20: முத்து எழல்

20: முத்து எழல்

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது வெண்
தாமரையொன்றை வீசினாள் முத்தினி. அதைக் கைகளில் பிடித்துக் கொண்டவன் திரும்பவும் முத்தினிக்கு எறிய அது யானையின் முகபாடத்தில் பட்டு விழுந்தது. “அலவா, இப்படி எறிந்தால் எதிரிகள் மார்புக்கு அம்பைக் குறி வைத்தாயென்றால் அது எங்கே போய் விழும்” எனச் சொல்லி முத்தினி கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள். “போடி” என கைகளாலும் உதட்டாலும் சைகையும் ஒலியும் எழுப்பி புரவியை உந்தினான் அலவன். வீதியால் அசைந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்த யவன சாகசக்காரர்களின் வண்டில்களிலிருந்த வண்ண வண்ணத் துணிகளையும் கூண்டுகளையும் பலவண்ணக் கிளிகளையும் இரண்டாள் உயரக் கரடியையும் பார்த்த செழியை “அடியேய், நாளைக்கு யவன சாகசக் கூடத்திற்குப் போவோம்” எனச் சொல்லி வாய் பிளந்து நின்றாள். இன்னொரு வண்டிலில் நின்று நகரை வேடிக்கை பார்த்தபடி நின்ற செலினியின் மீது முத்தினி செவ்விரத்தம் பூக்களைக் கைநிறைய அள்ளி எறிந்தாள். வாழ்த்துப் பெறுபவளைப் போல ஒரு கையை மார்புக்கு மடித்து அவர்களின் கொண்டாட்டத்தை ரசித்துக் கொண்டே கைகளைத் தூக்கி “ஓஹ்ய்” எனக் கூவினாள் செலினி. செழியையும் முத்தினியும் பதிலுக்குக் கைகளைத் தூக்கி “ஓஹ்ய்” “ஓஹ்ய்” எனக் கூச்சலிட்டனர். சற்றுத் தள்ளி பெரிய கருங்குதிரையில் முழுவதும் வெண்துணி போர்த்திய லீலியாவைக் கண்டு “அய்யோ” எனக் கூவினர். பிறகு கலகலவென லீலியாவை நோக்கிக் கைகளை விசிறி போல் ஆட்டி நகைத்துக் கொண்டே அருகே போன ஆடவர்கள் மீது பூக்களை வீசினர். அவர்கள் அம்புகள் பட்டவர்கள் போல மார்பை நெளித்துக் காட்டி விட்டுப் புரவிகளில் நீந்தினர்.

யானையை சத்திரத்தின் அருகில் நிறுத்தி விட்டு அங்கு சீரணி ஆடிக்கொண்டிருப்பதை நோக்கினர். “இவள் என்னடி அத்தனை பாம்புகளையும் மயக்கி விடுவாள் போல” எனச் சிரித்துக் கொண்டே பாகர்களையும் பாணர்களையும் காட்டினாள் செழியை. “ஓமடி, அவள் உடலில் தான் எத்தனை நாகங்கள் ஓடுகின்றன. அவள் விழிகளைப் பார் நாகங்களே மயங்கி விடும் மயக்குள்ளவள்” என்றாள் முத்தினி. இருவரும் அங்கிருந்து பெருவீதியால் குடிகளின் கொண்டாட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும் நகைத்து ஒட்டிக் கொண்டும் போயினர்.

“அம்மா நீங்க பார்க்க வேணும். கேட்க வேணும். அய்யோ. அய்யா நீங்க ஆட வேணும் அசைய வேணும். தைய்யோ” என பாடிக்கொண்டே தாளமிட்டபடி பாரதத்திலிருந்து வந்திருந்த தோற்பாவைக் கூத்தர்கள் திரையில் ஒரு வீரன் ஆடுவதைக் காட்டினர். ஒளியில் முன்னே வெண்துணியொன்றைச் சுவரெனக் கட்டியிருந்தனர். குடிகளும் குழந்தைகளும் கூடியிருந்து சிரித்தும் வசைகளைச் சொல்லியபடியும் அமர்ந்திருக்க அவர்கள் பாடிய மெட்டிலேயே ஒரு வாலிபன் “அய்யா நீங்க ஆட்ட வேணாம் பாட்டே வேணாம்” எனப் பாட கூட்டம் அலையெழுவது போல் சிரித்தமர்ந்தது. “மகா சபையோரே. மாண்புமிகு மூத்தோரே. இளஞ் சோடிகளே. இனிய மங்கைகளே. அவர்களின் மங்கலங்களே” என திரையின் பின்னிருந்து இசைக்கிண்ணத்தின் கணீர் குரலில் பாட்டெழுந்தது. சிறு பறையும் கிலுகிலுப்பை போன்ற இசைக்கருவிகளும் கொண்ட ஒரு சிறு வாத்தியக் குழு முகத்தில் மஞ்சளும் வண்ணப் பொடிகளும் செவிகளில் வகைவகையான குழைகளும் அணிந்து தலைகளைத் தாளத்திற்கேற்றபடி ஆட்டியபடியிருந்தனர். முத்தினியும் செழியையும் கூட்டத்தில் பெண்களுக்குப் பின்புறம் போய் அமர்ந்து கொண்டனர்.

