09: படையல் விளி

09: படையல் விளி

“மூநாள் திருவிழா நாளை தொடங்கவிருக்கிறது. ஒரு லட்சம் குடிகளுக்காவது உணவிட வேண்டும் மச்சாள். நீ அரியும் வெங்காயங்களை வைத்து ஒரு குழந்தைக்கு கூட உணவு கொடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு வெற்றிலை வாயைத் துப்பிவிட்டு ஒவ்வொருவரையும் அவர்கள் சினம் கொள்ளுமளவுக்கு வைதபடி பெருஞ் சமையல் நிபுணர் இன்னவர் உலைக்களம் புகுந்த வண்டெனப் பறந்தபடியிருந்தார்.

“அடேய் குந்தவா, உனக்கு நான் என்னடா குறைவிட்டேன். குடிகளுக்கே உணவில்லையென்றாலும் உனக்கு ஆறு வேளை உண்டி கொடுத்தல்லவா வளர்த்து வந்தேன். தேங்காயைத் துருவச் சொன்னால் சிரட்டையில் என்ன தாளம் போட்டுக் கொண்டிருக்கிறாய்” என்றுவிட்டு இந்தப் பக்கம் திரும்பியவர் நேரே நின்ற ஒயிலையைப் பார்த்ததும் வியர்வை வழிந்த உதட்டு மேற்பரப்பைத் துடைத்தபடி “கண்ணே, நீயே சொல். உன் அத்தானை இப்படி நீ ஏச வைக்கலாமா, உன்னைத் தென்னந்தடியால் பருப்பைக் கிளறச் சொன்னால், கனவில் யாருடன் கலனேறிச் செல்கிறாய். அத்தான் தான் கலனில் என்றால் சொல். விட்டுவிடுகிறேன். வேறு யாரும் என்றால் இப்போதே இறங்கி நீச்சலடித்து வந்துவிடு. இந்தப் பருப்புக் கலயத்தடியில் தானே உன் அத்தான் நிற்கிறேன்” என நமட்டுச் சிரிப்புடன் ஒருகையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு வெற்றிலையை அதக்கியபடி சொன்னார்.

“உங்களுடன் சேர்ந்து பருப்புக் கலயத்தில் குதிப்பதை விட கனவில் இருப்பவனுடன் கடலில் சாவதே மேல் அத்தான்” என ஒயிலை தென்னந்தடியை வாள் போல் நீட்டியபடி சொன்னாள். “உன் ஊழை நான் என்ன செய்யமுடியும் கண்ணே. இன்னும் மூன்று நாளைக்கு மட்டுமாவது கலனேறாமல் இரு” எனச் சொல்லியபடி தென்னந்தடியிலிருந்த பருப்பைத் தொட்டு நக்கிய பின் இருகணம் விழிகளை மூடித் தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு “உனது பருப்பு எப்போதும் சுவைதானடி கண்ணே” என்று கண்ணடித்து விட்டு தொம்தொம்மென உலக்கை விழுந்தெழுவது போல் நடந்து அடுத்து நின்றவனை வையச் சென்றார்.

