70: நிலவறை
மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன மதுவை உண்டு தலைசுற்றி மயங்கி ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து இருகுற்றிகள் போல் முட்டிக்கொண்டிருந்தனர். மதுச்சாலையைக் கவனிப்பதில் பயனில்லை என்ற நிலை உண்டானது. அவரவர் விரும்பிய வண்ணம் கள்ளிலும் மதுவிலும் குளித்தாடினர். முதுவிறலிகளின் முலைகளில் ததும்பிய கள்ளைப் பாகர்கள் அருந்தினார்கள். யாருடல் எவருடலில் சாய்ந்ததென எந்த போதமும் எவருக்குமிருக்கவில்லை. போதைச் சாலையிலேயே விழவு தன்னை முதலில் தொடங்கும் எனக் கீர்த்த மந்திரர் இறுதிக் குவளையை வாயில் வைத்த போது உளறிக் கொண்டிருந்தார். பின்பக்க வாயிலைச் சாற்றிய இராப்பிரியன் நீல வண்ணத்தில் மின்னிய யவன மதுக் குப்பியொன்றை எடுத்துக் கொண்டு பின்வாசலில் எவருமற்று இருப்பதைக் கண்டு வந்தமர்ந்தான். குப்பியின் மரத்தக்கையை எடுத்து மதுவின் எரிவாசனையை நாசியில் இழுத்துக் கொண்டான். வாத்துகள் சருகளில் நடக்கும் ஒலிகேட்க நிமிர்ந்தவன் தீயிலையில் வெறித்துச் சிவந்த விழிகளுடன் மேலாடை சரிந்து வல முலை குத்திட்டு நிற்க தள்ளாடியபடி வந்தாள் அரூபி. அவளின் வெண்ணாடை நெய்வண்ணம் கொண்டிருந்தது. அவளது கூந்தல் பிரிந்து கலைந்திருந்தது. காதில் குருவிச்சிறகு போன்ற பொற்காதணிகள் மின்னின. கழுத்தில் இளஞ் சிவப்பான இரத்தினம் விழிகொண்ட கருங்கயிற்று மாலை உக்கிரம் கொண்டிருந்தது. கரத்தில் மீன்போல் துள்ளும் பொன் வளைகள் குலுங்கின. காலில் செம்பாலான ஒற்றைச் சிலம்பு. அருகிருந்த பெருநீர்க்கலயத்திலிருந்து மண் கலயத்தால் நீரள்ளித் தலையில் வார்த்தாள். ஒவ்வொரு முறை வார்க்கும் போது நீரை ஊதினாள். பிசிறிய துளிகள் இடையாடை மட்டும் அணிந்திருந்த இராப்பிரியனை நனைத்தது. அவன் அஞ்சி எழுந்து கொண்டான். மாந்தளிர் நிற இளவீரனைப் போன்ற மெலிந்த உறுதியான இராப்பிரியனின் தேகம் மெல்லிய உதறல் கொண்டது. அவன் மது அருந்தியமை எருவீரன் அறிந்தால் அவனை அறைந்தே கொல்வான்.
அவன் எழுந்து நிற்க அரூபி அவன் அங்கிருப்பதை அறியாதவள் போல நீர்க்கலயம் தீரும் வரை அள்ளியள்ளி நீரில் கரைந்தாள். கூரைத்தட்டில் தூங்கிய எருவீரனின் உலர்ந்த இடைத்துணியை உருவித் தலையையும் மேனியையும் துடைத்தாள். எஞ்சிய அரைக்கலய நீரைக் குடித்து விட்டு இராப்பிரியனின் அருகே வந்து ஓய்வெடுக்க இடமுண்டா என வினவினாள். அவன் நிலவறை உண்டு. அங்கு மஞ்சமும் மரப்பெட்டிகளும் அடுக்கப்பட்டுள்ளன. இரவுகளில் அங்குதான் எருவீரன் உறங்குவான் எனச் சொன்னான். அவள் அவனை இழுத்துக் கொண்டு நிலவறையின் திசைக்கு வழிகாட்டச் சொல்லி முன்சென்றாள். வாயிலிலும் நெடுஞ் சுவர்களிலும் முட்டியாடி மயக்குற்ற மந்தியென நடந்தாள். அவளில் மதுமணமும் வியர்வையும் கலந்த களிவாசனை எழுந்து அலைந்தது.