“பாரதத்திலே, மூவரே முழுதும் லட்சணம் பொருந்திய ஆண்மக்கள். ஒருவர் மகா ஞானி கிருஷ்ணர். இன்னொருவர் வில்தேர் வீரன் அர்ஜூனன், மூன்றாமவர் நம் கதையின் நாயகன் எழிலும் வீரமும் இணைந்து பெற்ற மகாமகன் அரவான்.

சபையோரே, போரிலே களப்பலி கொடுப்பதாலேயே போர்கள் வெல்லப்படுகின்றன. நரபலியும் அதிலோர் அங்கம். யுத்தத்தில் முதற்பலியாய் தன்னையே கொடுக்க முன்வந்த தியாகி, பாண்டவரின் வெற்றியின் முதல் விதை அரவானின் வாழ்க்கைக் கதையைச் சொல்லப் போறோம்” என குரல் எழுந்து கதையென உருப்பெற்றது. கதை நகர நகர முத்தினி விழிகள் கூர்ந்தாள். திரையில் ஆடிய அரவானின் தோற்பாவையை உற்றாள். கலங்கிக் கலங்கி அவளுள் அரவான் உயிருடன் எழுந்து வந்தான்.
மெய்யுருக் கொண்டு வந்த அரவான் அலவனின் தோற்றத்திலிருந்தான். “அலவா. நீயென்ன செய்கிறாய் இங்கே” எனக் கேட்ட முத்தினியை நோக்கிய அலவன் “கிருஷ்ணா, என்ன இது விளையாட்டு. யார் அலவன்” என விழியில் சந்தேகம் கூடி நின்றான். முத்தினி அதிர்ந்து “அலவா, நான் முத்தினியடா. முத்தினி” என்று மீண்டும் மீண்டும் கூவினாள். அருகிருந்த செழியை முத்தினியை உலுப்பி “என்னடி உளறுகிறாய். அலவன் மயக்கு வந்துவிட்டதா உனக்கு” என சலித்துக் கொண்டாள். “அலவன் தான் நான்காவது சர்வ லட்சணமும் பொருத்திய ஆண்மகன். போதுமா உனக்கு” எனச் சொல்லி தோளில் அடித்து கைகளை வாய் முன்னே குவித்துச் சிரித்தாள். மெய் மீண்ட முத்தினி திரையைப் பார்த்தாள். அரவானும் மோகினியும் காதல் கொள்ளும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. “அடியேய். உன் கதையை எப்பொழுதோ கிருஷ்ணரே ஆடிவிட்டாரடி. மாயக்கண்ணி” என முத்தினியைச் சீண்டினாள் செழியை. “கொஞ்சம் இரடி. என்ன தான் நடக்கிறது எனப் பார்ப்போம்” என்றாள் முத்தினி. “தோற்பாவைகள் ஒன்றையொன்று முத்தமிடுகின்றன. அவ்வளவு தான் நடக்கும்” எனச் சொன்ன செழியை “வாடி, போய் அலவனையாவது பார்க்கலாம். ஆனால் அவனுடன் திரிபதங்கனும் போனான்” என்றாள். “அவனுமா, அவனைக் கண்டாலே மேலெல்லாம் எரிகிறது செழியை. அவன் என்னைப் பார்க்கும் பார்வையிலேயே கொத்துகிறான். அலவனைப் பிடித்து வைத்து ஆட்டும் பேய் அவன்” எனச் சினந்தாள் முத்தினி.

“உங்கள் காதல் போரில் யார் தான் வெல்லப்போகிறார் எனப் பார்ப்போம். எனக்கென்னவோ பதங்கனின் குறி தான் அலவனுக்குச் சுவையான கனி எனத் தோன்றுகிறது. எனக்கும் பதங்கனின் குறியில் ஒரு கண் இருக்கத் தான் செய்கிறது முத்தே” என குழைந்து கொண்டும் பின் நகைத்துக் கைகளைத் தட்டித் தட்டிச் சிரித்தும் சொன்னாள் செழியை. சினத்தில் சேவலின் கொண்டையெனச் சிவந்த முத்தினி “செழியை நீ வேண்டுமானால் பதங்கனை வைத்துக் கொள். அவனும் அவன் குறியும். யாருக்கு வேண்டும் அவனின் கதலி வாழைக் குறி” என பொரிபொரியெனப் பொரிந்தாள் முத்தினி. “அடி மாயக்கண்ணி. ஆக, நீ பதங்கனின் குறியையும் பார்த்திருக்கிறாய்” எனச் சொல்லி விக்கல் எழுந்து திக்கத் திக்கச் சிரித்தாள் செழியை. முத்தினி பதில்மொழி பகராமல் தோற்பாவைக் கூத்திலிருந்து எழுந்தாள். “வாடி போகலாம் எருமை. உன்னிடம் பேசினால் இயமச்சி ஆகிவிடுவேன்” என எழுந்து சினந்து வலக்காலால் நிலத்தில் ஒரு மிதி மிதித்தாள். செழியை எழுந்து “என் முத்தே, கோபமா, வா. அலவனின் காவற்கோபுரத்திற்குப் போவோம்” எனக் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