மொத்தமாக ஐநூறு பேருக்கும் குறையாமல் பணி செய்யும் பெருங் கூடமொன்றை முப்பது நாட்களாக இரண்டாயிரம் மூங்கில் கழிகளால் தூண்களை அமைத்து தென்னந் தோகைகளாலும் பனையோலைகளாலும் வேய்ந்து
மண்ணாலான அடுப்புக்கால்களில் சாணத்தைத் தடவிக் காய வைத்திருந்தனர். முழுத் தீவுக்கும் உணவிடும் அளவுக்கு அரிசிக் குவைகளைக் குடிகள் சேர்த்திருந்தனர். வயல்களினதும் கடலினதும் மூன்று பங்கு விளைச்சலை ஒவ்வொரு மனையும் கொடுப்பதாக ஏற்பாடாகியிருந்தது. சொல்லியபடி அரிசி மூடைகளும் சமையல் பொருட்களும் இருபது நாட்களாக வண்டில்களில் வந்தபடியிருந்தன. நாகதேவித் திருவிழா முடியும் வரை படையல் பொருட்களைக் களஞ்சியங்களுக்குக் கொண்டு செல்பவர்களுக்கும் இன்னவரிடம் பணிபுரிபவர்களுக்கும் வண்டில்கள் நாணயம் பெறக் கூடாது என்பது மன்று விதி. இரவில் வெளிச்சத்திற்கெனத் தீப்பந்த வளைவுகள் அமைக்கப்பட்டன. காற்றடித்து வெளிச்சம் கலையாதபடி தீப்பந்தங்களை நீளத் துணிகளால் சுற்றிக் கட்டிருந்தனர். அவை குட்டிக் குட்டியான சூரியன்கள் போல் கூடத்தை மஞ்சள் வெளிச்சத்தில் துலக்கின. விறகு சேர்க்கவெனப் பத்து நாட்களாக ஒவ்வொரு பகலும் ஆயிரத்திற்கும் குறையாதவர்கள் காட்டிற்குள் நின்றனர். மண்ணே மரக்கடல் ஆனது போல் விறகுகள் வெய்யிலில் பரத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஐம்பது விறகுகளை ஒருகட்டெனக் கட்டி சமையல் கூடத்திற்குப் பின்பகுதியில் ஒரு விறகு மலையை உருவாக்கி விட்டனர் குடிகள். பட்டினத்தின் உப்பு விளையும் நிலங்களிலிருந்து முதல்தர உப்பு மூடைகளை மழை அண்டாத பகுதியில் குவித்திருந்தனர். வெண்குன்றொன்று வளர்ந்து விட்டதைப் போல் உப்புக் கிடந்தது. கருவாடுகள் தொங்கவிடப்பட்ட பகுதியிலிருந்து எழுந்த மணம் கடல் காய்ந்து கூடத்தில் தொங்குவதைப் போல் குடிகளை எண்ணச் செய்தது. அதன் வாசனை மூக்கை நிறைத்து கள்வாயர்களையும் அருகே தொங்க வைத்திருந்தது.

திருவிழாவிற்கென ஆக்கப்பட்ட யானை வயிறளவு பானைகள் ஒவ்வொரு வண்டிலிலும் ஒவ்வொன்றென வந்து சேர்ந்தபடியிருந்தன. சோற்றைக் கிளறிப் பரப்பவென நூறு நூறு அடிகள் கொண்ட பனையோலைப் பாய்கள் இழைக்கப்பட்டு ஒன்றாக விரிக்கப்பட்டிருந்தன. குடிகளுக்கு உணவை வழங்க காட்டு வாழையிலைகளும் தாமரை இலைகளும் தேக்கின் இலைகளும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கொணர ஏற்பாடாகியிருந்தது. ஐநூறு வண்டில்களையும் ஆயிரம் குடிகளையும் அதற்கென ஒதுக்கியிருந்தது நகர் மன்று. குடிநீருக்கென பெருந்தாழிகள் வைக்கப்பட்டு மூங்கில் குவைகள் அடுக்கப்பட்டிருந்தன. காலையில் அருந்த மோருக்கெனத் தயிர் கடையும் மத்துகள் யானைக் கால்களென பருந்திருந்தன. அவற்றை யானைகளை வைத்து உருட்டி எடுத்துச் சென்றனர் பாகன்கள். மதிய உணவுக்கென மூட்டிய அடுப்புகளின் புகையாலும் சோற்றிலிருந்து பரவிய நீராவியாலும் உம்பர் உலகென சமையற்கூடம் ஆகியது.

