105: மடப்பெண்ணே : 03

105: மடப்பெண்ணே : 03

“தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து அதைச் சொல்லில் கற்க வேண்டும். மானுட விழைவுகள் அனைத்தைக் குறித்தும் சொற்களும் தத்துவங்களும் காவியங்களும் எழுந்திருக்கின்றன. அவை அறியாத கடலில் சிறுபடகில் செல்லும் தனித்த விடாய் கொண்டோருக்கான விண்மீன் வரைபடங்கள். அவற்றைக் கொண்டு ஆழியையும் அதன் புதிர்வழிகளையும் அறிய இயலும். கற்பவர் சொல்லெனும் படகில் செல்பவர்.

அடுத்து பயில்வென்பது ஆழியில் குதித்து நீச்சலை கற்றுக் கொள்வது. அதன் ஆழத்திருள்களை பளிச்சிடும் ஆழுயிரிகளை உணர்ந்து நோக்கி நீச்சலில் திளைத்து அதிசயங்களை நோக்கியிருப்பது. மீளக்
கற்றலென்பது மீண்டும் படகேறி ஓய்வு கொண்டு பெற்றதையும் கற்றதையும் எண்ணிப் பொருத்திக் கொள்வது. மேலும் சிந்தித்து தன்னுடைய சொந்தச் சொல்லில் கோர்த்துக் கொள்வது. சொந்தமான சொல்லாக ஆக்கிக் கொள்ள முடியாத ஒன்று கிளிப்பிள்ளையின் மிழற்றுச் சொல் போல்வது. அது கற்றுக் கொள்தலில்லை. திரும்பச் சொல்வது. பொருளறியாது இடமறியாது உரையாடலின்றிச் சொல்லிக் கொண்டே செல்வது. காமம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுவதால் அல்ல. ஒவ்வொரு கணமும் அதுவரை திரட்டிய அனைத்து அறிதல்களையும் பிறிதொரு களத்தில் வெளியில் கற்பனையில் அறிதலின் வெளிச்சத்தில் திகழ்த்துவதால் ஞானவழியாய் ஆகக் கூடியது.

மானுடர் யாக்கையை அறிவதன் ஒரு வாயிலே காமம். அது பிறிதின்றி முழுதமையாதது. தனித்துச் செல்பவர் புலன் ஒடுக்கியே நுழையும் பாதை. சிறு வாயிலில் தலை இடிக்காது குனிந்து செல்ல விழைபவரைப் போல. இருவராகும் பொழுதும் மேலும் பெருகும் போதும் பல்லாயிரம் கதவங்கள் திறந்து கொண்டு செல்லும் மாயங் கொண்டது காமம். ஆனால் முடிவு கொண்டது. காலத்தால். உடலால். நெறிகளால். சுய உள்ளுணர்வால் கட்டுண்டது. அதை மீட்டு அதன் எல்லைகளை புடவியளவு பாயென விரித்து மானுடர் முழுவரும் இணையும் சரடொன்றால் அதை இணைத்து அறிந்து கொள்வதே காமத்தைப் பயில்தல். எளிய புணர்ச்சி இன்பங்கள் தளைகளால் கட்டுண்டவை. கற்றுப் பயின்று மீளக்கற்று ஊழ்கம் கொள்வோரே இன்பத்தின் முடிவெல்லையை நீட்டிக்க இயலும். உடலை ஓர் ஊர்தியென்றாக்கி புடவியளக்கும் கற்பனையே காமம்.

காதலின்றி பிற எந்த உணர்வுகளாலும் முழுதொருமையையோ ஞானவழியையோ பெண்கள் தேர விழைவதில்லை. காமமே அவளுக்கெனப் புடவி அளித்திருக்கும் மெய் வழிகளில் முதன்மையானது. அவளே ஆற்றல். ஆற்றல் தன்னைப் பல்லாயிரமாய்ப் பெருக்கிக் கொள்வதால் பேராற்றல் என விரியக் கூடியது. காமம் உடலின்பமாக மட்டுமே சுருங்குவது காமத்தின் பேருலகை விரிக்காது. காமம் பிறிதொரு கலையாய் ஆக வேண்டும். காமத்தின் விசையாற்றல் பிறிதொரு வடிவத்தில் வார்க்கப்படல் போல.