அலவனின் காவற் கோபுரம் வரை முத்தினி ஒரு சொல்லும் பேசாமல் வாயைக் குவித்துக் கைகளை மார்பில் கட்டியபடி வந்தாள். செழியை நகைப்புக் காட்டினால் திரும்பிக் கொண்டு சிரித்துத் தன்னை அடக்கிக் கொண்டாள். காவற் கோபுரத்தின் மேலே திரிபதங்கன் நகரைப் பார்த்தபடி நின்றதை முத்தினியும் செழியையும் இருளில் பார்த்தபடியிருந்தார்கள். மாலை சரிந்து இருநாழிகை ஆகியிருந்தது. காற்று வீசி மரங்களின் தலைகளைச் சிலுப்பி உடலை எழுப்பியது. அருகிருந்த வீதியில் நின்ற கிழவனொருவன் முத்தினியின் பின்னால் தயங்கித் தயங்கி முயல் பிடிப்பவன் போல் வந்து அவளை இறுக்கிப் பிடித்து வாயைப் பொத்தினான். செழியை இருளிலிருந்து வெளியே வந்து அருகிருந்த மனை வாசலிலிருந்த எரிவிறகொன்றால் அவன் முதுகில் ஓங்கியடித்தாள். அவன் சத்தமெழாமல் திரும்பிப் பார்த்து செழியையின் கூந்தலைப் பற்றி இழுத்தான். “ஏய். நீ இந்த ஆணிலிக்குத் துணையா” எனச் செழியையைத் தள்ளினான். முத்தினி அனல் கொண்டு அவன் தோள்களைப் பிடித்துத் திருப்பி கரங்களில் முழுக்கோபமும் திரள அவன் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். கிழவனின் குழலைப் பிடித்துத் தலையால் தலையை மோதினாள். அவன் தலை கிறுகிறுத்துச் சுழன்று தடக்கி அங்கிருந்து ஓடினான். செழியை முத்தினியை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். “வா. முத்தினி அலவனிடம் போவோம். இவனை விடக்கூடாது. புலிகளின் சிறை தான் இவனுக்குச் சரி. அங்கு சென்று கடும்பணி புரிந்தால் தான் சித்தம் தெளியும் அவனுக்கு” என்றாள் செழியை. “வேண்டாம் செழி. எனக்கு நீ போதும். என் தோழி போதும். இவனைப் போன்ற கிழவர்களுக்கு நான் ஆணாகவே இருந்து கொள்கிறேன். அவனின் ஆண்குறியை மிதிக்க முடியவில்லை. அது தான் கவலை” என மெல்லச் சிரித்துக் கொண்டு மூசிய சுவாசத்தை இழுத்து விட்டு சமநிலைக்கு வந்து நடுங்கிக் கொண்டிருந்த செழியையின் உடலை இறுக்கிப் பிடித்தாள். செழியை முத்தினியின் மார்பில் படுத்தபடி தன் கரங்களின் நடுக்கத்தை நோக்கியிருந்தாள்.

முத்தினி அவளின் தலையைக் கோதியபடி மேலே திரும்பி அலவனைத் தேடினாள். அலவன் திரிபதங்கனின் செவியோடு ஒற்றியபடி மார்பில் ஒரு கரத்தால் அவன் நெஞ்சு மயிரை அளைந்தபடி நின்றான். முத்தினியின் விழிகளில் நீர் திரண்டது. “வா. செழியை. நாம் இங்கு நிற்க வேண்டாம். ஐந்தாம் நாழிகை அரண்மனைக்கு வரச் சொல்லி அங்கினி அத்தை சொன்னாள். இப்பொழுதே நேரமாகிவிட்டது. வா” என அவள் கைகளைப் பற்றியிழுத்தபடி பெருவீதிக்குள் நுழைந்து சுழன்ற காற்றில் கலைந்து எற்றுப்பட்டவளென மனைக்குச் சென்றாள். அங்கினியும் பதும்மையும் விருபாசிகையும் தயாராகி நின்றிருந்தனர். “எங்கேயடி போனீர்கள், நமக்கெனப் புரவிகளும் வந்து விட்டன. நேரமாகிறது” எனச் சொல்லி அவர்களை அப்படியே இழுத்துப் புரவிகளில் ஏறச் சொல்லி அவசரப்படுத்தினாள் அங்கினி.