இன்னவர் தனது சளைத்த மார்புகள் குலுங்க ஓடியாடிக் கொண்டிருப்பதைத் துடியன் நோக்கினான். இன்னொரு கொழுப்புப் பன்றியெனத் தனக்குள் நினைத்துக் கொண்டு கணக்கு வழக்குகளைக் கேட்பதற்காக நின்றிருந்தான். துடியனின் அருகில் வருவதும் பேச எழுவது போல் வாயை உன்னுவதும் பிறகு அருகிருப்பவனைப் பார்த்து “அடேய் மந்தனே, உன்னைச் சோற்றைக் கிளறச் சொன்னால் சோற்றின் முன் தவளையென அமர்ந்து ஆவென்று கொண்டா இருக்கிறாய். போ, போய் இளந் தடிகளை எடுத்து வா” என்று சொல்லியபடி செல்வார். இன்னவர் பின்னால் வருவது தெரிந்து துடியன் திரும்பினால் “துடியா, பொறு வருகிறேன். இன்றைக்கு ஓலைக் கணக்கு உனக்கு முக்கியம். குடிகளின் வயிற்றுக் கணக்கு எனக்கு முக்கியம்” என்றபடி சுழன்று கொண்டேயிருந்தார். இன்னவரைத் துடியனுக்குச் சிறுவயது முதலே தெரியும். அவரின் சுபாவம் அது அதுதான். எப்படியும் அடுத்த நான்கு பருவத்துக்குத் தேவையான பொருட்கள் திருவிழா முடிய முன்னர் இன்னவரின் மனை சேர்ந்திருக்கும். குடிகளுக்கும் அவரது சுபாவம் தெரிந்திருந்தும் சமையலில் அவரின் கைப்பக்குவத்தினை அரசரும் மெய்ச்சுவதால் அவரது திருட்டுகளைக் குடிகள் பொருட்படுத்துவதில்லை. “அரசர் நீலழகன் முதலில் நல்ல சமையல்காரர். அதற்குப் பிறகு தான் போர்வீரன்” என இன்னவர் சொல்லிக் கொள்வார். “அவருக்கு உப்புக் கொடுத்தது மட்டும் தான் கடல். எனது உணவை உண்டு உண்டு மிச்சக் கைப்பக்குவத்தை நாவும் கையும் பழகியது” என பெருமை பீற்றுவார். என்ன சொல்லி என்ன ஆவது இந்தத் தீவைப் பொறுத்த வரையில் இத்தகைய பெருஞ் சமையலை சுவைபட ஆற்றக்கூடிய ஒரே மானுடர் அவர் மட்டும் தான்.

துடியன் கூடத்தால் நடந்து ஒவ்வொன்றையும் நோக்கி வந்தான். சோற்றிலிருந்து எழுந்த புத்தாவி வாசனையும் பருப்பிலிருந்து எழுந்த நெய்யின் நறுமணமும் குழம்புகளில் கொதித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கறியினதும் தனித்தனி வாசனைகளும் இணைந்து ஒரு பெரு விருந்தை வெறும் வயிறுகளுக்குள் இன்னவரைப் போல் சத்தம் போட்டுக்கொண்டு நிகழ்த்தியது. பருப்புக் கடையல் செய்யும் இடத்தில் நின்ற ஒயிலையின் இடையில் வழிந்திருந்த வியர்வையின் மினுமினுப்பைப் பார்த்ததும் துடியன் தலை திருப்பிக் கொண்டான். ஒயிலை சிறுவயது விளையாட்டுத் தோழி. மண் அடுப்புகளைக் குழைத்து அதில் இலைகளையும் காய்களையும் போட்டு விளையாடுவார்கள். கள்வர் காவலர் விளையாட்டு, கிளித்தட்டு, ஓடிப் பிடித்து, ஒளித்துப் பிடித்து, சோழி விளையாட்டு என்று எந்நேரமும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு தடவை மாம்பிஞ்சொன்றைக் கடித்து விட்டு ஒயிலையிடம் நீட்ட அருகிருந்த பத்தன் “துடியா, ஒயிலையிடமும் இரு மாம்பிஞ்சுகள் உண்டு. கடிக்கக் கேள். தருவாள்.” என்றான். விபரீதம் புரியாத துடியன் “உனது மாம்பிஞ்சுகளைத் தா ஒயிலை” எனக் கேட்டான். சுற்றியிருந்த தோழிகள் சிரித்துக் கொண்டே “அடியே ஒயிலை. துடியன் தான் கேட்கிறானில்லையா. எங்களுக்கு வேண்டாம். அவனுக்கே இரண்டையும் கொடு” எனச் சொன்னதும் ஒயிலை அழுதுகொண்டு ஓடிவிட்டாள். அந்த நிகழ்வின் பிறகு அவன் விளையாட்டுக்கு வந்தால் அவள் வரமாட்டாள். துடியனைப் பற்றிய தோழியரின் கேலிகள் இன்றுவரை அவளைச் சுற்றி சுற்றி மொய்த்தபடியே இருக்கின்றன. ஒயிலையைக் கண்டாலே துடியன் ஓடி ஒளிந்து கொண்டதுண்டு. வாலிபர்கள் ஆனதும் அவ்வப்போது பார்த்துக் கொள்ளும் இடங்களில் இன்னதென்று அறியாத வெறும் பார்வைகளை மட்டும் பார்த்துக் கொள்வார்கள். ஒயிலைக்கு மயில் கழுத்து என்று வாலிபர்கள் சொல்லத் துடியன் கேட்டிருக்கிறான். “அவளுடைய மார்புகள் இப்போது மாம்பிஞ்சுகள் இல்லை துடியா. நீ கேட்டதும் கடிக்கக் கொடுக்க. அவை இப்போது கனிந்து குலுங்குகின்றன” எனத் தோழர்கள் அவனை நகையாடுவார்கள்.