நிலவறையினுள்ளே இரு தீப்பந்தங்களைத் தீயுருட்டும் கற்களை கொண்டு கொழுத்தினான் இராப்பிரியன். பந்தத் துணிகள் தலைசிலுப்பி எரிதழல் பூண்டன. அவள் மஞ்சத்தில் மயங்கி விழுபவள் போலச் சரிந்தாள். அவளது ஆடை இடையை மட்டும் மறைத்த படி மிகுதி தேகத்தை மஞ்சள் ஒளிக்குக் காட்டியபடி விட்டகன்றது. துகில் நீங்கிய அவளது இளமுலைகள் மூச்சின் ஏறலுக்கும் இறங்கலுக்கும் குவிந்து விரியும் தாமரையென ஆடின. அல்குலில் மயிரிழைகள் சுழன்று மடிந்து பெருகியிருந்தன. இராப்பிரியன் விழியை சுற்றிருட்டில் மோதிப் பார்த்தான். ஆனால் அவனுள் எழுந்த விழைவு அவளை நோக்கியது. அருகிருந்த மரப்பெட்டியில் அமர்ந்து மதுக்குப்பியை மிடறு மிடறாகக் குடித்தான். தொண்டையில் எரிவு எழாததைக் கண்டு வியந்து கொண்டிருந்தான். உள்ளே எரியும் தீயில் நெய்க்கலயமெனக் கவிழ்ந்தது மதுக்குப்பி. தீயிலைத் துதியை நடுங்கும் கரங்களுடன் எடுத்து ஊதினான். அவனுள் அச்சம் நாகங்களென விளைந்து நரம்புகளில் ஏறிக் கொத்துகின்றன என எண்ணிக் கொண்டிருந்தான். அதன் விடம் ஒவ்வொரு அணுவிலும் பரவுவது போல் உணர மெய்ப்புக் கொண்டான். தீயிலை வாசம் எழ அரூபி விழிமடல்களைத் திறந்து “பிரியா எனக்கும் கொடு” என்றாள். அவளது குரல் தந்தியை நீங்கிய யாழொலியெனக் காற்றில் அதிர்ந்தது. குரலில் இடறும் எதுவோ ஒரு சொல் அவனுக்குள் கேட்டது. குரல் தன் செவியால் ஒழுகி வழுகி அவன் நரம்பில் மதுவென ஊறுவதை நோக்கிக் கொண்டிருந்தான். அவனது இளங் குறி கொல்வேல் நுனியென விறைத்தது. அவளது மார்புகளை நோக்கிக் கொண்டு மெல்லத் தன் குறியைத் தொட்டான். சூடான குருதி உடலெங்கும் பாய்ந்து புரவியென ஓடியது. அரூபி விழிகள் தழைந்திருக்க அவனை அழைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் எழுந்து சென்று அவளின் அருகிருந்து துதியை அவள் கரத்தில் வைத்தான். “ஊதிவிடு பிரியா” எனச் சொல்லி இருகரங்களையும் தலைக்கு மேலாகப் போட்டுக் கொண்டு மார்புக் காம்புகள் விறைத்து நெளிய விழிகளை அரைநிலவெனத் திறந்தாள். செவியின் பொன் குழைகள் கருஞ்சிலையில் பொன் வரிகளென மினுங்கின. விழியின் செவ்வண்ண வரிகள் மஞ்சள் வெளிச்சத்தில் ஓவியமென எண்ணிக் கொண்டான் இராப்பிரியன். கழுத்தில் செந்தகைப்பில் துடித்த மார்பென இரத்தினக் கல் ஒளிமினுக்காடியது.
கரத்தின் வளைகள் ஓய்ந்திருந்தன.
