82: புலரிப்பனி

82: புலரிப்பனி

புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி அறுபடாது தொடர்ந்து செல்லும் எறும்புகளைப் போல மக்கள் கூட்டம் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சதுக்கத்திலிருந்து அம்பலம் செல்லும் வழியை ஒருமுறை நோக்கும் எண்ணம் இளம் பாணனுக்குள் விந்து சீறியடங்கிய பின்னர் குறியை நோக்கும் விழைவென எழுந்தது. அந்த ஒப்புமையை எண்ணிச் சிரித்துக் கொண்டே இன்நறுந் தைலங்கள் பூசி புதுப்பூக்கள் சூடி ஆபரணங்கள் பூண்டு புலரியின் பறவைப் பாடல்களென விரிந்திருந்த மானிடர் முகங்களை நோக்கினான். ஒவ்வொருவரும் அன்று பிறந்த குழவியின் வியப்புடன் புடவியை நோக்கினர். அப்பொழுது தான் களியென்று அறிந்தவர் போலும் களிக்குச் செல்லும் கனவில் நடப்பவர் போலும் சிரித்துக் கொண்டனர்.

கீரிமேட்டின் மேலே கரும்பாறையால் ஆன யானை போன்றிருந்த கீரியின் சிற்றாலயத்தை நோக்கினான் இளம் பாணன். அப்பகுதி மட்டும் மணலால் நிறைக்கப்பட்டிருப்பதை நோக்கினான். வெவ்வேறு நிலங்களிலிருந்து அள்ளப்பட்ட மண்ணின் குழைவுகள் அம்பல வெளியைச் சுற்றிப் பல அடுக்குகளில் நீண்டிருந்தமையைக் கவனித்தான். செம்மண் குழைவுகளும் வண்டல் குற்றும் மண்ணும் மணலும் கருங்களியும் பசும் புற்கள் சிதைந்து கிடந்த கருமையும் செம்மையும் கலந்த சேற்று மண்ணுமென ஒவ்வொன்றும் பட்டினத்தின் திசைவெளிகளிலிருந்து அலைத்தெடுக்கப்பட்டு வெளியாகியிருந்தன. நேற்றைய இரவில் ஆடியெழுந்த சூர்ப்பனகையின் லட்சம் கால்களின் பாதத் தடங்கள் குழைந்து பிதுங்கியும் அழுந்திச் சிலையாகியும் உறைந்த மண்ணில் கிழிந்து உருளும் ஆடைத் துண்டுகளும் உதிர்ந்து நசிந்து கசங்கிய மலர்களும் பசுமிலைகளும் ஊன் துண்டுகளும் உடைந்த கள் கலயங்களும் பரந்து படபடத்தும் குவைகளெனச் சிதறியும் கிடந்தன.
கீரியின் சிற்றாலயத்தில் எவரோ சில பொன்னொச்சி மலர்களை வைத்திருந்தார்கள். புலரியில் ஏற்றப்பட்ட அகற் சுடர் அவிந்து புகைக்கோடுகள் நீண்டிருந்தன. எல்லா தெய்வங்களும் எங்கோ எவரால் எதற்காகவோ வணங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என எண்ணினான் இளம் பாணன். விரிந்த விழிகளால் திரும்பி அம்பலத்தை நோக்கியவன் மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தான். வஞ்சத்தில் தோற்ற பெண்ணின் அகமெனக் கொதித்துக் குலைந்து கலைந்து கிடந்தது அம்பல வெளி. இளங்கதிர்கள் தொட்டு எழுப்பிய பனியின் மென்புகை நீராவியலையென வியர்த்துக் கொண்டிருந்தது தொலைவில் வான் மினுக்கெனத் தோன்றியது. இளம் ஆடவனால் கைவிடப்பட்ட காதலியெனத் தனித்திருந்த அம்பலத்தை நோக்கி நடந்தான் இளம் பாணன். மரப்படிகளில் உணவும் எலும்புகளும் குருதிச் சோற்றுப் பருக்கைகளும் சேவல்களின் தலைகளும் சிறகுகளும் உதிர்ந்து கிடந்தன. கழிவில் எழும் நாற்றம் காற்றில் அலையடிப்பென விரிந்து கொண்டிருந்தது.