அவனது கால்கள் நிற்க முடியாமல் அலை பாய்ந்தது. மெல்லிய நடுக்கமொன்று வலக்கால் தொடையில் ஏறியாடத் தொடங்கியது. ஒயிலையின் அருகில் செல்லச் செல்ல அவனது உடலை விட்டு ஆவி பின்னால் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒயிலை அவனை விடச் சற்று உயரம் குறைந்தவள். மாங்கனி போன்ற சதைப்பிடிப்பான கன்னங்களில் ஒரு மினுக்கம் பரவியிருக்கும். ஒவ்வொரு தடவை பார்க்கும் பொழுதும் அவளது கன்னத்திலிருந்த சிறு முகப்பருக்கள் குற்று வண்டுகளென எழுந்து இடம் மாறி அமர்ந்து கொண்டிருக்கும். போனமுறை இடப்புருவத்தின் மேலிருந்த கூர்ச் சிவப்பான பருவொன்று இடம் மாறிக் கன்னத்தின் நடுவில் அமர்ந்திருந்தது. அவன் விழிகள் எடுக்காமல் முற்றிய பருவின் இளஞ் சிவப்பு நிறத்தைப் பார்த்தபடியிருந்தான். “அதுவொரு வண்டல்ல. மலர்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான். பின்னால் வந்த இன்னவரைத் துடியன் அறியவில்லை. அவனது முதுகில் ஒருகையை வைத்து “துடியா, என்ன பருப்புக் கடையப் போகிறாயா. வா. வந்து கணக்குகளை எழுதிக் கொள்” என அவனை அழைத்தார் இன்னவர். ஒயிலை வியர்வை வழியும் நீர்க்கழுத்தை விரல்களால் துடைத்து புறங்கைய்யால் விசிறினாள்.

துடியனின் கைவிரல்களில் இரண்டு துளிகள் விழுந்தன. அவை பட்டதும் யாழில் நடமிடும் விரல்களெனக் கைகள் எழுந்தடங்கின. துடியன் திரும்பி நடந்தபடி விரல்களை வாயில் வைத்து இனிப்பை வருடும் குழந்தையென நாவைச் சுழற்றினான். உடல் அசைந்து இன்னவருடன் முன் செல்ல உளத்தைக் கற்பாறையாய் அவள் பார்க்கும் வெளியிலேயே கைவிட்டுவிட்டுப் போனான். அவன் இன்னவருடன் அலைந்து கொண்டு கணக்குகளை ஓலையில் குற்றியபடி இருந்தான். ஒயிலை அவன் நின்று மறைந்த இடத்தை நோக்கினாள். விளையாட்டுக் குழந்தை வைத்த இரண்டு பாதங்களைப் போல் முன்னும் பின்னும் கிடந்த துடியனின் காற்தடத்திலிருந்து எழுந்த அவனுருவைக் கூட்டிக் கொண்டு  கலனேறினாள்.

*

ஆயிரத்து எட்டு ஆடுகளை அடைத்து வைத்த பட்டியிலிருந்து இருநூற்றி ஒரு ஆடுகளைக் காலையிலிருந்து கொன்று தோலகற்றி சதைவெட்டிப் பகிர்ந்தபடியிருந்தனர் வாலிபர் கூட்டமொன்று. பெரிய வெட்டு வாள்களில் ஒரே துண்டாக ஆடுகளின் கழுத்துகள் விழுந்தன. ஒவ்வொன்றும் இரண்டு ஆள் நிறை கொண்டவை. உடலை வெட்டிச் சதைகளைச் சுத்தமாக்கி யானைவயிற்று மண்சட்டிகளில் குவித்தனர்.

