கொண்டும் சுவடிகையும் நிலவையும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். நீலன் எப்படி நேரடியாகத் தன்னிடம் அப்படிக் கேட்க முடியும். ஒருகணம் நான் அதிர்ந்து நீருக்குள் தவறி வீழ்ந்து ஆழங்களுக்குள் சென்று விழிமூடி மூர்ச்சையாகி விட்டேன் என்றாள் சுவடிகை. அவளது இதயம் நடுங்குவது மூச்சில் எறித்தது. நிலவை புன்முறுவலுடன் அவளை நோக்கிய பின் “நீலரது நோக்குகளும் சொற்களும் நேரடியானவை சுவடி. அவரால் மந்தணமாக எதையும் சொல்லில் அடுக்க முடியாது. நான் தீராது வியக்கும் இயல்பு அது. இத்தனை பெரிய போர்வீரர். அரசர். குடிகளால் தெய்வமென்று வணங்கப்படுபவர். அன்னையிடம் பொய்யுரைக்க மறுக்கும் மழலையைப் போல அத்தனை இனிமையுடன் எப்படி அகத்தைச் சொல்ல முடிகிறதென. அவர் சொல்லாக்கி விட்டார். நானோ மற்றையவர்களோ கரவு வழிகளுக்காகக் காத்திருந்தோம். விழைவதைச் சொல்லென ஆக்கி வாள்முனையில் ஒளிதொடுவது போலச் சொல்வது எளிய பேதமையாளர்களாலேயே இயலும். அவருள் நான் காதல் கொண்டிருக்கும் நுண்ணிடம் அதுவே. பேதையென்றானவனை எப்பெண்ணாவது வெறுக்க ஒண்ணுமா” என்றாள். சுவடிகை பாய்ந்து பாய்ந்து மஞ்சத்தறையெங்கும் நடந்து கொண்டிருந்தாள். தன் மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள இயலாமல் அதைச் செயலொன்றாக்குவதன் மூலம் கடந்து விட எண்ணுபவள் போல அவள் அனைத்தையும் விரைவுடன் புரிந்தாள். மார்பின் வெள்ளிப் பதக்கத்தை ஆடியைக் கடக்கும் ஒவ்வொரு கணமும் நோக்கினாள். அது அவளுடலில் ஒரு மாயச்சித்திரமென படிந்து கொண்டிருப்பதை நோக்கிச் சிரித்தாள். பித்துற்ற வண்டெனச் சுழன்று பறந்தாள். குடிகளுக்கிடையில் இறங்கி கேளிக்கையை நடிக்கும் கூத்தியென அவளது முகம் நொடிக்கு நூறு பாவனைகளைப் பயின்று கலைத்துக் கொண்டிருந்தது. அவளால் நிகழ்ந்தவற்றைப் பொருளாக்கிக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் வைரத்தில் ஒளிப்பட்டைகளென அவளது மகிழ்ச்சி வீசிக் கொண்டிருந்ததை அங்கிருந்த அனைவரும் அறிந்தனர்.
லீலியா ஆடையைக் களைந்து வெறுமார்பு பூங்குலையென மலர்ந்திருக்க தீயிலை புகைத்துக் கொண்டு இருவரின் உரையாடலையும் நோக்கிக் கொண்டிருந்தாள். உசை துயிலில் இருப்பவளென விழிமூடி ஓசையற்ற காலத்தின் சொல்லில் மூழ்கியிருந்தாள். செலினி அயர் துயலில் பூனைக் குட்டியென நாச்சுழற்றி உருண்டு படுத்தாள்.
மஞ்சத்தறையில் சாம்பற் குளிர் ஒளிவண்ணங்களைக் குழைத்துப் பூசியது. கழற்றி வைக்கப்பட்டிருந்த அருமணி நகைகளும் பொன்னும் தங்களின் வேரொளியைச் சுமந்து மினுங்கிக் கொண்டிருந்தன. விண்மீன் வீதியில் அமைந்ததென மயக்குக் கொண்ட மஞ்சத்தறையின் கூச்சல் அகலாது அங்கனமே நிலைக்க வேண்டுமென எண்ணினாள் தானகி. கதவுக்கு அப்பால் நின்றிருந்த பெய்யினி இடைநாழியால் நடந்த காற்றின் ஆடைத்தொடுதல் ஒவ்வொன்றுக்கும் மெய்ப்புல்கள் எழுவதை நோக்கிக் கொண்டிருந்தாள்.