அரண்மனைக்குச் செல்லும் காட்டு வழியால் அரை நாழிகைக்குள் குடிலைச் சென்று சேர்ந்தன புரவிகள். அங்கிருந்த குடிலொன்றில் ஐவரும் கூடியிருக்க அரவானின் கதையைச் சொல்லிச் செழியை சிரித்தாள். கிழவனின் செய்கையை அவர்களுக்குச் சொல்ல வேண்டாமென முத்தினி செழியையின் காதிற்குள் சொன்னாள். அரசி நிலவையைத் தனியே சந்திக்கப் போகிறோம் என்ற தகவலை அப்போது தான் அங்கினி அவர்களுக்குச் சொன்னாள். முத்தினி இயல்பை மாற்றிக் கொள்ள தேவ இலை மலர்களை எடுத்து ஒரு கொம்பில் அடுக்கி இதை அரசிக்குக் கொடுத்து அவரை மயக்கப் போவதாகச் சொன்னாள். அச் சொற்களை அகம் எண்ணியதும் எதை விரட்ட இந்த பாவனை என உளம் ஒடுங்கி அமர்ந்தாள். அங்கினி அரசியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க செவிகள் அடைத்திருந்த முத்தினிக்குள் கிழவனின் உருவம் அச்சமென ஏறி உடல் வியர்க்கத் தொடங்கினாள். செழியை அவளை மெல்லத் தொட்டு “என்ன” என விழிகளால் கேட்டாள். முத்தினி ஒன்றையும் நோக்காது உடலணைந்து நின்றாள்.

திரிபதங்கனின் தமக்கை தானகி குடிலுக்கு வந்து அவர்களை அழைத்துச் சென்றாள். செல்லும் வழியில் தானகியை நோக்கிய முத்தினியின் நெஞ்சில் விடமுள்ளொன்று எழுந்தெழுந்து குத்தியது. உடலில் அச்சம் விலகி ஏதென்றறியாத வெறுப்பு உள்ளெழுந்தது. தானகியின் நடையில் அவளுக்குத் திரிபதங்கன் தோன்றினான். அவளுடைய விழிகளில் அவனது செருக்கின் கீற்றுகளைக் கண்டாள். வாயிலில் அவர்களை நிறுத்தி அரசியின் ஆணைகளைச் சொன்னபோது உள்ளே விடமுள் தைத்தெழ “இவளே அரசி போல் எண்ணிக் கொள்கிறாள். எங்களது உயிருக்கு இவள் என்ன பொறுப்பு வேண்டியிருக்கிறது” என சொல்லெழுந்தவள் அடக்கிக் கொண்டாள். அவளின் ஒவ்வொரு கையசைவும் ஒவ்வொரு உதட்டுச் சுழிப்பும் அவளைத் திரிபதங்கன் என முத்தினிக்குத் தோற்றமெழ வைத்தது.

நீரகத்தில் நிலவையைப் பார்த்த போது அக்கணங்களிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவளென உடல்களில் புரண்டாள் முத்தினி. அலவனின் முகம் ஆடியாடித் தோன்றியது. ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு அலவன். சிறிய அலவன். பெரிய அலவன். நீண்ட கூந்தலுள்ள அலவன். பேரிதழ்கள் கொண்ட அலவன். மார்புகள் கூம்பிய அலவன். விரிதாமரை இலைகளெனவும் குலுங்கும் செவ்விளநீரும் என முலைகள் கொண்ட அலவன். அல்குல் கொண்ட அலவன். அல்குல் மயிர்க்காட்டை முத்தமிட மேனி மெய்ப்புக் கொண்டு சிணுங்கும் அலவன். அலவன் அலவன் என எண்ணியெண்ணி ஒவ்வொருவரையும் புணர்ந்தாள். இதழுறிந்தாள். அலவன் மாயப்பேய் என ஒவ்வொரு உடலிலும் எழுந்து தாவுவதாக எண்ணினாள். அலவனன்றி அந்த நீரகத்தில் ஒருவருமில்லை என எழுந்தாள். ஒரு வேட்டை நாயின் புணர் உக்கிரம் அவளில் விழைந்தது. தேவ இலை மலர்களைப் புகைத்துப் புகைத்து அவள் உடல் மிதக்கத் தொடங்கியது. ஒவ்வொரு அல்குலையும் புணர்ந்தெழுந்த போது அலவன் அலவன் என உளம் உதைத்தெழுந்தது.