அம்பலத்தில் ஏறியவன் சுற்றியிருந்த வெற்றாடல் வெளியை நோக்கினான். மானுடர் கட்டற்றுக் களியுற்று மீளும் தோறும் உருக்கொள்ளும் அகப்பித்தென விரிந்து தளும்பியன நிலத்தில் குவைகள். ஆயிரக்கணக்கான புலிவீரர்கள் அவ்வெளியை பரந்து எரிந்து வரும் தீயின் வடிவுடன் சுத்தமாக்கிக் கொண்டிருந்தனர். எவரோ களியுற எவரோ காவலுக்கும் தூய்மைக்குமென அமைகிறார்கள். அங்கனம் அமைபவர்களின் களியென்பது எதனால் ஆனது என எண்ணிக் கொண்டிருந்தான் இளம் பாணன். நீண்ட பெரும் சகடங்களில் கழிவுகள் சேர்க்கப்பட்டு வனத்திடை தோண்டிய குழிகளில் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. புலிவீரர்கள் தூய்மைப் பணியைச் சிரித்தும் வேடிக்கை சொல்லியும் ஆற்றிக் கொண்டிருந்தனர். சக மானுடருக்கெனச் சிந்தும் வியர்வையின் புன்னகை களியின் பெருஞ்சிரிப்பலைகளையும் பித்தினையும் விட மேலானது என எண்ணினான். குடிகளின் சமநிலையென்பதும் மீளுவோம் என்ற நம்பிக்கையுமே பித்தில் அலைவுறச் செய்வது. முழுபித்தில் மூழ்கியழிய மானுட அகம் ஒண்ணாது. மீட்பவர்களுக்கான தேடலும் தேர்வும் ஆயிரம் நுண்ணடுக்குகள் கொண்டு நோக்கப்படுவது அதனாலேயே. சிறு தேர்களில் அறிவிப்புகளைச் செய்து சென்ற வீரர்கள் நீர்க்கலயங்களிலிருந்து பதநீரை வார்த்தளித்தனர். மயக்கின்றி நிகழும் பணிகளில் களியென எழுவது எது. அகம் தனக்குத் தானே உண்டாக்கிக் கொள்ளும் போதையால் உண்டாகுவது. எந்தத் தீங்கும் உடலுக்கு இழைக்காதது. மானுட உடலுக்குத் தீங்கற்ற நோய் விரையச் செய்யாத போதைகளே மண்ணில் இல்லை. மதுவோ கள்ளோ தீயிலையோ வெற்றிலையும் பாக்குமோ எதுவும் உடலை அரித்து எரிப்பதனாலேயே களியளிப்பது. அகமளிக்கும் போதை சொற்களை அருந்துவது. இயற்கையும் மானுடரும் ஆக்கியளிக்கும் புற போதைகள் அனைத்தும் மானுட அகத்தைக் கலைத்து மயக்கில் ஆழ்த்துவன. செயலில் உண்டாகும் களியோ போதையும் மருந்துமென ஆவது. அகத்தின் முனைகளை மங்கச் செய்வதே புற போதைகளின் பணி. அகத்தைக் கூர்த்து யோகமெனப் பயில்வதே செயல்போதையின் பணி.

இளம் பாணன் செயலில் களியுறும் இளையோரைக் கண்டு அகம் கரைந்து விழி நீர் மல்கினான். சூரியனின் மென்பாதம் போன்ற கதிர்களினிடையில் கரும்புலிக் குருளைகள் விளையாடும் திடலெனக் குவை வெளியை எண்ணிக் கொண்டான். இது முற்றிலும் பிறிதான வெளியில் நிகழும் களி. இதுவும் களியே. நெறியினை ஆக்கிக் காக்கும் கரங்களின் களியென எண்ணியவன் அம்பலத்தில் கால்களைத் தூங்க விட்டு அமர்ந்து கொண்டான். காற்று அடிப்பாதங்களைத் தொட்டுத் தூக்குவது போல் தோன்றியது. இனிய கிளர்வெழ இரவின் மயக்குகள் அவன் நினைவில் மீண்டு புரண்டன. ஒரு நாளென்பது இத்தனை தொலைவுகளா என எண்ணிக் கொண்டான். இத்தனை தொலைவு நீளங்களையும் அனுபவங்களையும் அளிப்பதாலேயே விழவுகள் மானுடரை உந்திக்கொண்டிருக்கின்றன. புலரியில் எஞ்சிய பனி இளம் பாணனின் அகத்திற்குள்ளெனக் குளிர்ந்தது. வேறுகாடாரின் நினைவெழவே விழவில் தொலைந்த குழவியென அவனில் விக்கல் எழுந்தது. இரவில் பதும்மை அவனை அழைத்து வந்த வழி மறந்து விட்டது. இருளில் பரத்தையர் தெருவுக்கு உடல்களின் பாதையால் சென்றோம் என்ற நினைவே தங்கியிருக்கிறது. இருதியாளும் களித்தோழியரும் எக்கணத்தில் மறைந்தார்கள் என்பதை நினைவின் புதர்கள் ஒழித்துக் கொண்டன. அங்கினியின் வீட்டில் கூடத்தில் விழித்த கணத்தில் பதும்மையின் கால்களை மட்டும் நினைவு ஒரு கனவெனச் சூடிக் கொண்டிருந்தது. பின்னர் பரத்தையர் தெருவை அறிய எந்த நிலத்திலும் வழிகாட்டிகளை உடனழைத்து வரத் தேவையில்லை என எண்ணிச் சிரித்துக் கொண்டான். முழு இரவும் வண்ண நீர்க்குமிழ்கள் என அவனுள் நிரம்பின.

