அல் ஆடும் ஊசல்

இருளுக்கும் இருளுக்கும் இடையில்
ஓர் ஊசலில்
அமர்ந்திருக்கிறது காகம்
ஒரு வெளவாலைப் போல.
ஒளிக்கும் ஒளிக்கும் இடையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியாக
மிதக்க விரும்புவேன்.
இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் நுண்கரங்களில்
நான் அருளை அள்ளும் ஒரு காகம்.
எனது ஊசல்
அங்கனம் அமைவது
நான் எனது செட்டையுமல்ல
காலமும் அல்ல.
ஊசலின் நூற்கோடு காற்றில் எறியும் விண்மீன்.