தன்னை நோக்கும் விழியொன்றின் தொடுகையை மேனியில் உற்ற முத்தினி ஒரு கணம் எழுந்து நீரகச் சுவரில் ஒளிர்ந்த அவ்விழியை நோக்கினாள். திரிபதங்கனும் அலவனும் நின்ற ஒற்றுக் கோலம் அவள் அகத்தில் நெய்ப்பந்தத்தில் எரிதீ பற்றிக் கொள்வது போல் எழுந்தது. வாயிலைத் திறந்து வெளியே வந்து தானகியை நோக்கினாள். அவள் திரிபதங்கன். அலவன் புணரும் திரிபதங்கன். அலவனின் காதலைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்ட திரிபதங்கன். அவனைக் கொல்லும் வெறி மனதில் எழுந்தது. விடமுள் தடித்து நீலம் பரந்தது. தானகியை நோக்கிச் சென்றவள் சுவரின் துளை வழி நோக்கினாள். தானகி நீரகத்தில் நோக்கியிருந்த களிவிளையாட்டால் காமம் புரளும் மணல்வெளியன ஆகியிருப்பதை நோக்கினாள். ஒரு நொடிப்பிரிவில் அலவன் தான் என உணர்ந்தாள். தானகி முழந்தாளில் அமர்ந்து அவள் குறியை உறிஞ்சினாள். அவள் விழிகளை நோக்கிய போது பதங்கனின் கொத்தும் விழிகளைக் கண்டாள். தன் குறியை ஆழ உள்நுழைத்து வாயைப் புணர்ந்தாள். உள்ளே பதங்கன் பதங்கனென உள்ளம் கூவியது. உன்னை வெல்கிறேன் மூடா எனக் களியிட்டது. அவளைத் தூக்கி நிறுத்தி மதனமூறிய அவளின் அல்குலுக்குள் புரவியின் நுழைவென உள்நுழைந்தாள். அவள் முனகித் ததும்ப முடியாது வாயை இறுக்கிய போது “கதறு கதறு” என உளம் எழுந்தாள் முத்தினி. “உன்னை அலவன் புணரும் போது இப்படித் தான் கத்துவாயா பதங்கா. கத்து கத்து. உன் உடல் கதறுவதை நான் கேட்க வேண்டும். விழி நீர் கசிவதை நோக்க வேண்டும்” அவளைப் புணர்வது ஒரு விளையாட்டென ஆகியது முத்தினிக்கு. அதுவொரு வஞ்சம் தீர்ப்பென அவள் எண்ணிய கணம் உடல் சுருண்டது. யாருடைய வஞ்சமிது. என்ன செய்கிறேன் நான். இது அலவனல்ல பதங்கன் என எண்ணிய கணம் அவளை நீங்கி வாயிலைத் திறந்து உள்ளே போனாள் முத்தினி. விருபாசிகையின் வாய்க்குள் தன் குறியைக் கொடுத்தவள். அலவன் அலவன் என எண்ணியமைந்தாள். குறி விறைத்து வாளென நீண்டது. நால்வரின் உடல்களிலும் மெய்த்தெழுவது அலவன் எனும் காமப் பேய் என துடித்துச் சீறிச் சுக்கிலம் தெறித்து அகம் உச்சிக் கிளையில் மந்தியென ஆகுவதை உள் நோக்கித் தரையில் அமர்ந்தாள்.

மனை திரும்பும் போது ஒருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. காட்டிலிருந்து பறவைகளின் துயிலொலியும் படபடக்கும் சிறகுகளும் செவிகளில் கூர்ந்திருந்தன முத்தினிக்கு. ஒரு இறகு வீழ்ந்தாலும் எரிவது போல் விழிமயக்கு முன்னிருந்த பாதையை மூன்றாக நான்காக விரித்தபடி போனது. அலவனை அவள் சிறுவயது முதல் அறிவாள். தாழைக் கடலில் இருவரும் நிர்வாணமாகக் குளிப்பார்கள். அலவன் அவளின் ஆண்குறியைப் பிடித்து “உனக்கு என்னை விடப் பெரிய குறி” எனச் சொல்லி வியப்பான். “போடா உனக்கும் தான் பெரிய கப்பல் வாழைக் குறி” என பிடிக்கப் பாய்வாள். அவன் விலகி ஓடி நீரில் மூழ்கி மறைவான். முத்தினி உள்நீச்சலில் ஓடி அவன் கால்களைப் பற்றி இழுப்பாள்.

அவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் முத்தரசன். அவளுக்கு மூன்று சகோதரிகள். அவள் குடும்பத்தில் அவள் தான் ஒரே ஆண் பிள்ளை. இள வயதிலிருந்தே அவள் தமக்கைகளுடன் ஒண்டிக் கொள்வாள். புருவத்துக்கு அஞ்சனமிட்டு நெற்றியில் திலகமிட்டு குழலைப் பின்னி விளையாடுவாள். தமக்கையின் தழையாடைகளையும் சங்கு வளைவிகளையும் மூக்கு மின்னியையும் அணிந்து ஆடிக் காட்டுவாள். மனையிலிருப்பவர்கள் அவள் சகோதரிகளுடன் விளையாடுகிறார்கள் என எண்ணி அதைப் பற்றிக் கேட்பதில்லை. அவள் இள வயதை அடைய அடைய மஞ்சளை அரைத்து மேனியெங்கும் பூசிக் குளிக்கத் தொடங்கினாள். அவளது உடலில் உரோமங்கள் வளர்வது குறைவு. இள மீசையோ தாடியோ அரும்பினால் குறுவாள் போன்ற தந்தையின் சிகை அலங்காரக் கத்தியை எடுத்து மழிப்பாள். அவளுக்கு அவை பிடிக்கவில்லை. “எனது முகம் உரோமங்களின்றியே அழகாயிருக்கிறது. என்னை இப்படிப் பார்க்கவே எனக்குப் பிடித்திருக்கிறது” என சகோதரிகளுக்குச் சொல்லுவாள். முத்தினி இளவயதிலிருந்தே குறும்பும் துடுக்கும் கொண்டவள். அலவனது மனை நகரின் எதிர்ப்பக்கமிருந்தது. விற் பயிற்சி பெறும் இடத்தில் தான் அவளை அவன் முதலில் கண்டாள்.