*

அரூபி மயக்கிலிருந்து விழித்த போது நிலவறையில் காலமின்மை என்ற மாசர்ப்பம் தன் உடலை வளைத்து எழுந்து பாதாளத்தின் வாயிலால் கடந்து சென்றது. இராப்பிரியன் இரவு முழுவதும் நினைவு எழும் கணமெல்லாம் அவளுடன் இணைந்து கிடந்ததை எண்ணிக் கொண்டாள். விழிப்பின் முதல் நினைவு தித்திக்கும் நாவொன்றை நாவால் தொட்டது போல் மேனி மெய்ப்புல்கள் எழுந்தன. மோகம் கடக்கும் கடலோடியென அவன் கழிபற்றி நின்ற காட்சிகள் தோன்ற கலைத்து விடுபவள் போல் தலையசைத்துச் சிரித்தாள். நிலவறையின் பாதையால் மேலேறிச் செல்ல இளமொளி பட்டுக் கண்கள் பேற்றுக் கிடங்கிலிருந்து புடவி நோக்கியெழும் நாய்க்குட்டிகளின் குறுமணி விழிகளெனக் கூசியது. கண்களைப் பூஞ்சிக் கொண்டு மேலேறியவள் எவரும் எழுந்திருக்காததைக் கண்டு பின்வாயிலுக்குச் சென்றாள். நீர்க்கலயத்தில் சூடான கிணற்று நீர் வார்க்கப்பட்டிருந்தது. ஆடைகளைந்து அள்ளிக் குளித்தாள். நீர் அவளது மேனியில் உருண்டது முன்னைய இரவின் ஒவ்வொரு அணுத்துமியினதும் தொடுகையென எண்ணிக் கொண்டாள். எருவீரனின் உலராடை வைத்த இடத்திலேயே கிடந்தது. எடுத்துத் துடைத்த பின் ஆடையை உடுத்திக் கொண்டு கூந்தலை அள்ளிச் சுருளாய் முடிந்தாள். ஈரச் சிதறல்கள் முதுகில் வரிகளென மினுங்கிக் கரைந்தன.

பின்வாயிலைத் திறந்து மதுச்சாலையினுள் வந்தவள் அனைத்தும் ஒருங்கியிருப்பதைக் கண்டாள். எப்பொழுதில் அவன் எழுந்தான் என அறியாது நின்றவளின் விழிகள் அவனைத் தேடின. பால்குடித்து மகிழ்ந்து துள்ளியாடும் பசுக்கன்றென அவன் முன்வாயிலை ஒருக்கிக் கொண்டிருந்தான். அவனது மேனியில் செம்மையெனக் குருதி தளிர்த்திருப்பது போல் மெருகு கூடியிருந்தது. மதுச்சாலைத் திண்ணையில் கீர்த்த மந்திரரும் எருவீரனும் இரண்டு கல் உருளைகளென உருண்டும் புரண்டும் நுளம்புகளை விரட்டிக் கொண்டும் துயிலிலிருந்தனர். அவளுடைய தோழிகள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்துறங்கிக் கொண்டிருந்தனர். ஆடைகள் கசங்கிக் கலைந்து கால்களில் ஏறியும் முலைகளில் பாதி திறந்தும் இடைகள் ஏறியிறங்கவும் நீள்துயில் கொண்டிருந்தனர். அரூபி முன்வாயிலைக் கடந்து திண்ணைக்கு வந்தாள். இராப்பிரியன் அரூபியைக் கண்டதும் மெல்லிய அச்சம் கொண்ட விழிகளை திறப்பது போல் தாழ்த்தியும் தாழ்த்துவது போல் முன்னைக்கு ஓர் அடுக்கு உயர்த்தியும் நோக்குவதைக் கண்டு சிற்றிளமையின் ஆடலென நகைத்தாள்.