*
பெருமன்றில் ஓலைச்சுவடிகள் எழுத்தாணியில் தொட்டு அளையுமொலி வண்டுகளின் ரீங்காரமென ஒலித்துக் கொண்டிருக்க சாளரத்தால் வைர ஊசிகளென விழுந்து கொண்டிருந்த இளமழையை நோக்கிய துடியனின் கால்களுக்குள் சர்ப்பம் நெளிவதென ஒயிலை சுருண்டும் எழுந்தும் அவன் ஆண்குறியை வாயில் நுழைத்து ஈரக்குழைசேற்றில் நுழைப்பவளென குளிர்வாயால் உறிந்து கொண்டிருந்தாள். மன்றில் துடியன் சுவடிகள் வைக்கும் தனியறையில் சுவடிக்கட்டுகளின் மேல் அமர்ந்திருந்தான். ஒயிலையின் பிஞ்சுமா முலைகள் ஒளிகொண்டு வீசின. அவள் நாவும் இதழ்களும் இனிமையை இத்தனை தொலைவுகள் அளிக்குமென எண்ணியிராத துடியன் தீயிலையைப் பற்றிப் புகையை ஊதினான். ஒயிலை கலனில் செல்லும் காதலனிடம் துடுப்பைப் பற்றிக் கொண்டே சரசம் புரிபவளென அவனை நோக்கிக் கொண்டே வாய்க்குள் அவனது ஆண்குறியைத் தழைத்து எடுத்தாள். கடலில் மூங்கில் கழியென என எண்ணினாள் ஒயிலை. அவன் காதலில் மிஞ்சியிருக்கும் முகம் தனதென அவள் எண்ணிய போது முகத்தில் குருதி பரவி வீங்கியெரியும் சுடர் போல மினுங்குவதை தன் அகத்தின் ஆடியில் அவளே நோக்கினாள். அப்பாவையை அவள் அவளின் பேருடல் என எண்ணினாள். காதலிக்கப்படுகையில் பெண் அடையும் அழகே ஒவ்வொரு பெண்ணும் அடைய விழையும் பேரழகு என எண்ணிக் கொண்டாள். துடியன் ஒருகணம் திருதிகாவின் இதழ்களை எண்ணினான். அவ்விதழ்கள் ஒயிலையை விட எத்தனை எடை இனிமை கூடியதென கற்பனை ஆற்றில் நீந்தத் தொடங்கினான். எண்ண எண்ணக் குறி விறைத்தது. ஒயிலை அவன் குறியின் முனையை நாவால் மெழுகுபவளெனத் தொட்டுச் சுழற்றினாள். படகு உடைந்து முழுவெள்ளமும் மூழ்கடித்த பின்னர் தானொரு மீனென அறிந்தவன் போல துடியன் விம்மிக் கொண்டு விந்தைத் தெறித்தான்.
*
திருதிகாவின் வலக்கை அவளது நெற்றி மேல் படிந்திருக்க எழ முடியாது பாறிய பெருமரம் போலக் கிடந்த உடலையும் எழு எழுவென அதை உலைக்கும் அலைமா கடலென விரட்டும் மஞ்சத்தையும் எண்ணி தலையில் இரண்டு புறமும் கூர்கொண்ட முள்ளொன்று குற்றிக் கொண்டிருப்பதை நோக்கிச் சினந்து கொண்டிருந்தாள். இளமழையை வெறுத்தாள். நீச மழையென்று சபித்தாள். மேனியில் வெம்மை கானலாகிக் கசிந்து எழுவதை மூடிய இரு கொதியுலை மடல்களுக்குள்ளும் அமர்ந்திருந்து நோக்கினாள். அவளது அகம் ஆயிரமாயிரம் கறுத்த மஞ்சட் புள்ளிகள் கொண்ட அட்டைகளெனச் சுருண்டு கிடந்தது. எதையும் தொட்டு எழுப்ப விழையாது இக்காலம் ஒழிந்து போய் விடும் என விழவிருட்டில் தொலைந்த சிறுமியைப் போல எண்ணிக் கொண்டிருந்தாள். அவளது மார்புகள் விம்மி விம்மிக் களைத்து மழையில் நனைந்த இரண்டு மணல் குன்றுகள் போல அசையாது கிடந்தன. ஒருகாலை மறுகால் பின்னிக் கொண்டு ஒன்றை ஒன்று உரசிச் சலித்தன. அனலில் வீழ்ந்த தளிரின் கருகுவாசனை கொண்டிருந்தது அவளின் தேகமென எண்ணினாள். ஒருகணம் கூட சிற்பனை எண்ணக் கூடாதென்று பல்லாயிரம் முறை உச்சாடமெனச் சொல்லிச் சொல்லி அக்கூற்றில் ஒட்டிய சிற்பனின் பெயரை தானே அறியாத கரவில் சொல்லிக் கொண்டிருந்தாள். காதல் போல அழிவு பெண்ணுக்குப் பிறிதில்லை என எண்ணியவள் அச்சொல்லிலிருந்து பிறிதொரு காதலைக் குறித்த கூற்றுக்கு ஊர்ந்தாள். பழங்கால ஓலைச் சுவடிகளில் ஊரும் வெண்புழு நுனிக் கறையானென.