அவர்களுடைய வில் ஆசிரியர் உகும்பர் முதல் நாள் பயிற்சியில் வைத்து முத்தினியின் விரல்களை நோக்கினார். “உனது விரல்கள் ஏன் நெளிகின்றன முத்தரசா. இவை பெண்ணின் விரல்கள். உனது விழிகளில் இருப்பவை மயக்கு. உன்னால் குறியை நோக்க முடியாது. இங்கிருந்து போய் விடு” எனச் சொன்னார். அலவன் எழுந்து வந்து “ஆசிரியரே, அவன் திறமையானவன். நான் அவனுடன் தான் அமர்ந்திருந்தேன். அவன் விரல்கள் நாணைத் தொட்ட போது வில் அவனை ஏற்றுக் கொண்டதைப் பார்த்தேன்” எனச் சொன்னான். அலவன் உகும்பரின் பிரியத்துக்குரிய மாணவன். உகும்பர் அவனது விழிகளை நோக்கிய பின் “சரி அலவா. உன் விருப்பப்படி ஆகுக. இவன் ஏழு நாட்கள் இங்கு பயிலட்டும். இவன் அந்தத் தூங்கும் மூன்று மாங்கனிகளில் ஒன்றை விழுத்தினாலும் என் மாணவனாக இவனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” எனச் சொன்னார். “நன்றி. ஆசிரியரே” எனச் சொன்ன அலவன் முத்தினியை நோக்கி “வா. பயிற்சிக்குப் போகலாம். உனக்கு இனி நான் தான் ஆசிரியர்” எனச் சிரித்துக் கொண்டு சொன்னான். அவன் சிரிப்பில் தெரிந்த தோழனை அக்கணமே உற்றாள் முத்தினி.

ஏழு நாட்கள் கழித்து உகும்பர் முத்தினியை அழைத்தார். “முத்தரசா இன்று உனக்கு இறுதி வாய்ப்பு. அம் மாங்கனிகளில் ஒன்றையாவது நீ அம்பெய்து வீழ்த்த வேண்டும். இல்லையேல் இங்கிருந்து போய் விட வேண்டும்” என இறுக்கமான முகத்தை அசைக்காமலேயே சொற்களைச் சொன்னார் உகும்பர்.

அவள் வில்லைக் கையில் ஏந்தினாள். ஒரு பறவையின் சிறகென அதை உசுப்பினாள். வில்லில் நாண் ஒற்றை ஒலியென எழுந்து பூண்டது. அவள் மாங்கனிகளை நோக்கியபடி அம்பை எடுக்கக் கையைப் பின்னால் தூக்கிய கணத்தில் உகும்பரின் உதட்டில் புன்னகை எழுந்தது. அம்பறாத் தூணியிலிருந்து கூர்வேல் அம்பொன்றை எடுத்தாள். இரு விரல்களிலும் அம்பின் வால் ஒரு மலரென அமைந்தது. நளினமான அந்த விரல்கள் அம்பில் மேலுமொரு நளினத்தைக் கூட்டியிருந்தது. ஒன்றின் மேல் ஒன்றென நடன பாவத்தில் கை பொருத்தியது. விழிகளில் மூன்று மாங்கனிகளும் தூங்கும் கொத்துக் கிளையை நோக்கினாள். அம்பின் கூரென அவள் அகம் திரண்டது. ஒரு கணம் அலவனை விழியுற்று மீண்டாள். அவன் அவளின் விரல்களையே நோக்கியிருந்தான். ஒரு மின் கணம். ஒரு நாண் விசும்பல். ஒரு கொத்து அறுகை. மூன்று கனிகளும் நிலத்தில் விழுந்தன. உகும்பர் கைகளைத் தட்டிக் குழந்தையென உற்சாகமானார். அவளை ஓடிவந்து அள்ளிக் கொண்டான் அலவன். அவன் கரங்கள் அவளில் தொட்ட போது மார்புக் காம்புகள் அம்பின் நுனிகளென விழி திறந்ததை உணர்ந்தாள் முத்தினி.