“பிரியா. நல்ல துயிலா” என மாதுளைப் பற்கள் விரியச் சிரித்துக் கொண்டு மருள் விழிகளால் எனக் கேட்டாள். “வாழ்நாளில் அப்படியொரு துயில் வாய்த்ததில்லை அக்கா. உறங்கிய கணத்திற்கும் மறுகணத்தின் விழிப்புக்கும் இடையே ஒரு துயில். ஊஞ்சலில் எழுந்து மிதந்து கொண்டேயிருப்பது போல் பறக்கிறது மேனி. சோர்வின்றி விடியும் முழுமுதற் காலை” எனச் சொல்லி உதடுகளை மெல்ல நாநுனியால் நக்கிக் கொண்டு மூடிக்கொண்டான். அரூபி அவன் தவிப்பைக் கண்ட பின்னர் “புலரியில் துயில்வதும் இன்பம் சேர்ப்பதே பிரியா. என்ன சொல்கிறாய்” எனச் சொல்லி நாவை மடித்துக் கடிப்பவள் போல் வைத்துக் கொண்டு கேட்டாள். “இனிய கனவுகள் எவருக்குத் தான் பிரியமில்லை. பணியிருக்கிறதே” எனச் சொல்லிச் சலித்தான். “எனக்கொரு மதுக்குப்பி வேண்டும். தருகிறாயா” என்றாள். “நிலவறையில் தான் இருக்கிறது” எனச் சொல்லிக் கதுப்புக்குள் சிரித்தான் இராப்பிரியன். “குறும்பு கூடிவிட்டதடா உனக்கு” எனச் சொல்லி அவனது தோளில் அறைந்தாள்.

பட்டின வீதிகளைப் புலிகள் தூய்மையாக்கிக் கொண்டிருந்தது மெய்ப்போரென்றின் விரைவுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது. காகங்களும் நாகணவாய்களும் நிலக்கிளிகளும் எஞ்சியவை உண்டு கரைந்து கத்தி ஒலியெழுப்பி மிதந்தும் இறங்கியும் வயிறு நிறைத்துக் கொண்டிருந்தன. இராப்பிரியன் பின்வாயிலைத் திறந்து மதுக்குப்பியொன்றை எடுத்துக் கொண்டு திரும்பிய போது வாயிலைச் சாற்றிக் கொண்டு உள்நுழைந்த அரூபி அவனைக் கட்டியணைத்தாள். கனிவில் மலர்ந்த அணைப்பென தேகத்தில் இனிமை கூட கரங்களால் அவளின் முதுகைத் தடவி இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் இராப்பிரியன். அவனது சிறுவிசையைத் தாங்காதவள் போல் நடிப்புக் கொண்டு தலையை உயர்த்தி “என்னைக் கொன்றுவிடாதீர்கள் இளங் காதலனே” எனச் சிரித்தாள். அவளது கன்னங்களில் ஊடிழைந்த ஒளியில் தெய்வம் போல் தோன்றினாள் அரூபி. கன்னங்களை இமைக்க மறந்து நோக்கியவனின் மார்பிலே முத்தமிட்டாள். ஒற்றியெடுக்கப்பட்ட மின்னல் என எண்ணினான் இராப்பிரியன். அவனுள் அன்றைய நாளுக்கான ஆற்றல்கள் புரண்டு வருவதை நோக்கியவன் கணமிடை ஒழியாது அவள் தேகத்தில் ஆடையிலென முத்தாடிக் கொண்டு முழந்தாளில் அமர்ந்து இடை முத்தித் தொடை முத்திக் கழல் முத்தி கால்விரல்கள் முத்தி கால்விரல் நுனிகள் முத்தி முத்தி தலையுயர்த்தினான். ஒரு மின்னலுக்கு அளிக்கப்பட்ட ஓராயிரம் இடியோசைகளென அவன் முத்தங்கள் அவள் தேகத்தில் தகதிமித்தது. எழுந்து மீண்டும் அணைத்துக் கொண்டான். இம்முறை எலும்புகளை உடைத்துப் பொடிப் பொடியாக்கி அவளை அவனது யாக்கையில் கோர்ப்பவனென விசை கொண்டிருந்தான். அரூபி மலைப்பாம்பிடம் சிக்கிக் கொண்ட மானெனத் திமிறினாள். எப்பெரும் பாம்பையும் தொட்டு மயக்குவது உதடே என ஞானம் கொண்டவள் அவன் உதடுகளைப் பற்றி உறிஞ்சி நாக்கைச் சுழற்றி எச்சிலைக் குடித்தாள். அந்த ஒரு முத்தம் அவனில் ஆயிரம் காதங்கள் தொலைவில் விழுந்து ஆயிரம் உயரங்கள் எழுந்து கூத்தாடியது. இனிமை என்ற சொல் நினைவில் துடித்துப் பிறந்தது.

