கல்விரல் – கடிதம்

கல்விரல் – கடிதம்

வணக்கம் கிரி,

வெண்முரசு நாவல் தொகுதி முடிந்த பின் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர தவித்த வேளையில் கிணற்று கட்டில் ஏறி குதிப்பதா வேண்டாமா என்று மனம் தத்தளிப்பதுபோல கல்விரல் நாவலை வாசிக்க எடுப்பதும் பின்னர் வாசிக்காமல் வைப்பதுமாக இரு நாட்கள் ஓடிய பின், இன்று வாசிக்க ஆரம்பிப்போம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தேன். முதலாம் அத்தியாயம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே நேர்தியாக நுனி விரல் நீரை கிழித்து உள்ளிறிங்குவது போல மூழ்கிய நான் நாவல் முடிவதுவரை உள்ளேயே மூழ்கி மீனை போல உள்ளேயே வாழ்ந்து எழுந்தேன். நாவலின் மொழியும் கதை ஓட்டமும் அவ்வளவு அருமை. ஒரு இடத்திலும் மூச்சுக்காககூட வெளிவரவே இல்லை.

மொட்டு, பொற்புதிர் இருவரின் வாழ்க்கையையும் அவர்களை சார்ந்தவர்களூடாக அதன் முரண்களையும் ‘முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்’ பிரதேசங்களினூடகவும், ‘தமிழீழ விடுதலை, கம்யூனிஸ்ட்’ இயக்கங்களின் போராட்டங்களினூடகவும் தத்துவார்த்தமாக பேசி, அனைத்தையும் தன்னுள் வாங்கி இருந்துகொண்டே இருக்கும் வரலாற்று படிமமாக கல்விரல் இருந்தது சிறந்த அறிதலாக அமைந்து.

விவரணைகள், உவமைகள் மிக பொருந்தி மிக அழகான வாழ்வனுபவம் கிடைத்தது.

இன்னும் பல நாவல்களை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
மாக்கி

TAGS
Share This