பயிற்சி நேரம் போக இருவரும் கடற்கரையில் விளையாடுவார்கள். மீன் பிடித்துச் சுட்டுத் தின்பார்கள். காட்டுக் கோழியை வாட்டித் தின்பார்கள். இருவரும் தாழைக் காட்டைத் தங்கள் போர்க்களமெனக் கற்பனை செய்து கொண்டு அம்பெய்து பழகுவார்கள். அலவனின் ஒவ்வொரு அம்புக்கும் மறு அம்பைத் தொடுத்து அதை உடைத்து எறிவாள் முத்தினி. சினத்துடன் அம்புகளைச் சடசடவெனப் பெய்பவனின் அகங்காரத்தின் மீது அம்புப் பெருக்கொன்றை நிகழ்த்துவாள் முத்தினி. மாலை மருகிக் கிடக்கும் கடலின் ஆளரவமற்ற தாழைகளுக்குள் ஆண்குறிகளை மாறி மாறிச் சுவைத்துக் கொள்வார்கள். முத்தினி அவனது இதழ்களில் முத்தமிடுவாள். அலவன் அவளது மார்புகளை உறிஞ்சுவான். அரூபமுலைகள் எழுந்து அசைவது போல் அவளுக்குத் தோன்றும்.

நாட்கள் நகர்ந்து சென்றன. முத்தினியின் இதழ்களில் பெண்மை கூடி எழிலெழுந்தாள். நடையில் அணிகளைச் சூடினாள். மலர்களைக் குழல்களில் வைத்தபடி அலவனைப் பார்க்க வருவாள். அலவன் அவளின் உடலில் எழும் சிறு மாற்றங்களையும் அறிவான். அதில் ஒரு பெண் எழ எழ அவன் அவளிலிருந்து விலகத் தொடங்கினான். கடற்கரைக்கு வருவதைத் தவிர்த்தான். முத்தினி தான் ஒரு பெண்ணென உணர்வதை முதலில் சொன்னது அலவனிடம். அவள் சொல்லி அவனை நிமிர்ந்து பார்த்த பொழுது “ஒரு ஆண் எப்படிப் பெண்ணாக முடியும் முத்தா. நீ பொய் சொல்கிறாய். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா. அதனால் தான் இப்படியெல்லாம் செய்கிறாயா. விழிகளுக்கு மையிட்டுக் கொள்கிறாய். நடையில் ஒரு பெண் வருவதை நோக்கி நோக்கி அகம் சலிக்கிறது முத்தா. ஆசிரியர் முதல் நாளில் சொன்னது இப்பொழுது எனக்குப் புரிகிறது. நீ பெண். நீ பெண். என்னை ஏமாற்றி விட்டாய்” என கோபத்துடன் சொற்களை ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடுத்தான். அவள் விழிகளை மூடி அவனது சொற்களைக் கேட்டபடியிருந்தாள். விழிகள் நீரூறியெழ வேகமாக நடந்து குழல் கலைந்து காற்றில் மிதப்பவனைப் பார்த்து நின்றாள். கீழேயிருந்த வில்லை எடுத்தாள். ஒரு மடிப்பில் உடைந்து நொறுங்கி இரண்டானது. அதைக் கடலில் எறிந்தவள் மணலில் முழந்தாளில் விழுந்து விழிகள் தளதளக்கத் தொண்டையில் கடலின் உப்பெல்லாம் கரைய அழுதாள். அழுது வடிந்தாள்.

அலவன் இரகசியமாக வனத்திற்குச் சென்று புலிப்படையில் சேர்ந்த அன்று அச்சேதி ஊருக்குள் ஒவ்வொரு மனையாய் ஊர்ந்து முத்தினியின் மனைக்கும் வந்தது. அன்றே முத்தினி தன் மூத்த சகோதரியிடம் தான் ஒரு பெண் எனச் சொன்னாள். தந்தை மனையை விட்டு இறங்கி வேகமாகச் சென்றார். அன்னை தலையை விரித்து அழுது அரற்றத் தொடங்கினாள். சகோதரிகள் அவளைப் புழுவென நோக்கினர். அந்த மனையின் ஒவ்வொரு திசையும் அவளைப் பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் முத்தினி உந்தப்பட்டாள். அவள் உளம் அலவனைத் தேடியது. வனத்திற்குச் சென்று புலிப்படையில் சேரலாமா என எண்ணினாள். பின் அலவன் இருக்கும் திசைக்கு இனிச் செல்வதில்லை என முடிவெடுத்தாள்.

மனையை விட்டு வெளியே இறங்கினாள். முதல் நாள் சத்திரத்தில் தங்கினாள். அங்கிருந்த மூன்று கிழவர்கள் அவளை உரசி உரசி அவளின் ஆண்குறியைப் பற்றிய போது உதறி எழுந்து அவர்களைத் தாக்கத் தொடங்கினாள். அவர்கள் அவளின் வாயைக் கட்டித் தூக்கிக் கொண்டு வெளியே சென்று காட்டில் ஒரு மரத்தில் சேர்த்து ஆலம் விழுதொன்றால் கட்டினார்கள். அவளது ஆடையை உரிந்து வாய்க்குள் திணித்தார்கள். அவளது கரங்கள் வில் வில்லென எழுந்தன. உடல் நடுங்கிக் கூச்சம் எழுந்து நெளிந்தாள். விழிகளாலும் கண்ணீராலும் கெஞ்சத் தொடங்கினாள். மூன்று கிழவர்களும் அவளது உடலை அளைந்தனர். மார்புகளைக் கவ்வினர். கடித்தனர். அவள் அய்யோ என அலறும் குரல் துணிக்குள்ளால் உமிழ் நீருடன் வழிந்தது. அவளைப் பின்புறமாகக் கட்டி மயங்கும் நிலையிலிருந்தவளை மயங்கி விழுந்த பின்னும் விடாமல் குதவழி புணர்ந்து விந்தை அவள் குதத்தில் நிரப்பிய பின் அவளை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் இருளில் மறைந்தார்கள்.