மதுக்குப்பியை வாங்கியவள் அவனை நோக்கி நகைத்துக் கொண்டு பின்னால் திரும்பி நடந்தபடி மெல்லத் தக்கையைத் திறந்து குடித்துக் கொண்டே மேலும் மேலுமென உறுத்துச் சிரித்தாள். இராப்பிரியனின் இளந்தோள்கள் அணைப்பவை போல் அவளை நோக்கியெழ வேகங் கொண்டு வாயிலில் சாய்ந்து நின்றாள். அடைக்கப்பட்ட வாயில் ஒரு மஞ்சம் என எண்ணினான் இராப்பிரியன். அவள் முன் முழந்தாளில் அமர்ந்து ஆடைக்குள் தலை நுழைத்து நீர்மலர்கள் பூத்திருந்த அல்குலை வெறி அயரும் வரை உறிஞ்சிச் சுகித்தான். அவன் யோனியைப் பற்றி உறிந்து கொண்டிருக்க எரியும் மது அவளில் நிறைந்தது. வலக்காலை அவன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவன் தலையை அழுத்தினாள். மிருக பாவமெனப் புடைக்கப்பட்ட சிற்பமொன்று நாக்கொண்டு எழுந்தது போல் பிரியன் அல்குலுண்டான். அவள் சிலிர்த்துச் சொட்டிய போது ஆடைக்குள் நலுங்கிச் சிரித்துக் கொண்டான். அவன் ஆடைக்குள் சிரிப்பதை ஆடையின் நடுக்கில் ஏற்பட்ட துள்ளலைக் கொண்டு கண்ட அரூபி அவன் தலையில் இருமுறை அறைந்தாள். நீரில் தக்கையென அவன் தலை எழுந்தெழுந்து அமைந்தது.

