123: ஆழிசூடிகை : 03

123: ஆழிசூடிகை : 03

இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் திடலுக்கு வந்த இளஞ்சிறுவனென துடிப்புக் கொண்டிருந்தார். தமிழ்ச் செல்வனுடன் உரையாடிய பின்னர் திமிலர் மருத்து நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தியுடன் இருதியாளிடம் வந்தார்.

இருதியாளின் வாடிவீட்டில் ஒற்றைத் தீப்பந்தம் மினுங்கிச் சுடர்ந்தது. பனையோலைகளால் வேயப்பட்டு மூங்கில் கழிகளால் ஆக்கப்பட்டது. அவளது குடில் வாயிலில் இருபுரவிகள் நின்று கொண்டிருந்தன. கனைத்தும் வால் சுழற்றியும் சொல்லாடிக் கொண்டிருந்தன. இருதியாள் சர்ப்பம் போன்ற தீயிலைத் துதியை எடுத்து மலர்களை நிறைக்கத் தொடங்கினாள். சிரசில் சூடப்படும் நஞ்சு பற்றியெரிந்து மயக்களிக்கப் போவதென நாகத்துதி நிறைந்து கொண்டிருந்தது. வேறுகாடார் கரைக்குத் திரும்பிய புலிகளின் கலன்களில் படபடத்து வீசிக் கொண்டிருந்த புலிக்கொடியை நோக்கிக் கொண்டிருந்தார். எஞ்சும் ஒரு துளி ஆணவம் மானுடர் அடையக் கூடிய உச்ச நஞ்சு. அதை அடைந்தவர் அடையும் எல்லா நிறைவும் அந்த நஞ்சினால் மயக்களிக்கப்படுகிறது. அகமறியும் நஞ்சை எந்த மானுடராலும் வெல்லுதல் இயலாது என எண்ணினார் வேறுகாடார். அறிந்த பின்னும் எஞ்சும் நஞ்சை எரிய வைக்க நாகத்துதியை உறிந்தார். புகைமணம் காற்றைக் குழைத்து தேகத்தை விதிர்த்தது.

இருதியாள் அவரருகிலிருந்த மூங்கில் கழியில் சாய்ந்து கொண்டு கலனிலிருந்து குதித்திறங்கி தங்களது படை நிலைகளுக்கும் மருத்துவ நிலைகளுக்கும் சென்று கொண்டிருந்த புலி வீரர்களை நோக்கிக் கொண்டிருந்தாள். பெண் புலிகள் சிரித்துக் கொண்டு வாகை சூடனுடன் சொல்லாடியபடி நடந்து கொண்டிருந்தனர். பனைமரங்களின் ஓலைகள் காற்றில் உரசுவதும் தென்னந்தோகைகள் காற்றை அளைத்து விளையாடுவதும் கடலின் ஒலிகளாக மாறியிருந்தன. இருதென்னைகளின் நிழல் இருதியாளின் வாடிவீட்டின் மேல் கவிழ்ந்திருந்தது. மணலின் உலைவை நோக்கியிருந்த வேறுகாடார் இருதியாளிடம் திரும்பி “கடற் கன்னிகளை நான் கண்டிருக்கிறேன்” என்றார். இருதியாள் பற்கள் சற்றே வெளியாடச் சிரித்தாள்.

“ஒருமுறை யவனக் கலமொன்றில் திசை தெரியாத கடலொன்றில் பயணப்பட்டேன். மூன்று பகல்களும் இரு இரவுகளும் கரைகளே தெரியாத கடலில் உலைந்தோம். ஏழு பேரே அக்கலனில் எஞ்சியிருந்தோம். உணவுக் கையிருப்பும் ஒழியத் தொடங்கியது. ஒரு சிறிய தேங்காய்ப்பாதி போன்ற தீவில் கரைசேர்ந்தோம். சில தென்னை மரங்களும் உடைந்த கப்பலொன்றும் மட்டுமே அத்தீவில் பெரியவை என்றிருந்தன. சில பற்றைகள் அங்கங்கு செறிந்திருந்தன. இரவில் காய்ந்த தென்னோலைகளையும் கப்பலின் மரத்துண்டுகளையும் போட்டு எரிமூட்டினோம். எங்களது கலனிலிருந்த எஞ்சிய பன்றியிறைச்சியை எடுப்பதற்காக நான் சிறுகலனில் கப்பலை நோக்கிச் சென்றேன். காற்றில் நாம் அறியாத கடல்களின் குளிரிருந்தது. உடல் விறைத்துப் பளிங்காகி விடுமோ என அஞ்சும் குளிரில் கப்பலுக்குச் சென்று தலையும் இருகால்களும் மட்டுமே எஞ்சிய பன்றியைத் தூக்கி சிறுகலனில் இட்டேன். தேவ இலை மலர்கள் ஒரு பொதியாகக் கட்டப்பட்டு மூங்கில் குழல்களில் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு மூங்கில் குழலை எடுத்துக் கொண்டு நான் கலனில் திரும்பினேன். எவரோ சினங்கொண்டு ஊதியதெனக் காற்று என் சிறுகலனை அலையில் நுரைத்துடிப்பெனத் தள்ளிச் சென்று அருகிருந்த மணல் மட்டுமேயான தீவொன்றில் மோதிச் சரித்தது.