விடியலில் மயக்கம் தெளிந்து எழுந்தவள் குதவழி வழிந்து காய்ந்திருந்த விந்தை உடலில் உணர்ந்து வலியெழ அழத் தொடங்கினாள். கைகளில் கட்டு தளர்ந்திருந்தது. அவளது வாயிலிருந்த ஆடையைக் காணவில்லை. கைகளை அவிழ்த்துக் கொண்டு கட்டுகளை பற்களால் இழுத்து அறுத்தாள். ஈறுகளில் இரத்தம் கசியத் தொடங்கியது. முனகலுடன் நீரழிந்து கிடந்தவள் உடலை ஒருங்கி எழுந்தாள். சத்திரத்தின் விளிம்பிலிருந்த காட்டில் அவள் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள். பிறகு மரங்களைப் பற்றிப் பற்றி அழுது கொண்டே சென்றாள். அக்காட்டின் தொடக்கத்தில் ஒரு குளமிருப்பதை அகம் நினைவுக்குக் கொணர்ந்தது.
உடல் நோக நோக கடித்த பற்காயங்கள் காந்தக் காந்த குதத்தில் வழிந்து காய்ந்த விந்தைத் துடைத்தபடி குளத்தை நோக்கி அழுது கொண்டே ஓடினாள் முத்தினி. குளத்தை நெருங்கியவள் கொப்பலர்ந்த குரங்கென நீருள் விழுந்தாள்.

நீரின் உள்ளே மூழ்கி மூழ்கிப் போனாள். குளத்தின் மையத்தை நோக்கி நீந்தியவள் அமிழ்ந்து கொள்ளத் தாமரைத் தண்டுகளைக் கொத்தாகப் பற்றிக் கொண்டாள். ஒரு சாம்பல் நிற மீன் அவளின் முகத்திற்கு முன் வந்து அசைந்து நீந்தி வாயைத் திறந்து குவித்து வளிக்குமிழ்களை வெளியேற்றியபடி அவளைத் தன் ஒரு விழியால் நோக்கியது. அதன் கருவிழியில் தன் முகத்தை ஒரு ஆடியெனக் கண்டாள். பின் அது அலவன் என்றானது. உந்தி உதைத்து நீர்ப்பரப்பின் மேலே எழுந்தாள்.

குளக்கரையில் அமர்ந்து கொண்டு பதும்மையும் அங்கினியும் ஆடைகளைத் துவைக்கத் தொடங்கியிருந்தனர். முத்தினி அவர்களை நோக்கி நீந்தி வந்தாள். குழலும் முகமும் தெரிய நீரில் நின்றவள் “என்னிடம் ஆடையில்லை. ஒரு ஆடை தருகிறீர்களா” எனக் கேட்டாள். “யார் பெண்ணே நீ. என்னவாயிற்று” எனக் கேட்ட அங்கினி அவளைப் பெண்ணென்று அழைத்த முதல் மானுடி. முத்தினிக்கு அழுகை பொங்கி எழுந்து அழத்தொடங்கினாள். அங்கினி கொடுத்த துணியை அணிந்தவள் எழுந்து கரையமர்ந்தாள். தன் கதையைச் சொல்லி முடித்த பொழுது பதும்மை அவள் கரங்களால் தன்னை அணைத்திருப்பதை உணர்ந்தாள். அங்கினி அவளை நோக்கிய பின் “இனி உனது பெயர் முத்தினி. எங்களுடன் தான் இருக்கப் போகிறாய். நாங்கள் பரத்தைகள் முத்தினி. இங்கிருக்கும் ஆடவர்களை நாம் அகமும் புறமுமென அறிவோம். இங்கு நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஆணிலிகள். அவர்கள் உன்னை அஞ்சுவது அதற்குத் தான். நீ எங்கள் தோழியென ஆகி அவர்களை அறி. அவர்களைக் கடந்து செல்வாய். உன்னை நாணேற்றிய விரல்களை நீ என்றாவது அடைவாய். அப்போது நீ அவனையும் நீயென உணர்வாய். நீ ஆணிலியோ பெண்ணிலியோ அல்ல முத்தினி. நீயொரு முழு முற்று. ஒரு முழு நிறைவு. ஒரு முழு மெய்” என்றாள் ஆடையைத் துவைத்தபடி.

TAGS
Share This