*
சிற்பன் இமைகளை விழித்துக் காய்ச்சல் குறைந்திருந்த மேனியைப் பழுது பார்ப்பவன் போலத் தொட்டு நோக்கினான். மேனியின் அனல் அடங்கியிருந்தது. இளமழையின் தண்மை ஒருமூச்சென அவனில் தொட்டு நுழைந்த போது திருதிகாவை எண்ணினான். அவளது நினைவை ஒழிய எண்ணிக் களியிரவில் அவன் ஆடிய மா கரும் மேனிகளை நினைவு கூர்ந்தான். தொடத் தொட நழுவும் முலைகள். காலிடை கால் அழுத்திய தொடைகள். மார்புகளை உறிஞ்சிய நாவுகள். அவன் குறியை எத்தனை வாய்கள் குடித்தன என நினைவில் எழாமை கண்டு திகைத்தான். அத்தனை வாய்களா என மலைத்தான். நூறு நூறு வாய்களால் புணரப்பட்ட குறி வீங்கியிருந்தது. குறியைத் தொட்ட போது மழையில் வளர்க்கப்பட்டு மூளாது எரிந்து கொண்டிருக்கும் வேள்விக் குண்டமென எண்ணினான். தகித்துக் கொண்டிருந்த குறியின் சூட்டில் அவன் காமத்தை நினைவுகளால் பெருக்கிக் கொண்டான். சத்தகனின் தேரில் நிறைகொள்ளாது ததும்பும் உடல்களுக்கிடையில் அவனை அவனே கண்டான். அவனது இடையில் ஒருத்தி கடித்தாள். கால் விரல்களைத் தேன் துண்டுகளென நக்கிய இளையவள்களை நோக்கினான். அவ்விரல்களே போதுமென எண்ணிக் கொண்டவர்கள் போல மெய்யை மறந்து தன் விரலைத் தானே உறிஞ்சி இன்புறும் குழவியென மூழ்கியதை நோக்கினான். அவனில் தொட்டுலாவிய முலைகளை அதன் காம்புகளின் தொடுகைகளை அவனது மேனி நினைவு கொள்ளும் எல்லைக்கும் அப்பாலும் அடைந்து அடைந்து திகட்டிக் கொண்டது. அவை சதையில் முட்டுறும் குமிழ்கள் என எண்ணிக் கொண்டான்.