அவளது மூச்சில் வெம்மை நீண்டு பரவியது. அவன் துதியை ஆழ இழுத்து அவள் முகமருகே குனிந்து மெல்ல ஊதத் தொடங்கினான். அவளது உதடுகள் அல்குல் மடல்களெனத் திறந்தன. அவனது வாசம் கலந்த இன்மணம் கொண்ட தீயிலைப் புகை அவளது வாயில் நிறைந்து கலைந்து பிரிந்தது. அவளின் மூச்சின் நறுமணம் கொல்வேலை முறுக்கிக் காற்றைக் கீறுவதென எழச் செய்தது. அவளது மெல்மஞ்சள் மேனியின் வண்ணம் தங்கம் பொலிவதென மயக்குக் காட்டியது. கருமுளைகள் போன்று துடித்துக் கொண்டிருந்த முலைக் கோட்டுகள் கூர்ந்து விழிதிறக்கத் தொடங்கின. அரூபியின் உதடுகளை மேலும் நெருங்கிப் புகையை இரண்டாவது முறையாக ஊதினான். அவளது மேனிமயிர்கள் சிலிர்த்து எழுவதைக் கண்டான். அவனுள் ஆடிய விழைவின் தேவன் அவன் அறியாக் கணத்தில் அவன் சிரசைத் தள்ளினான். உதட்டில் ஒரு ஒற்றல் கொத்தி எழுந்து பிரிந்தான். அவள் உதட்டில் உதடு வண்டில் வண்டென ஒட்டியிருக்க மூன்றாவது புகையை ஊதினான். அவள் வெளியே ஊதிய மிச்சப் புகையை உறிந்தான். உறிகையில் உதடுகள் குவிந்து உதட்டின் நுனிகளையும் தொட்டு மலர்ந்தன. அவளது நாக்கு ஒருமுறை அவளது உதட்டை நனைத்துத் திரும்பியது. அவளது மேனி அதிரும் பறைத் தோலென நடுக்குக் கொண்டிருப்பதைக் கண்டவன் நான்காவது முறை புகையை இழுத்து அவள் தலையின் பின்புறம் நின்றபடி குனிந்து வாயில் வாயைக் கூம்பும் மலரிதழென ஒற்றி ஊதினான். மடிமுட்டிப் பால்குடிக்கும் இளங்கன்றென அவனது உதடுகளை உறிஞ்சிக் கொண்டே புகையை இழுத்தாள் அரூபி. அவளது நனைந்த விசிறிக் கூந்தலின் ஈரம் இராப்பிரியனின் முழங்கால்களின் கீழ் பரவியிருந்தது. அவளது விழிகளின் அரைநிலவு மீண்டும் திறந்து கொள்ள எழுந்து முழங்கால்களில் நின்றபடி துதியை இழுத்தவனின் இளங்குறி இடையாடையில் துளைத்து மோதி நிற்பதைக் கண்டாள். அவனது கரும்புக் கருமேனி தீயின் அலைநெளிவில் தாகங் கொண்டு எரிவதென நடுங்கியது. நடுங்கும் இரு தீ நாக்குகளென இருவரும் நிலவறையில் புலனாகாத வல்லமைகளின் முன் அஞ்சிக் கொண்டிருந்தனர்.
அவளது மார்பின் மூச்சு வேகமெடுத்து ஏறியிறங்குவதைக் குனிந்து நோக்கிய இராப்பிரியன் இடைத்துணியுடன் குறி அவளின் உச்சந்தலையில் உரச அவனது மார்பின் வலக்காம்பு அவளின் உதடுகளில் தொட அவளின் இடமுலையின் காம்பினில் உதடு குவித்து உறிஞ்சிக் கொண்டே புகையை நழுவவிட்டான். மார்பின் செவ்விரத்தினக் கல் புகையுள் விழியென மயக்கொளிர் சூடியது. மின்னல் விழுந்தவளென நடுங்கி கார்மஞ்சுத் தோலில் மின்னல்கள் படரலனாள் அரூபி. அவளது முலைக்காம்பு கரைவது போல் அவன் நாவுக்குப் பணிந்தது. இருமுலைக் காம்புகளிலும் அவன் கவ்வி உறிஞ்ச அவளில் மிதந்த காமத்தின் நெருப்பலைகளை உறிஞ்சிக் குடிப்பவளென அவன் மார்பை முத்தமிட்டு உறிஞ்சினாள். அவளது உதடுகள் மார்பினில் பட்டதும் இராப்பிரியனில் மின்மினிகள் எழுந்து