பிறிதொன்றில் நிகழ்ந்து அதன் மாயம் ஏதோவோரு அறிதல் சாதனத்தில் சேகரமாக்கப்பட வேண்டும். அது நிகழாமல் வெறுங் கலவி ஒரு இச்சையே. இச்சையை ஆக்கும் கருவியொன்றாய் ஆக்கும் தோறும் மீறுபவர்கள் மானுடருக்கு புதியதொன்றை அளிக்கிறார்கள். அறிக மடப்பெண்ணே. முற்று விடுதலையென்பது ஒரு கற்பனை. மானுடர் மானுட நெறிகளால் இணைக்கப்பட்டவர்கள். எடுக்கப்படும் ஒன்றுக்குப் பதிலீட்டை உலகில் வைத்தே ஆகவேண்டும். ஒரு அருளலுக்குப் பதில் அருளல் போல. ஒரு அளிக்கு பிறிதொரு அளி போல. பெற்றுக் கொண்ட ஒன்று பிறிதொன்றாகக் கொடுக்கப்பட்டே இன்று எனக்கும் அளிக்கப்படுகிறது என்ற தன்னுணர்வே எதைப் பயிலும் மாணவரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மைப் பாடம்.

நான் களியின் பொருட்டு மட்டுமல்ல. கற்றலின் பொருட்டுமே காமத்தை உரையாடுகிறேன். கற்றலின் இன்பம் காமத்தை ஆயிரம் மடங்காக்கி திரும்ப அளிக்கிறது. அளியென்பது முடிவேயில்லாத உவகை. கொடுப்பவர் பெறுகிறார் என்பதே புடவியின் நியதி” என்றாள் விருபாசிகை. முத்தினி சுழலும் மயக்கு விழிகள் கூர் கொண்டு ஊசி முனைகளென மினுங்க அவளையே நோக்கியிருந்தாள். பொன்னனின் உதட்டில் செழியையின் இதழ்கள் தீயில் காற்றென அழிக்காது நுழையாது அலைத்து மட்டுமே ஆடிக்கொண்டிருந்தன.

பொன்னன் அசையாத சிலைகளின் பேரழகு கொண்டிருந்தான். காமன் எழுந்து கல்லென்று சமைந்து தொடுவதை மட்டுமே அனுமதித்து இனிபுன்னகை மாறாது நிற்பது போல அழகு உற்றிருந்தான். தேனாலும் பாலாலும் கனிக்குழைவுகளாலும் நீராட்டி சிலையிலிருக்கும் அவனை மானுட தேகத்திற்குள் அழைத்தால் ஒழிய அசைய மாட்டேன் என்பது போல.

விருபாசிகை அவர்களை நோக்கிய பின் “சொல்லென்பது கரைவதற்கு முன்னர் கற்பூரம் போல முத்தினி. எரிவதே அதன் இயற்கை. கரைந்து எரிவதே பேறு. நாம் இக்கணம் இச்சிலையை மானுடனாக்கும் காமத்தை புரிய வேண்டும். எங்கிருந்து அவன் விசை கொள்கிறான் என்பதை நோக்கு. அவனுள் எது குன்றா நிலைத்தலை உருவாக்கி அவனை வசீகரம் கொண்டவென ஆக்கி நம் முன் படையெலன ஈர்க்கிறது.