*

புலரியில் எவரோ இசைக்கும் வேய்குழலிலென இருதியாள் சிரித்துக் கொண்டிருந்தார். அருகிருந்த கர்ணிகையின் வாயில் யாதினியின் முலைக் காம்புகள் ஒட்டிக் கொண்டிருந்தன. அன்னை முலையில் மகவென துயிலில் வாய் ஊன்றிக் கொண்டிருந்த கர்ணிகை அவள் தொடைகள் மேல் தன் கால்களைப் போட்டிருந்தாள். சிதி இருதியாளின் மடியில் தலை வைத்திருந்தாள். பட்டினத்தின் பெரு மன்றில் புலரிப் பணியாளர்கள் ஈக்களெனப் பறந்தமைந்து கொண்டிருந்தனர். இருதியாள் சிதியின் தலையை கீழே பனையோலைப் பாயில் வைத்துவிட்டு எழுந்து முன்முகப்பிற்குச் சென்றார். துடியன் ஓலைச் சுவடிகள் கலைந்து கிடந்த தன் பெட்டக அடுக்கின் மேல் விழிகூர்ந்து செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தான். அவனது கால்கள் புரவியெனக் கால்மாற்றலில் நின்றாடின. இருதியாள் சிரித்துக் கொண்டே அவனருகில் வந்து “இந்த நகரே இந்தச் சுவடிகளை நம்பித் தான் இயங்குகின்றது. இதை இப்பொழுதே கொழுத்தி மூட்டியெரிப்பேன் என நேற்றிரவு சபதம் கொண்டிருந்தாய் துடியா” என்றார். “என்ன. நானா. ஏன் அங்கனம் சொன்னேன். எதையாவது எரித்தேனா” எனச் சொல்லிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். இருதியாள் அவன் தோளில் அறைந்து “உன் காதலி உன் கன்னத்தில் செம்பழமொன்று பழுக்கும் வண்ணம் அறைந்து உன்னை வீழ்த்தினாள். அதில் கலைந்தது தான் இந்தக் குவியல். கவலை கொள்ளாதே துடியா. நாங்கள் யாரும் இச்செயலை முறையிடப் போவதில்லை. நேற்றுக் களியை நள்ளிரவிலிருந்து கொண்டாட்டமாக்கியது நீயாடிய காதல் கூத்தே” என்றார். “என்ன. நானா. கூத்தாடினேனே. ஒயிலையின் முன்னா” எனப் புருவங்கள் நெற்றியிலிருந்து உதிர்ந்து பறப்பவையெனக் கேட்டான். இருதியாள் வயிற்றை மெல்லத் தடவிக் கொண்டு “ஓம் துடியா. ஒயிலையிடம் மட்டுமல்ல. நேற்று இங்கு எத்தனை பேர் நின்றிருந்தார்கள் என்பதன் கணக்கு எவரிடமும் இருக்கப் போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். இருந்த அத்தனை பேரும் பெண்கள். நீ மட்டுமே ஆண். ஆனால் உன் ஆண்மைக்கு எந்த ஒழிவும் இல்லை. அஞ்சாதே. உன் காதலி வேட்டை நாயென உனக்குக் காவலிருந்தாள். ஆனால் நீயோ உன் வாயால் கெட்டாய். இன்று உன்னை அவள் கொல்லாமலிருந்தால் நாளை சந்திக்கிறேன்” எனச் சொல்லி இரவு முழுவதும் சிரித்து நொந்த வயிற்றைத் தடவிக் கொண்டார்.

துடியனின் வயிற்றில் புளிய மரங்களின் தோப்புகள் கொட்டுண்டு குடலின் சுரப்பிகளில் கரைந்தோடியது. “அக்கா. என்ன செய்தேன் எனச் சொல்ல இயலுமா. நேற்றுத் தான் அவளிடம் முதல் முறை அச்சமின்றிச் சொல்லாடினேன். வாழ்வில் முதன் முறையாக மதுக்குடித்தேன். தீயிலையைத் துதியை வாயிலிருந்து எடுத்ததே நினைவில் இல்லை. எப்பொழுதும் எவரோ நீட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் என வாங்கிப் பற்றினேன். பிறகு என்னானது. நாம் நேற்று அம்பல வீதியில் அல்லவா சந்தித்துக் கொண்டோம். இவர்கள் யார்” எனத் துயின்ற பெண்களை நோக்கிக் கேட்டான். “இவர்கள் அளித்த களிச்சொற்களாலே தான் நேற்று நீ மந்திரப்பட்டுச் சித்தமிழந்தாய். நீ ஆடிய கூத்தைச் சொல்கிறேன். கேள்.

அம்பல வீதியில் உனது தங்கையும் ஒயிலையின் தோழிகளும் நாங்களும் வந்து கொண்டிருந்த போது பணிகளால் தாமதமானது எனச் சொல்லிக் கொண்டு ஒயிலையிடம் நீ சென்றாய். உனது தங்கையை அவளது தோழிகள் அழைத்துச் சென்றனர். மன்றில் எவருமில்லை நாம் அங்கு செல்லலாம் என நீ தான் அழைத்தாய்” எனச் சொல்லிக் கொண்டிருந்தவரின் குரலிடையில் நுழைந்து “நானா சொன்னேன். நான் மடையன். அறிவிலி” எனக் கூவினான். “ஓம். அதை நாங்கள் நேற்றே அறிவோம். ஏனெனில் கடல் சென்று நீந்தப் போகிறோம் என மயக்கில் துடித்த எங்களையும் நீ தான் வாருங்கள் என இழுத்துக் கொண்டு வந்தாய். அப்போது நீ மன்றுத் தலைவன் போல் உனை எண்ணிக் கொண்டாய்” எனச் சொல்லி நிறுத்தி “நீ நின்ற கோலத்தை நினைக்கிறேன் துடியா. நீலழகரே உன் மிடுக்கின் முன் தோற்றுவிடுவார்” எனச் சொல்லி நகைத்தார்.