வண்ணங்களால் பொலிவு கொண்ட மேனிகள். விழைவுகளால் உருக்கொண்ட விழிகள். சிணுங்கல்களும் கூவல்களும் முனகல்களும் கேலிகளும் கரவுக் குரல்களும் செவி கடிக்கும் இதழ்களும் பற்களும் எச்சிலும் எச்சிலில் நனைந்து வியர்வையும் குழைந்து மேனி சில நாழிகைகள் எங்கென அறியாது பெய்த மதுமழையிலும் கள்ளின் சாரலிலும் நனைந்து கிடந்தமையையும் அவன் நினைவுகள் கிளர்த்தி வந்து காட்டின. நோக்குக. இது நீ. நீ எண்ணி விழைந்த மா காமம். இதுவே ஆணுடல் எப்பொழுதும் விழையும் பொழுது. இதை நீ அடைந்தாய். பார். இதையும் நீ அடைந்தாய். நீ அடையாத எதுவும் களியில் மிச்சமிருக்கவில்லை. சிறுவிரல்கள் முதல் வில்விரல்கள் வரை உன்னைத் தொட்டன. குறுமுலைகள் உன் வாயில் கனிகளென வைக்கப்பட்டன. பெருமுலைகளில் நீ துயின்றாய். நூறு நூறு வாய்களால் சுவைக்கப்பட்டாய். அமுதம் அளிக்கப்பட்ட அசுரர் குடியென உன்னை அவர்கள் அருந்தினார்கள். அருந்துவதால் அடையும் விடாயை அடைந்தார்கள். உன் குறி எத்தனை முறை விந்தைக் கக்கியது என அறிவாயா. உமிழ்ந்து உமிழ்ந்து நஞ்சை ஒழிந்து அலறிய நாகம் போரை எதிர்கொண்டது போல நீ களியாடினாய். எஞ்சுவது என்ன. நோக்குக. வெறியாட்டு நீங்கிய வேலென் குருதிச்சோற்றின் வாய் மணத்தை உமிழ்வது போல உன் தேகம் எதைத் தீண்டிக் கொண்டிருக்கிறது என்றது அகம். மானுடர் நெறிகளை மீறத் தொடங்கினால் முடிவேயில்லாத சுழலில் கரையே இல்லாத கடலில் என்றைக்குமென அலைக்கழித்துச் செல்லப்படும் மரச்சிம்பென எண்ணினான் சிற்பன். மறுகணம் அளிக்கப்பட்டவை அனைத்தும் மீறப்படுகையிலேயே கூர்மை கொண்டு திரும்பி வருகின்றன. ஆக்கப்பட்டவை அனைத்தும் குலைகையிலேயே ஆக்கத்தை அறிந்து கொள்கின்றன என எண்ணினான்.
*
விண்யாழி தலைக்கு மேல் பறந்த நாரைகளை நோக்கினாள். கூர்ந்த அலகுகளில் காலம் தவளைகளெனத் தொங்குகின்றன என எண்ணிச் சிரித்தாள். தன் கவசங்களைக் கழற்றி உறை வாளை அருகு வைத்த பின்னர் வனவிளிம்பில் சில்லிட்டு ஓடிய ஆற்றில் குதித்தாள். நீரலைகள் அவளை ஈரவிரல்களால் நீவின. மேனியில் ஆற்றின் நீர் இளஞ் சூட்டுடன் படர்வதை எண்ணி அடிவயிற்றில் எரியும் அனல் கொழுந்தொன்று இனியதென விரிவதை நோக்கியிருந்தாள். ஆற்றின் தீரத்தில் கேட்ட பேச்சொலிகளை நோக்கிச் செவியைக் கூர்ந்தாள். கொற்றனும் ஓசையிலானும் நிரதையும் திருதையும் சொல்லாடிக் கொண்டு தீயிலை புகைத்தபடி நடந்து வந்தனர். விண்யாழியைக் கண்ட நிரதை கையைத் தூக்கி இதோ வருகிறேன் எனச் சைகை காட்டினாள். விண்யாழி புன்னகைத்துக் கொண்டு கூந்தல் மிதந்து விரிவதால் தலை பிரிந்து இளகுவது போலாவதை நோக்கி உடலுக்கு ஓய்வு அவசியம் என எண்ணினாள். ஓய்வு அளிக்கப்பட்ட உடல் பயிற்சி சாலையில் எண்ணையிடப்பட்ட படைக்கலம் என எண்ணித் தனக்குள் எழும் ஒப்புமைகள் நாள்தோறும் விரிவதைக் கண்டு வியந்து கொண்டவள் போல விழியென்னும் இரு துள்ளு கயல்களை நீருக்கு அளித்தாள்.
