தீ மல்லிக் கொத்தே!

தீ மல்லிக் கொத்தே!

தன் சிறுவெண் பற்களைத் துலக்கிய பின் ஈறு தெரியச் சிரித்துக் காட்டும் குழந்தையைப் போல ரஜிதாவின் சொற்கள் விரிந்திருக்கின்றன. இவ்விரு கவிதைகளின் வரிகளும் குழந்தையின் அளந்தெடுத்த பல்முத்துக்கள். சொல்லிணைவுகளில் உள்ள பித்துநிலை கவிதையை வைர ஊசிகளென மினுக்குகின்றது.

பொற்சிலை
கருவிருந்த மலை

படியளந்தாய்

நீல இரவின்
பனிப்படிவு

துளிரும் அன்றிலும்
தீரத் தீர

செவ்விதழ் பொழி சாலை.

*

பற்றிய
வான் திரி

சுண்டுவிழிப் பிரம்பு
பாய

வேட்டைநாய்
உறுமும் சிரை.

எரி
என்னை

தீ மல்லிக் கொத்தே!

ரஜிதா

TAGS
Share This