விழிகளில் பறந்தலைய முலைகளில் முயல்களெனத் தாவிக் குதித்து உறிஞ்சினான். முலைக் காம்புகளின் வழியே அவளின் உயிரை உறிஞ்சி தன் ஆணைக்குப் பணியவைப்பவனென அவளது முலைகளை நாவால் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். தலை மேல் கிடந்த அவளது குளிர்ந்த கரங்கள் எழுந்து அவன் இடைத்துணி அவிழ்த்தெறிந்து இளங்குறியையும் குலையையும் பற்றின. கையில் அகப்பட்ட தீக்கொழுந்தென அவன் குறியை உருவினாள். தீக்கொழுந்து அனற் சர்ப்பமெனத் தலைவிரித்தாடியது. அவள் மேல் உடும்பென நகர்ந்து அல்குலில் நாவைத்துச் சுழற்றினான். மின்னல் அவளின் அல்குலில் நுழைந்து சிரசில் முட்டுகிறதென மேனி துடித்து நாவில் எழுந்த மின்னலின் துடிப்பில் அவன் இளங்குறியை வாயில் வைத்துக் குதப்பினாள். இராப்பிரியன் துடிதுடித்து முனகினான். அவனுள் அனைத்தும் குறியில் விழிகூர்ந்தன. ஒவ்வொரு தடவை அரூபியின் நா சுழலுகையிலும் அவனறியாத விண்ணுலகத்தில் ஆயிரம் இளம் பெண்கள் அவனுடன் முத்தமிட்டு ஆடினர். அவன் குறியை ஆளுக்கொரு முறை விம்மிச் சுவைத்தனர். வேண்டும் வேண்டுமென அவனை முத்தமிட்டுக் கெஞ்சினர். அரூபி குறிமட்டுமே உடலென அறிந்தவள் போல் குறியை அவளுள் ஊற வைத்தாள். கால்களைத் தூக்கி அவன் கழுத்தினில் பிடிகாப்பென இட்டு அவன் தலையை அல்குலில் அழுத்தினாள். கள் கலயத்தில் வாய்வைத்த மந்தியென அல்குலில் மயங்கி மதனம் அருந்தினான். அவள் யோனி மடல்கள் தழைந்து ஈரமூறின. மதன மேட்டில் இதயத்தின் துடிப்புத் தவித்துத் துள்ளியது. கர வளைகள் குலுங்கிச் சிரித்தன. மீன்கள் அவளின் கருந்தோல் ஆழியில் நீந்திக் களித்தன.
மதனமேட்டைப் பற்றி உறிஞ்சி வாயில் நிறைத்து அரூபியின் பெணிகுறி அதுவென விழுங்கினான். தலையும் வாலும் சுழன்று விழுங்கும் இரு நாகங்களென இருவரும் மஞ்சத்தில் வெடித்தனர். அரூபி நாண்விட்டெழுந்து முழங்காலில் நின்றாள். இராப்பிரியன் எழுந்து நின்று அவள் உதட்டில் அவன் குறியைத் தேய்த்து புறந்தலையை இருகைகளால் கிளர்த்தி அவளின் வாயில் புணர்ந்தான். எச்சிலும் குறியும் மோதும் ஒலி ஒன்றன் பின் ஒன்றாய்க் கணமும் இடைவெளியின்றிக் குளத்தில் குத்தித்துத் தற்கொலை செய்யும் பெருந்தவளைகளின் ஒலித்தாளமெனக் கேட்டுக் கொண்டிருந்தது. மயக்கு மயக்கு என விழிகள் மூடிக்கொண்டன. இருபுயற் கண்களென விழிகள் திறந்து அவனை இழுத்தது. இராப்பிரியன் அதில் ஆழ்ந்து ஆழ்ந்து மேனி விடைகரும்பென உறைய அவள் தலையை விட்டுக் கரங்களைத் தூக்கித் தன் புறந்தலையில் கட்டி இறுக்கிக் கொண்டான். அவனை உறிஞ்சிக் கொல்பவளென ஆயிரம் மோகினிகள் அவளால் வாய்கொண்டதென வாயில் நுழையும் ஒவ்வொரு முறையையும் ஒவ்வொரு மோகினிக்கும் தானமென அவன் குறியை அளித்தாள். தன் நாவு நாவு என ஆணுடல் முத்தமிட விழைவது ஆண்குறியை என்பதை அறிவாள் அரூபி.