நிரதை ஆற்றின் கரையின் வண்டல் மணலில் கால்களால் உழுது சேற்றை ஆற்றுனுள் எற்றினாள். விண்யாழி சிறு இலைப்படகென மிதந்து கொண்டிருந்ததை நோக்கியவள். தன் ஆடைகளை முழுதகற்றி குளிருடல் ஒன்றை மோகிப்பவளென ஆற்றினுள் பாய்ந்தாள். திருதை கொற்றனின் தோளில் கரமணைத்து ஆற்றின் முன்னே அவனை நிறுத்திச் சொல்லாடிக் கொண்டே அவன் மார்பில் ஓங்கித் தள்ளி ஆற்றில் விழுத்தினாள். அவன் வயிற்றை வெளிக்குக் காட்டி தலைகீழாய்ச் சரியும் குட்டி முதலையென வாய்விரித்து கைகளை ஆட்டியபடி நீருள் அமிழ்ந்தான். ஓசையிலான் அவளது பிடிக்கு எட்டாது ஓடி விலக்குக் காட்டினான். மற்போருக்கு அழைப்பவள் போல உடலை ஒருக்கிக் கொண்டு வா என அவனை அழைத்தாள். அவன் மாட்டேன் என்பது போலச் சொல்ல திரும்பி ஆற்றில் விழுந்த கொற்றனை நோக்கிச் சிரித்துக் கொண்டாள். பின்னிருந்து ஒற்றைச் சொடுக்கில் ஆகாயத்திற்கெனத் தூக்கி ஒருகணத்தில் அவளை பரிசைத் தோளனுக்கு அளிக்கும் களியுடன் கொற்றனை நோக்கி வீசினான் ஓசையிலான். அவள் வசவுகளைக் கூவிக் கொண்டே ஆற்றில் விழுந்தாள். நால்வரும் நகைத்துக் கொள்ள எழுந்து சிணுங்கி அழுபவள் போல முகத்தை வைத்துக் கொண்டாள். ஓசையிலான் அதை ஒரு நடிப்புக் கணமென உய்த்து அமைதியாக அவளை நோக்கினான். பெண்ணை அறியாத கொற்றன் அவளை நெருங்கித் தோள் தொட்ட போது திரும்பி அத்தனை சினமும் கொண்டு கொற்றனின் மார்பிலும் கழுத்திலும் இளமுத்துப் பற்கள் சிறுமுட் கத்திகளென ஆகியது போலக் கடித்தாள். கொற்றன் மெய்யான வலியில் துடிதுடிக்க நிரதை விரைந்து நீந்தி அவனை மீட்டாள். “பாதகி. அவனைக் கொன்று விடாதே” எனக் கூவினாள்.
விண்யாழி சிரித்துக் கொண்டு திருதையின் அருகணைந்து அவளை தோளிலிட்டு “என் செல்லக் கனிக்கு என்னவாகியது. என் பட்டு மல்லியை யார் கசக்கினார்” என்றாள். திருதை விரல்களை நீட்டிக் கொற்றனைக் காட்டினாள். கொற்றனை நோக்கிப் புன்னகைத்த விண்யாழி “தோழரே. இவள் எங்கள் குடிச் செல்வம். இவளை ஏன் கசக்கினீர்” என்று சொல்லிக் கண்சிமிட்டினாள். ஓசையிலான் பாறையொன்று தடம் புரண்டு வீழ்வது போல ஆற்றினுள் குதித்து அலைகளைக் குழப்பினான். அக்காட்சி அங்கனமே கலைந்து கொண்டும் உருமாறிக் கொண்டும் அலையலையானது. அப்பால் ஒரு மஞ்சைக் கூட்டம் அகவிக் குலவுமோசை எழுந்தது. ஒவ்வொரு அலகிலும் ஒரு பாடலை ஏந்தியபடி துடிக்கும் நாவுகளே வாழ்க்கை என எண்ணினாள் நிரதை. கொற்றனின் கரங்கள் நிரதையின் இடையின் பின் நீருள் மூழ்கியிருக்க அவன் குறி விறைப்புக் கொண்டு அவள் பிருஷ்டத்தில் தொட்டது. எத்தனை பருவங்கள் ஒழித்து வைத்தாலும் காமம் ஓலைப்பெட்டியில் பாம்பாட்டிகள் வளர்க்கும் நாகம். மூடுபெட்டி திறக்கும் பொழுது தலை உயர்ந்தே ஆகுவது அதன் இயற்கை என எண்ணினான் கொற்றன்.
