மாயப்பாறை : மதார் கவிதைகள்
அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென வீசக் கூடியவை.
அவரின் கவிதைகளில் ஒன்று,
“உன்னைத் திருமணம் செய்து
கூட்டிப் போவது
தாயின் கருவறையிலிருந்து
வெளிவந்த உன்னை
தோளில் தூக்கிப் போட்டு
போவது போலத்தான்.
நீ அழுது தூங்கி
விழிக்கும்போது
நான் உனக்குத் தாயாகியிருப்பேன்.
தந்தையுமாகியிருப்பேன்
தொட்டிலில் உன்னைப் போட்டு ஆட்டுவேன்
பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்”
TAGS மதார்