ஆணுடல் மோகக் கலசம். அதன் அமுதும் நஞ்சும் விழைவின் மத்தில் சுழற்றப்படுபவை. எவள் அவன் ஆழத்தை அறிகிறாளோ அவள் அவன் அகத்தை நிலத்தில் தலைசாய்த்து மூச்சில் தாழ்பணியும் நாயெனக் கிடத்துவாள். அவன் நஞ்சை உண்ணும் பெண்ணிடமே
நாயிற் கடையாய்க் கிடக்கும் ஆணின் ஆழம். மழலையின் வாயில் இனிப்பெனச் சுவைப்பது எதுவோ அதுவே பெண்ணின் வாயில் இடப்படும் குறியின் விழைவு. அது தீராது சுவைபட்டு எஞ்சாது உறிஞ்சப்பட்டு இல்லாமல் வாய் அழிய வேண்டியது. கடும் போரின் பின் தீராத வஞ்சங்களில் வெல்லப்பட்ட பின் ஆயிரமாயிரமாண்டுகள் கரங்கள் கட்டப்பட்டு காமம் அனல் குன்றாது மூட்டப்பட்ட பின் ஒரே ஒருமுறை எஞ்சும் இறுதிக் கணத்தில் அளிக்கப்பட்ட காமத்தின் ஒரே தொடுகை குறியை வாயில் உறிதலென எண்ணித் தொடுபவள். தொட்டுருவி வாய்கொள்பவள். எவளோ அவளே அவனில் துடிக்கும் விழைவின் பித்துச்சிரசை ஆள்பவள். ஆண்குறி ஆயிரம் தீராத புணர்விழைவு கொண்டது. அல்குலைப் போலவே. ஆயினும் மேனியின் எளிய உடலியல்பால் அனல் தீர்ந்து அழிவது. அல்குல் பெண்ணைப் போன்றது. அதற்குத் தீர்தலும் அழிதலும் வற்றலும் ஒடுங்குதலும் இல்லை. தொல்காம தெய்வங்களின் விழைவின் வாயென ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அல்குல் பெருங்கொடையென நிகழ்ந்திருக்கிறது. வற்றா விழைவின் வாயே வாழ்க என எண்ணிக் கொண்டான் இராப்பிரியன். அவன் கல்விச் சாலையில் காமம் பயிலும் ஓலைக்கட்டுகளை எவருமறியா இருளில் விழிமணிகள் சுடரேற்றி வாசித்துக் கொண்டிருப்பான். காமத்தைச் சொல்லில் பயில்தலில் காவியம் உண்டென நண்பர்களிடம் சொல்வான். அவனது நண்பர்களுக்கு அச்சொற்கள் பொருளாக மாறவில்லை. அவனோ ஒவ்வொரு சொல்லிணைவிலும் விந்தைத் திரட்டி அருமணியெனச் சேர்த்தான். சுயமைதூனம் செய்வதை அவன் வெறுத்தான். ஒன்றில் புணர்கிறேன். இல்லையேல் பயில்கிறேன் என நோன்பு கொண்டிருந்தான். கனவில் எழும் மாயப்புணர்ச்சிகளால் விந்து துளித்துப் பாயும் புலரிகளில் உடல் தாழா எடையுடன் சோர்வான்.
ஒருமுறை நிசியில் எருவீரன் தனது இணையாள் கருச்சியை மதுச்சாலையின் நீள்குற்றியில் பரத்தி வைத்துப் புணர்ந்ததைப் பின்வாயிலின் தாழ்க்கோல் துளையால் நோக்கி நின்றான். மதுவெறியில் அவளை விலங்கு வெறியில் புணர்ந்தான் எருவீரன். அவள் முனகிச் சீறி அவனது மார்பில் அறைந்து கொண்டே கத்திக் கொண்டிருந்தாள். அவன் சிலகணங்களில் விந்து சீறி அவளின் தொடை நனைத்து எச்சமென விழ குறிசுருங்கிப் படுத்தான். அவள் கால்கள் விரிந்து கூரையை நோக்கி விழிதிறந்திருக்க அல்குலில் இருவிரல்களை இட்டுஎடுத்துச் சுயமைதூனம் செய்து கொண்டிருந்தாள். இராப்பிரியனுள் எழுந்த சொற்கள் மலைக் குளவிகளை விரட்டும் தீயென அவனை அலறச் செய்து கொண்டிருந்தது. அவனது குறி தளிர்த்துத் தடித்து அம்பென நீண்டு நோவு கொண்டது. வாயிலைத் திறந்து கூடத்திற்கு வந்தவனைக் கண்ட கருச்சி அவனை நோக்கிக் கொண்டே விரலிட்டுக்
கொண்டிருந்தாள். அவன் அவளருகே சென்று பரந்து தழைந்த கருமாமுலைகளையும் துடித்து எரியும் கோட்டுகளையும் நோக்கி நின்றான். அவள் மெல்முனகலுடன் வாய் குவிந்து விரிய விழியால் அவனை உற்றுக் கொண்டே சீறிப் பாய்ந்து மதனம் பெருக்கினாள். அவனது இடையாடைக்குள் குறிவிடைத்து அணையுடைத்த வெள்ள விரிவெனச் சுக்கிலம் பெருகியது. அவள் அவனை அகலாதும் அணுகாதும் காயவைத்தாள். ஒரு தொடாக் காமம் பல்லாயிரம் தொடுகலவிகளை விட விழைவில் மூத்தது என்பவை அவன் பயின்ற சொற்கள். அதன் பொருளை மெய்யென அளித்தவள் கருச்சி. எவள் காமத்தை அளிக்காமலும் விலக்காமலும் விழியுறுகிறாளோ அவளே காமத்தில் கொல்தெய்வம் என்பதானவள்.