ஓசையிலான் விண்யாழியை ஒருகணம் நோக்கிய போது அவன் ஆண்குறி முனையில் மெல்லிய நடுக்கு உதிர்ந்து நீரடியில் அதிர்வதைக் கண்டு வியந்தான். அவளில் எழுந்திருந்த ஆணின் பாவனைகளும் படைக்கலம் ஏந்திய உடலின் திமிர்வும் அவனை ஈர்த்ததை நோக்கினான். ஆணென்பதும் பெண்ணென்பதும் பாவனைகளால் அறியப்படுவதா. இரண்டும் தன்மைகளால் ஆக்கப்படும் பண்டங்களா. மேனியின் குறிகள் எதன் பொருட்டு அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு வசியத்தை ஊற்றியது மானுடச் சொற்களல்லவா. எளிய பொறிகள். குறியென்றும் முலையென்றும் பிருஷ்டமென்றும் விழிகளென்றும் இடைகளென்றும் கழுத்துகளென்றும் கூந்தலென்றும் குழலென்றும் ஆகியிருப்பது எதன் சுட்டு விரல்கள். மேனி ஆக்கப்பட்டது எதன் பொருட்டு. அதற்கேன் காமம் அளிக்கப்பட்டிருக்கிறது. குட்டியீன என மட்டும் எண்ணிக் கொண்டால் காமம் எனும் மாகற்பனை எதனால் இத்தனை வினோதமானதாக எண்ணப்படுகிறது. உடல்கள் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்கையில் பிறக்கும் நடுக்கும் இன்பமும் ஏன் இத்தனை பித்துக் கொண்டிருக்கிறது. நோக்கிலேயே ஏன் இத்தனை காமம். காமமென்பது அறியாச் சுனையில் விழிமூடியிருக்கும் இளமானின் உளமயக்கு என எண்ணிக் கொண்டான் ஓசையிலான்.
திருதை விண்யாழியின் கரத்தைத் தொட்டு நோக்கி அதன் உறுதியைக் கண்டு உவகை கொண்டு “யாழி. உன்னைப் போலவே எனக்கும் படைக்கலக் கரங்கள் வேண்டும். இந்த ஆடவரைக் கொன்றொழிக்க எனக்கு அது உதவும்” என்றாள். சிறுமி போல மிழற்று குரலில் குழைந்தவளை அணைத்துக் கொண்டு “என் தாகக் குளமே. உன்னை வெல்லும் ஆண் பிறக்கப் போவதேயில்லை. உன்னுடைய சொந்தப் படைக்கலத்தை நீயே ஆக்கிக் கொள். குருதி குடிக்கும் படைக்கலங்கள் ஏந்தியிருக்கையில் வீரமென்றும் குருதி குடித்த இரவுகளில் துர்சொப்பனமென்றும் தொடர்பவை. அவை மானுடக் கரங்களுக்கு அளிப்பவை தீராத நடுக்கையே” என்றாள். “காப்பது கொலையல்ல யாழி” என்றாள் திருதை. “அவ்வாறும் சொல்லிக் கொள்ளலாம். இவை நுணுகி நுணுகி உடலை அரிக்கும் ஆயிரம் கேள்விகளாலான நுண்கிருமிகள் என் கண்கருவிழியே. தொடும் வரை பெருந்தெய்வமென்றும் தொட்ட பின்னர் கொடுந்தெய்வமென்றும் அறியப்படுவது. பார்ப்பவருக்கு காவலென்றும் எடுப்பவருக்கு நோயெனவும் தோன்றுவது. உன்னை நீ குருதியில் ஆழ்த்திக் கொள்ள அனுமதியேன்” என்றாள் விண்யாழி. அவளது குரலில் ஒருகணம் எழுந்த அன்னைக் குரலைக் கேட்டவள் அமைதியானாள்.
ஆற்றின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றென அவர்களைத் தழுவியது. நீரில் துடித்த மீன்கூட்டங்கள் ஒவ்வொருவராய் மொய்க்கத் தொடங்கின. நீரின் வாய்களென எண்ணினான் ஓசையிலான். நீரின் கரங்களென மெய்ப்புக் கொண்டான் கொற்றன். நீரின் குறிகளெனப் பகடி சொன்னாள் நிரதை. நீரின் படைக்கலங்கள் என்றாள் திருதை. நீரின் குழவிகள் என எண்ணினாள் விண்யாழி. அவை ஒவ்வொன்றும் ஓராயிரம் முத்தங்களுடன் கரவறை நுழைந்த காதலர்களென அவர்களை முத்தமிட்டு மோதிச் சுழித்தன.