“மிகுதிக் கதையை நான் சொல்கிறேன்” எனச் சொல்லிக் கொண்டு துள்ளியெழுந்தாள் சிதி. அவளது குரலில் ஒலித்த கிளர்ச்சியைக் கண்டு உளம் பதைத்தான் துடியன். “மன்றுத் தலைவரே. மன்று வாயிலில் அமர்ந்தபடி கர்ணிகை கொடுத்த தீயிலையைத் துதியை மரியாதை நிமித்தமெனச் சொல்லி வாங்கிப் புகைத்தீர்கள். அப்படியென்றால் இதையும் அங்கனமே என எவரோ மதுக்குப்பியை நீட்டச் சற்றும் தயக்கமின்றி தேர்ந்த குடிகாரரெனக் குடித்து முடித்தீர். ஒரே மடக்கில் என நினைக்கிறேன். சுற்றி நின்ற பெண்களின் மயக்குக் குரல்களால் உங்கள் ஆடையைப் போலவே நீங்களும் பறந்து கொண்டிருந்தீர்கள். கர்ணிகை உங்கள் தொடையில் அமர்ந்து கொண்டு பாடுக என்னை எனக் கூவிக் கொண்டிருந்தாள். இவள் மயக்கில் பிதற்றும் பாவையெனத் திரும்பி உங்கள் காதலியிடம் சொன்னீர்கள். அவர் எதுவும் நடவாதவர் போல் முகத்தில் அசைவுகளின்றி அமர்ந்திருந்தார். அந்த முகத்தின் அர்த்தம் பிடிபட்டிருந்தால் நீங்கள் காதல் பாடல்கள் பாடிக் கர்ணிகையுடன் எழுந்து ஆடியிருக்க மாட்டீர்கள். என்னே ஒரு நடனம். என்னே ஒரு காதல் மயக்கு. இடையில் எவரோ மேலும் மதுவளியுங்கள் எங்கள் பெருநடனக்காரருக்கு எனக் களியூட்ட மதுவை உருவாக்கிய மாமதுவன் என வாங்கிக் குடித்துக் குப்பியைப் புதரில் எறிந்தீர்கள். பின்னர் நானும் நீங்களும் ஆடினோம்” எனச் சொல்லிச் சிரித்தவள் “நீங்கள் அளித்த மார்பு முத்தங்களின் சூடு இன்னமும் என்மேல் பனிச் சுவடுகளென இனிக்கின்றன” என்றாள். “நானா. முத்தமிட்டேனா. மார்பிலா. ஒயிலைக்கு முன்னாலேவா” எனக் கத்தினான் துடியன். “ஒயிலையின் முன் அல்ல. ஒயிலையின் மடியில் கிடந்த எனக்கு முத்தமிட்டுக் கொண்டே அவரை நோக்கிச் சிரித்தீர்கள். கொல்தெய்வத்தின் மடியென்று அறியாத இளம் அரக்கன் போல் முத்தாடினீர்கள்” என்றாள் சிதி.