அவனது நோக்கு. நோக்கிற்குள் இருக்கும் இன்மை. இன்மையை நோக்கியதும் பதறும் காமமே பெண். இன்மையை ஒருவர் புணர இயலாது. இறந்த உடலைப் புணர்வதைப் போல அது ஒரு வெறிச்செயல் மட்டுமே. உயிரளித்து களிமிதத்தி ஒவ்வொரு கணமும் நோக்கிப் பெருக்கி நோக்கின்மையில் தேகங்களைப் பெருவிழிகளாக்கி மேனியின் புல்களையெல்லாம் கரங்களென்றாக்கி ஒவ்வொரு தொடுதலும் ஒரு கலவி உச்சம் என்றமைத்து நெருங்க வேண்டும். ஒரு கனவுக்கும் இன்னொரு கனவுக்கும் ஒருவரை ஒருவர் எறிந்து கொள்ள வேண்டும். எதுவும் அற்ற பெருமஞ்சத்தில் தேகங்களின் அறிதலையும் அகத்தின் கற்பனைகளையும் நுண்கரங்களால் தொட்டுத் துழாவிக் குழைக்க வேண்டும். ஒரு சிற்பியைச் சிலையாக்கும் காமமே நான் இன்று கற்றுக் கொள்ளவிருப்பது” என்றாள்.

சாளரத்தில் இளமழையின் தூவல்கள் படிந்து நனைந்து ஊறத் தொடங்கியிருந்தது. இளம் பிள்ளையின் எச்சில் முத்தங்களென மேனியைக் காற்று நனைத்துக் கொண்டிருந்தது. முத்தினி தன் சாயும் தோகை விழிகளால் கருவான் வெளியை நோக்கியிருந்தாள். விருபாசிகை தீயிலைத் துதியை மூட்டிக் கொண்டு புகையை வானுக்கென ஊதினாள். இருவரும் ஓவியத்தில் அமர்ந்திருப்பவர்களென தோன்றுவதை செழியையும் பொன்னனும் ஒருகணம் அறுபட்ட மின்னலின் இடையில் கண்டார்கள். செழியை நடந்து சென்று விருபாசிகைக்கு அருகில் சாய்ந்து கொண்டாள். மூச்சில் உன்மத்தம் உருகியது. பொன்னன் மூவரின் கால்களின் கீழும் விரிந்திருந்த கலை மஞ்சத்தில் பாம்பும் படுக்கையில் விஷ்ணுவென சயன கோலத்தில் படுத்தான். மூவரையும் ஒரு நோக்கால் அளப்பவனென. மூவுலகங்களையும் அளந்த பாதங்களை விழிகளெனக் கொண்டவனென. கருமை நிறத்தில் ஒளிரும் மாசற்ற முத்தென. அவன் பள்ளி கொண்டிருந்தான். விழிகளில் ஆணில் அபூர்வமாய் எழும் ஏதுமற்ற உவகை. களியில் ஒரு பாவையெனத் தன்னைத் தான் உணர்ந்த துயில் நிலை மோனம். அவனில் அணுக்கணத்திற்கு ஒருமுறை வெறியில் விசைபோல இனிமை ஏறிக்கொண்டிருந்தது. மூன்று தேவியரும் அவனை நோக்கினர். அருளலும் மருளலும் வேட்கையும் விழைவும் விழிமணிகளாகி மினுங்கின. தேகங்கள் நீரில் எழும் ஆவியென ஆடையை அறிந்தன. அவிழ முன்னர் தேகமும் நீரென உணர்ந்து கிடந்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் தீயிலையைப் புகைத்த பின்னர் பொன்னனுக்கு உவந்தனர்.