பேராற்றிலிருந்து வழிபிரித்து ஐந்து கிளையாறுகளை உண்டாக்கியிருந்தனர் குடிகள். அதில் கடைசியான கிளையாற்றில் மாடுகளையும் ஆடுகளையும் சேவல்களையும் வெட்டி அவற்றின் மாமிசங்களைக் கழுவினர். அங்கிருந்து மிச்சமிருந்த ஆறு குருதிச் சகதியெனத் தாமதித்து அடர்ந்து ஓடியது. ஒவ்வொரு பகுதியாகக் குவிக்கப்பட்ட சதைக்குவியல்களை வெட்டி அடுக்கிய வாலிபர்களின் உடலில் குருதி வழிந்து காய்ந்திருந்தது. கொல்லும் பொழுது மேலும் மேலும் சுடுகுருதி தெறித்தது. இளம் பெண்கள் மண்சட்டிகளை நிரப்ப வரும் பொழுது அவர்களின் மேல் குருதியைத் தெளித்து விளையாடினர்.

அவளது செழித்த இளம் முலைகளின் நடுவில் குருதியை ஊற்றிய செங்குடுவனை துரத்திக் கொண்டு ஓடி பின்னாலிருந்து உதைந்து ஆற்றில் தள்ளினாள் விண்மினி. அவன் ஆற்றின் குருதிச் சகதியிலிருந்து எழுந்து “உன்னையும் ஆற்றில் மூழ்கடிக்காமல் விடமாட்டேன் விண்மினி” எனக் கத்திக்கொண்டு துரத்தினான் குடுவன். அவளது நுங்கு முலைகள் தழைத்து வழிபவை. வலுத்து மிதித்து முன்னேறும் பனைக்கால்கள் கொண்டவள். ஓடும் பொழுது பிருஷ்டங்கள் இரண்டு பதனீர்க் கலயங்கள் எனக் குலுங்கும். மென்கருமை ஒளிரும் விரிந்த வெற்றிலை முகமும் உருண்டையான பாக்குக் கண்களும் நகைத்துருளும்.

சுற்றியிருப்பவர்கள் கூக்குரலிட்டுச் சீழ்க்கையடித்தனர். ஆண்களுக்கிடையால் கிளித்தட்டு மறிப்பவர்களிடமிருந்து தப்பியோடுவது போல் துள்ளியோடினாள் விண்மினி. வியர்வை ஆடையை நனைத்து ஒட்டிக்கொள்ள நாடியால் வடிந்த துளிகளை ஆடைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு தாவினாள். செங்குடுவன் “அவளைப் பிடியுங்களடா.. பிடியுங்கள்” என்று விளித்தபடி ஓடினான். ஓடிவரும் செங்குடுவனின் மேனியை அவள் நோக்கினாள். பொலிகாளையெனப் புரண்ட பேருடல். வழுக்கும் எண்ணை ஊற்றிய உயர்ந்த சறுக்குமரங்களின் உச்சியில் ஏறிச் செப்புநாணயக் குவையைத் தூக்கி வருபவன். கருத்த உடலில் வியர்வை வழிய அவன் பனைகளில் ஏறும்பொழுது தேரை போன்று தோன்றுவான். குழலை உருட்டிக் குவித்துக் கட்டினான் என்றால் கந்தர்வனே தான் எனத் தோன்றும். வாலிபனாகியும் அகலாத சிறுவனின் விழிகள் அவனுக்கு. அவனது குறும்பு கலையாத உதட்டைப் பார்க்கும் பொழுதுகளில் அதைக் கடிக்க வேண்டும் என விண்மினிக்குப் பல் கடுக்கும். ஒவ்வொருவரையும் உச்சியபடி அந்த மயக்குப் பாதையால் ஆற்றின் விளிம்பு வரை வந்து விட்டாள் விண்மினி.

“குடுவா, தயவு கூர்ந்து என்னை விட்டுவிடு. எனக்கு நிறையப் பணிகளுண்டு. மாற்றாடைகள் கூடக் கொண்டு வரவில்லை. அன்னை பார்த்தால் கொன்று இதே சட்டியில் என்னைப் படையலிடுவாள். விட்டுவிடடா” எனக் கெஞ்சினாள் விண்மினி.