அரூபி எழுந்து சாணத்தால் மெழுகப்பட்டிருந்த நிலவறைச் சுவற்றில் திரும்பி நின்றாள். அவள் மேனியில் வியர்வை உடலெங்கும் திறந்த உவகை ஊற்றுகளின் சிந்தும் தீர்த்தமென வழிந்து கொண்டிருந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் அவள் முதுகும் பிருஷ்டங்களும் பின் தொடைகளும் நீர் வழியும் மாகனவில் கண்ட பெண் சிலையென மயக்கு விழி காட்டியது. அது மெய்யே எனவும் அகம் விழித்து ஆடியது. அங்கு நின்றிருப்பவள் தன்னை அருந்தென நின்று பொழியும் அருவி. தன்னை விருந்தென அளித்துக் காத்திருக்கும் இள மான். அவன் விரல்கள் அதிர்வை இழந்து நாண்கொண்டன. அவனுள் ததும்பிய ஓலைச் சொற்கள் ஒவ்வொன்றும் உடல் கொண்டு முன் நின்றது. அவனுடலில் வழிந்த வியர்வையை அள்ளி வழித்துத் துடைத்து எறிந்தான். தன் குழலை முடிந்து தேகத்தை நிமிர்த்தி மாமலைச் சிகரத்தில் ஒருகால் ஊன்றி ஆழியில் பாயும் யோகனென நின்று நோக்கினான். சொல்லும் உடலுமெனப் புணர்வுச்சம் கொண்டான். சொல்லே புணர்வை மயக்கும் பேரழகி என்ற சொல்லைப் புது ஓலையொன்றில் குற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
அரூபி சுவற்றில் சாய்ந்து தழைந்து நிற்க மண்டியிட்டு அமர்ந்து அவள் பிருஷ்டப் பிளவை விரித்து குதவழியை நாவல் தடவினான். அவனது நாவு ஒவ்வொரு முறை தொடுகையிலும் ஓரங்குலமும் ஓர்தடிப்பும் கூடுகிறதென எண்ணினான். முதுபசுவின் இளம் புல் சுவைக்கும் விழைவென்றான நாவொன்று அவனில் நீண்டது. கீழமர்ந்து திரும்பி அவள் அல்குலை இளம்புற்காடென ஆநாவால் வழித்துத் தொட்டு வாயில் உழற்றினான். அரூபி ஆகாயத்தில் விண்மீன் பெருக்கிடை மாயக் காமன்களின் நூறு மேனிகள் தன்னை அளைவதென அகத்தில் கண்டாள். பீடமென விண்ணெழுந்த மேகத்தில் அமர்ந்தபடி தீராத நாவுகளுக்குத் தன் யோனியை அருளெனக் கொடுத்து அலகிலாது முடிவிலாது நொடி இடை வெளியிலாது அணுத்துளி குன்றாது நீந்தினாள். அவளில் ஆடிய மதர்த்தங்கள் எங்கிருந்து மேனி புகுந்ததென ஊழ்கம் கொண்டாள். உற்று நோக்க விலகும் எண்ணமென இல்லாது எண்ணமோ சொல்லோ சூடாது நின்ற மாமதனப் பெருவூற்றே தான் என உணர்ந்தாள். விழிதிறந்து இராப்பிரியனை நோக்கினாள். ஒரு அகவல் முனகல் கலைந்து குரலெழுந்து அவனை எழுப்பி அணைத்து முத்தமிட்டது. உதடுகளும் நாவுகளும் உருகிப் பிணைந்தன. நீரில் நீர் மோதியது. தேனில் தேன் வழுவியது. மஞ்சத்தில் விழுந்து படுத்தவளின் கால்களைத் தூக்கித் தன் தோள்களில் இட்டு அவள் முதுகு அந்தரத்தில் எழுந்து