பொன்னன் மயக்கும் புன்னகை மாறா இளவிழியால் அவர்களை நோக்கியபடி துதியை வாங்கித் தேகமெல்லாம் புகையாய் அவிழ்வது போல இழுத்து ஊதினான். இளமழையின் காற்று அவனது மெய்ப்புல்களில் தொட்டுத் தழுவிச் செல்வதை நோக்கியிருந்தான். எதனால் இத்தனை உவகை என வியந்து கொண்டிருந்தான். முழுது அவனென ஆகிநிற்கும் சாத்தியமே இத்தனை கிளர்ச்சியானதா என எண்ணினான். காலங்களில் நீந்தி வரும் பொற்தேரில் மூன்று தேவியரும் உடன்வர வெள்ளங்களில் நுரைக்கும் வண்ணங்களின் குமிழிகளெனக் காலத்தை நோக்கிப் புன்னகைத்தான். காலமின்மையில் உறையக் கூடியது என எதுவும் தன்னிடமில்லை என எண்ணினான். அனைத்தையும் உண்ணும் நெருப்பே காலம். தன்னை அதற்கெனக் கொடுத்து அதன் மேல் ஆடிடும் பாதங்கள் தூக்கி நிற்கும் ஈசனின் சிலையெனத் தன்னைத் தான் எண்ணினான். முடிவிலான். அழிவிலான். காலமற்றவன். காலத்தை அறுக்கும் கூற்றன். அலகிலா ஆடலின் நாயகன். தீயை ஏந்தியவன். அதில் ஒரு தீயிலையைப் பற்ற வைத்தது போலக் கொழுந்துகள் எழுந்து ஆடுகின்றன என எண்ணிப் பித்தனைப் போல பிரண்டு நெளிந்து சிரித்தான். நால்வரும் நான்கு திசைகளில் அவிழ்ந்த ஒற்றை மலரெனக் காமத்தில் புல்லிதழ்கள் கூர்ந்து மஞ்சத்தில் நீண்டனர்.

செழியை கூந்தலை முடிந்து கொண்டையிட்டாள். முலைகள் சிந்தும் பாற்கலயமெனத் ததும்பின. அக்குளின் மயிர்கள் மழை கழுவிய வேர்களெனப் பொலிந்திருந்தன. விழிகளில் கொல்விலங்கின் வெறிகாமம் கொண்டிருந்தாள். சொல்லும் கனவுமற்ற வெறும் பித்தில் ஊழ்கம் கொண்டவள் போல. மேனியே ஒரு கனவு என எண்ணிக் கொள்பவள் போல. எழுந்து பொன்னனின் தளர்ந்த ஆண்குறியை வாயில் கனியென ஊட்டிக் கொண்டாள். விறைத்து எழுந்த இன்னொரு மயிரென ஆண்குறி எழுவதை நோக்கியபடி தீயிலையைப் புகைத்தான் பொன்னன். செழியை விடைத்த அவன் குறிமேல் அல்குல் குடை கவிழ்த்தாள். குடைக் காளான் என எண்ணிச் சிரித்தாள் விருபாசிகை. முத்தினிக்கு மந்தணமாய் அந்த ஒப்புமையைச் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.

செழியை சினம் கொண்டு அவனைப் புணரும் வேட்கை கொண்டாள். சினம் புணர்வில் அழிவின் உக்கிரமளிப்பது. அழிப்பதில் மானுட அகம் அடையும் இன்பத்திற்கு நிகரேயில்லை. ஆக்குவது ஒன்றை விட மேலானது ஆயிரத்தின் மடங்கு அழிப்பது அளிக்கும் உவகை. பொன்னனின் விழியில் எழுந்த அச்சமின்மையால் வெறுப்பில் தழன்ற செழியை அவன் அஞ்சும் விழிகளை அவனிடம் மீட்டுக் கொடுக்கவென எழுந்த தெய்வமெனத் தன்னை எண்ணிக் கொண்டாள். அறிக சிற்பியே. தெய்வம் எழப்போகும் கரும் பாறைக்கு உளியின் வலியை அளிக்கப் போகிறேன் எனச் சொல்லிக் கொண்டாள். தன்னை தெய்வமென எண்ணிக் கொண்ட போது தன் மேனி விதிர்ப்பதை நீங்கி தனது தொழில் அதுவென யாக்கை அறிந்தது.