தலை சுற்றுபவன் போல் அமர்ந்த துடியன் தனது கன்னத்தில் தானே அறைந்து கொண்டான். “மூடன். முழுமூடன்” எனக் கூவினான். அக்குரல் கேவல் போல் எழுந்தது. கர்ணிகையும் யாதினியும் விழித்துக் கொண்டு அரண்டார்கள். “என்னவானது” எனக் கூவினாள் கர்ணிகை. துடியனின் நிலையைக் கண்டவள் திகைத்து எழுந்தாள். யாதினியும் ஆடையை ஒருக்கிக் கொண்டு எழுந்தாள். சிதி அவனது நிலையைக் கண்டு சற்று இளகியவள் போல “நேற்றைய இரவில் களியில் இருந்தீர்கள் என உங்கள் காதலி அறியாளா” எனக் கேட்டாள். “அவளிடம் என் காதலை நான் இன்னமும் சொல்லக் கூட இல்லை” என்றான் துடியன். இருதியாள் அவன் தோளில் கைவைத்து “அஞ்ச வேண்டாம் இளையவரே. நேற்று நிகழ்ந்த மாகளியாடல்களில் நிகழ்ந்த பிறழ்வுகள் எதையும் விட நீங்கள் ஆற்றியது சிறியதே. ஆணென உங்களில் எழுந்த விழைவுகளை உங்கள் காதலி முன்னரே அறிவது எத்தனை வரம். காதல் என்ற சொல்லெடுக்க முன்னர் ஒருவரை ஒருவர் பிறழ்வுகளின் வழி அறிந்து கொள்வது காதலை முற்றொருமையாக்குவது. அறிய மிச்சமின்றிய இருவர் ஒருவரே.
உங்களை நீங்கள் முழுதாக அவிழ்த்தீர்கள். உங்கள் விழைவுகளைக் கதைகளாய் யாத்து புலரி தொடும் வரை சொல்லெடுத்தீர்கள். இறுதியாக நீங்கள் ஆடல் புரிந்தது உங்கள் காதலியுடனேயே. அவர் உங்களை நோக்கிக் கண்ணீர் சிந்திக் கொண்டு முத்தமிட்டார். நாங்களெல்லாம் அவரை அணைத்துக் கொண்டு மலர்ப்பந்தையென வானில் எறிந்து ஏந்தினோம். “இப்புடவியில் ஆணென எவரையும் காமத்தில் விழையும் எனக்கு ஒயிலை மட்டுமே காதலின் பெருஞ்சுடர் மலர்” என நீங்கள் நெஞ்சறைந்து குரல் நாண் இழுபட உரைத்தீர்கள். அச்சொல்லைக் கேட்ட போது பெண்கள் விழிநீர் கொட்டி உங்களை நோக்கிக் கரவொலி கூட்டினர். ஒயிலையின் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினர். நீங்கள் அவரைத் தோளில் இருகால் கழுத்தைச் சுற்றி மார்பில் மணிக்கொடியெனத் தூங்க அவர் கரங்களைப் பிடித்து மழலையென ஆடினீர்கள். மெய்யாகவே இளையவரே இத்தனை களிகள் விழையும் பெருக்கிடை மலரும் காதலும் சிந்தும் காதலின் கண்ணீரும் மங்காத ஓவியமென என்றும் நிலைக்கும். அவரை நீங்கள் ஏற்றியாடிய போது மன்றில் எழுந்த குலவையொலிகளால் நாகங்களும் உங்களை வாழ்த்தின” என்றார்.

அனைவரது விழிகளும் தாழ்ந்திருந்த துடியனின் சிரசில் உற்றிருந்தன. அணைச் சுவரென அவன் முன் நின்றிருந்தவர்களை விழியுயர்த்தி நோக்கியவன் “மெய்யாகவா. நானா. அவளைத் தூக்கி ஆடினேனா” என்றான். அக்குரலில் தயக்கமும் தவிப்பும் ஒன்றென இழைந்திருந்தது. “மெய்யே” எனச் சொன்ன இனிகுரல் அணைச்சுவரைத் திறந்து முளைத்த பூச்செடியென நுழைந்து ஒயிலையென நின்றது. ஒயிலை இடையில் கரமூன்றி “ஆயிரத்தெட்டு முறைகள் என் காலில் விழுந்து தொழ வேண்டும் துடியா. அதுவே தண்டனை” எனச் சொல்லி உறை தெய்வமென சினம் மட்டும் நளித்து உதடுகளில் பிரிவது போல் நின்றாள். துடியன் தெய்வமே எனக் கூவியபடி அவள் கால்களில் விழுந்தான். துயிலில் கனவு கண்டிருந்த சிப்பி திடுக்கிட்டு விழித்து “எங்கே என் கவிக் காதலன்” எனக் கூவினாள். “இதோ” எனச் சொல்லி அடிபணிந்து தொழுதலில் இன்புற்றுக் கிடந்த துடிமலரோனைக் காட்டினாள் சிதி. ஒயிலை அசையாத தொல்கணத்தில் அவன் தோள்மேல் ஆடிய ஆடலின் அதிர்வின் கனாவிலென நெடுநேரம் விரிந்திருந்தாள். மன்றுச் சாளரத்தால் நுழைந்த் சூரியனின் செம்மஞ்சள் ஒளிவெள்ளம் அவளில் பாய்ந்து கொண்டிருந்தது. ஓர் அணைப்பைப் போல.

TAGS
Share This