தூங்க அல்குலில் குறிநுழைத்தான். அவளில் எழாத காமங்கள் கரைபுரண்டன. அல்குலில் அவளறியாத இடங்களை அவன் குறி தொட்டுத் திரும்பியது. திரும்பி வேறொரு திசையில் வேறொரு ஊற்றைக் கண்டது. அவளின் உதடுகள் விரிந்து திறந்து ஆவென்று உறைந்தது. ஊவென்று சுருண்டது. தாவென்று கனன்றது. ஓவென்று அழைத்தது. ஹம் என்று மூடியது. இம்மென்று ஒட்டியது. மாவென்று பிரிந்தது. கூவென்று ஒலித்தது. மதனம் சுரந்து சுரந்து மதனக்கடலென மதர்த்தாள் அரூபி. அவளில் ஒலியென எழுந்த ஒவ்வொன்றும் இராப்பிரியனில் சொல்லென எழுந்தது. இளம் விறலி அரூபி அவளின் வாயில் குவிந்த பாடலின் சொல்லால் அவன் ஆடலைப் பாடினாள். யாழொன்று தொடாது குழலொன்று படாது இசை பரவியது. அவளைத் திருப்பிக் கிடத்தி பின் வழி புணர்ந்தான். கலவியில் மஞ்சம் மதனமூறியது. வியர்வையில் ஈருடல் நீரலை ஆகியது. இருதீக்கொழுந்துகள் நோக்கியிருக்க பேரிருள் நிலவறையைக் காத்து நிற்க விழவின் வாயிலில் பாதாள நாகங்கள் எழுந்து வால் நின்றன. பிரியனின் யோகம் புணர்வென்றானது. அரூபியின் காமம் பாடலென்றானது. சொல்லில் மீட்டிய கனவில் சொல்லை அழித்து ஒலியை அழித்து விழியை அழித்து அகத்தை அழித்து அழிவிலா உச்சியில் ஆடிய மானுடரை வாழ்த்தின நாகங்கள். வாழ்த்தியது இருள். வாழ்த்தின தீவிழியில் விழவின் தெய்வங்கள்.
நெடுந்தொலைவிருந்து அருகோடி வரும் பேய்மழையின் பெருங்காலடி ஓசைகள் போல் மஞ்சம் விதிர்த்தது. அவனும் அவளும் அயர்ந்து சரிய வியர்வையில் மூழ்கிய மேனிகளில் இதயங்கள் மட்டும் தாவிக்குதித்துத் தம் தீரா ஆடலை எண்ணித் திளைத்தன. இருவரின் மூச்சும் ஆறாது ஆற அமர்ந்து எழுந்தது. இளங் கனவிலென நிலவறை புன்னகைத்தது.
நனவு இன்மையில் தோன்று தேகனே
வியர்தோலில் இனிகனி
மஞ்சுதாவு கருமந்தி
நிலவுஊறு பித்து ஆழி
துளைமூங்கில் நெளிநாதம்
தழை பசும்புல்லில் புடவித் தனிப்பனி
ஆநாவெடுத்த யோனிக் கள்வன்
நிரைதவறு அல்குலைஞன்
முனகில் செவியுருக்கும் புணர் களியோன்
விழிமயங்கு கருமாபுலியே
பிலவு உறங்கு கொடுமாபுலியே
வேட்டை திளை வெறிமாபுலியே
அணைத்துக் கிட காதல்மாபுலியே
அதரத் துடி அதுவெனக் கவ்வ
துளிர்முலை எரி எச்சில் நீரூற
அல்குல் அளை அக்குறி தீண்ட
நாத்தோல் சிவ வெண்சுக்கிலம் ஏந்த
முத்தில் மாசென முளை கருணை வாழி
எச்சில் வாசமென நிலை
காமம் வாழி
இச்சையில் எழுந்திட்ட நாவுகள் வாழி
உரைக்காத சொல்லில் எழும் ஓசைகள் வாழி
உதித்துச் சுடரும் அனலே வாழி
உதிக்கும் வரை இருளே வாழி.