புணர்தல் தொழிலென்றான தெய்வம் தன்னை நுண்சொல்லென ஆக்கிக் கொண்டு எழுந்த ஊழ்கமென பொன்னனின் விழிகளை உறுத்தாள். உறுத்த கணத்தில் எழுந்திட்ட தெய்வத்தைக் கண்ட பொன்னனின் விழிகளில் உளியும் பாறையும் உரசிக் கொண்ட முதல் தீக்கு எழுந்த அச்சம் மின்னி மறைந்தது. செழியை வெறியாட்டு எழுந்து புணர்வென்றானாள். பொன்னனின் கூவல்கள் கதறெலென்றாகின. குருதிக் களத்தில் ஓடும் கால்களை தானே நோக்கி விரைபவனென அக்காலத்தைக் கடக்க எண்ணினான். செழியையின் அல்குல் நுரைத்து மலர்ந்து மதனம் பீறியது. வேழத்தின் வாயில் அகப்பட்ட கரும்பென எண்ணிச் சிரித்தாள் முத்தினி. அவளது சிரிப்பைக் கண்ட விருபாசிகை “ஓயாது மேனியைத் துளைக்கும் வாளைப் பழிதீர்க்கும் ஒரே மானுடச் சதை அல்குலே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தாள். முத்தினி “வாயும்” எனச் சொல்லி சேர்ந்து சிரித்தாள். கொல்லாத வாள். உயிர் கொடுக்கும் வாள் எனச் செழியை கூவிய போது மூவரும் பிறிதொரு களியில் தன்னுடன் விளையாடுகின்றனர் என எண்ணிய பொன்னன் கருணையே உருவான ஒரே வாள். உறையில் சேர்ந்தே இருக்காத ஒரே வாளும் எனச் சொல்லி அவளை நாயைப் போல ஓசையிட்டபடி புணர்வுக்களி ஆடினான். முத்தினி தன் ஆண்குறியை நீட்டியபடி உறை கொடுங்கள் என் வாளுக்கு எனக் கூவ பொன்னன் பாய்ந்து பற்றி வாயில் உறிந்து கொள்ள விருபாசிகை தூங்கும் கனிகளை அணிலென முத்தினியின் ஆண்குலையை வாயில் உமிந்தாள். செழியை அவனை விட்டு விலகி அவன் பின்னே சென்று மார்பு களைந்து பிருஷ்டம் கசக்கி ஆண்குறி பற்றி அளவளாவினாள்.

மூன்று தேவியரும் மஞ்சத்தில் அவனைத் தனிப்பெரும் மலரென விரித்து மேனியை நாவால் தீராது தீராது எனத் தொட்டனர். எழும் மயக்கில் செய்வதறியாது திகைத்த பொன்னன் மேனியெங்கும் களிநிறைந்து பெருக “உன் வாளை என் உறையிலிடு” எனக் கூவி முத்தினியைத் தன் பின்னால் இழுத்தான். முத்தினி தன் ஆண்குறியை குதவழியால் பொன்னனுள் செலுத்த உதடு கடித்துத் துடித்தான். உளியிறங்கும் பாறைகளின் துடிதுடிப்பை அறிந்தேன் தேவியென முத்தினியில் சாய்ந்தபடி முனகினான் பொன்னன். அவன் இருமார்பின் காம்புகளும் இருதேவியரின் வாயில் சுழன்று நீராட்டில் களித்திருக்க ஆண்குறி அவர்கள் கரங்களில் அளைபொருளாகியது. விருபாசிகை எழுந்து அவனை நோக்கி முகத்தின் முன்னே தோன்றிக் காலமின்றிப் புன்னகைத்தாள். அதற்கடுத்த கணம் முத்தினியின் விந்து அவனுள் சுடுநெய்யெனப் பெருக செழியையின் கரத்தில் அவன் குறி சீற “பொன்னா. உன்னை முத்தமிடவா” எனக் கேட்டாள் விருபாசிகை. பல்லாயிரமாண்டுகள் தவித்துக் கிடந்த பாலையில் ஊறிய முதற் துளியென அவன் தகிநாவில் உணர்ந்தது எதை.

TAGS
Share This