“என்னை மட்டும் என் அன்னையென்ன படையலுக்கா நேர்ந்து விட்டாள். நீயாகச் சரணடைந்து விட்டால் உன்னை மன்னித்து விடுகிறேன்” எனச் சொல்லிக் கொண்டு மாடு பிடிக்கும் வீரனைப் போல் உடல் சற்று முன் வளைந்து கைகளைப் பரப்பிக் கொண்டு அபிநயித்தான்.

“விடாதே குடுவா. அவளை ஆற்றில் தள்ளு” எனக் கூட்டம் ஆர்ப்பரித்தது. விண்மினி ஆற்றில் மூழ்கும் காட்சியைக் காண அங்கிருக்கும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் பேரார்வத்துடன் குதித்துக் கரங்களைத் தட்டிக் குடுவனை உற்சாகப்படுத்தினர். விண்மினி கூட்டத்தைப் பார்த்த இருநொடி இடைவெளியில் யானையின் தந்தங்களைப் பிடிப்பவனைப் போல் கைகளை விரித்தபடி பாய்ந்து விண்மினியின் இருகரங்களையும் பற்றி அவளுடன் ஆற்றில் குத்தித்தான் குடுவன். கூட்டம் மெய்மறந்து கூச்சலிட்டது. “விடாதே குடுவா. அவளை அமிழ்த்து. அமிழ்த்து” எனக் குரல்கள் நீருக்குள் கேட்டது. குருதியோடிய ஆற்றில் புரண்ட குடுவனின் கரங்களைத் தள்ளினாள் விண்மினி. காட்டுக் கொடிகளுக்கிடையில் ஏறிய இளங்கொடியென அவளின் கரங்கள் அவன் கரங்களுக்குள் நெளிந்தன. மூச்செடுக்க மேலே வந்த பொழுது ஆகாயம் பளீரிடும் வாள் போல கண்களைக்கூசியது. ஆற்றில் கலந்த குருதியில் குளித்து இரு உடல்களும் குருதி கூடியிருந்தன. அவள் அவனை விட்டு விலகியோடி ஆற்றுள் நுழைந்தாள். அவள் சென்ற திசைக்கு முன் திசையால் முன்னேறி ஆற்றுக்குள் அவள் கால்களைப் பிடித்து தொடை வரை இழுத்தான் குடுவன். சுறாவின் தோல்போல வழுக்கியது. அவள் உதைந்து விட்டு மீண்டும் உள்ளோடினாள். கரையிலிருந்து ஆர்ப்பரித்த கூட்டம் உள்ளென்ன நடக்கும் எனப் பகிடிகளைச் சொல்லத் தொடங்கியது.

ஆற்றின் மேலே துள்ளியெழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு கூந்தலை பின்னுக்கு முடிந்து கொண்ட விண்மினி குருதிபடாதா ஆற்றின் நடுப்பகுதியை நோக்கி விரைந்து நீந்திச் சென்றாள். குடுவன் உள்நீச்சலில் வந்து அவளின் இடையைப் பற்றி தொப்புளில் கடித்தான். விண்மினியின் மேனி தன்னைத் தானே உள் உதைத்துக் கொண்டு முன்னேறியது. திரும்பிக் கரையைப் பார்த்தாள். கூட்டம் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியிருந்தது. அவளது ஐந்து தோழிகள் மட்டும் கரையில் நின்று சிரித்துக் கொண்டிருந்தனர். அவள்கள் என்ன நினைப்பாள்கள் என உள்ளூர நினைத்துக் கொண்டு ஆற்றின் மறுகரையை நோக்கி நீந்தினாள். காட்டிலிருந்து நீண்டு வளர்ந்த பெரு மரவேர்களைப் பற்றியபடி நீரில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தவளை ஆற்றுள் புரட்டி கீழ் வளர்ந்த முதுவேரொன்றில் அவளைப் பற்ற வைத்த பின் செழித்த நுங்கு முலைகளை விடுவித்து அதில் உருண்டு முகிழ்த்த நுனிகளை ஆற்று மீனின் வாயைப் போல விரித்துக் கவ்வத் தொடங்கினான் குடுவன். கல்லெறிந்து பீறிடும் பதனீர்க் கலயமென விண்மினியின் அல்குல் உடைய ஆற்றில் விழுந்த குருதிச்சூடு அடங்காத வாள் போல குடுவனின் ஆண்குறி கனன்றது. அதைக் கையில் பற்றினாள் விண்மினி.

TAGS
Share This