அங்கிருந்து நோக்கும் தொலைவில் நான் செல்ல வேண்டிய தீவு ஆமையோடு போல இருளில் மினுங்கியது. நான் நின்றிருந்த தீவில் அடித்த அலைகளில் நீலநிற ஒளிவீசும் சிறு கடலுயிரிகள் கரையொளியை நீலச் சிரிப்பலைகள் என உருமாற்றின. என் சிறுகலனில் இருந்த பன்றியின் தலையைக் கையில் வைத்தபடி வெண்ணிறமான ஒரு பெண் கலனில் கையூன்றியிருந்தாள். பன்றியின் செவியை தன் கூர்முனைப் பற்களால் கவ்வி விழுங்கினாள். என் மேனி மெய்ப்புக் கொண்டு ஆடத் தொடங்கியது. காற்சதைகள் குளிர்ந்து இறுகின. அவள் காதலியின் நோக்குக் கொண்டிருந்தாள். வேட்டைக்கு முந்தையை புலியின் விழிகளென அழகு கொண்டிருந்தது நோக்கு. கொன்றொழிக்கும் நோக்குத் தான் காதலென்பதை என் அகம் என்றோ உணர்ந்திருந்தது. அச்சம் அகன்று குளிர்ந்த பாதங்களை முன்வைத்து என் கலனை நோக்கிச் சென்றேன். அவளது செவிகளில் நீல நிறக் கடலுயிரிகள் வளைந்த இறாலென செவிக்குழைகளென ஒட்டியிருந்தன. கூந்தலிலும் அவை நீலஒளிவீசும் மலர்களெனத் தூங்கின.

நான் அவளின் உடலிலிருந்து எழுந்த ஊன்மணத்தை முகர்ந்தேன். உப்பிலான உளமயக்குகளுக்கு அதிலிருந்து வசியப்பட்டேன் என எண்ணுகிறேன். ஒரு சொல்லுமின்றி நோக்கலாது அவள் அலைகளில் நீந்தி ஆழிக்குள் புகுந்து சிலகணங்கள் கழித்து எழுந்து தலை மட்டும் ஒளிக்குடமென மினுங்க என்னை நோக்கிய பின் அகன்றாள். பன்றியின் அறுபட்ட செவியென விழுங்கப்பட்டு என்னிதயம் சென்றது போலத் தோன்றியது” என்றார் வேறுகாடார்.

இருதியாளின் செவி பன்றிச் செவிகளெனக் கூர்ந்து மடிந்தன. வேறுகாடாரின் அருகணைந்து மணல் உருளும் மேனியை துடைத்துக் கொண்டாள். “மெய்யகாவா” என்றாள் இருதியாள். அவளது உதடுகள் விம்மிக் கேட்பதை வேறுகாடார் நோக்கினார். இருவரது வாய்மணமும் ஒன்றையொன்று தொட்டு முத்தமிட்டுக் கொண்டன. இனிய உப்பின் உளமயக்கு. அடிநாக்கிலிருந்து ஊறியெழுவது. நஞ்சில் கலந்த உப்பு அமுதமென்றாகும் வாசனை கொண்டது. வேறுகாடார் இருதியாளின் உதடுகளை நோக்கிக் கூர்ந்தார். இருதியாள் தலையை நிமிர்த்தி கூந்தலை விலக்கிக் கொண்ட போது அவருள் எழுந்த கடற் கன்னியின் வாசனையை இருதியாள் முகர்ந்தாள். சித்தம் மயங்கியது. அருள் வந்த கடலென இருதியாளில் குருதி பாய்ந்து கொப்பளித்து உதடுகளில் நலுங்கியது. புன்னகை விரிய உதடுகளை விரித்து கொத்தலென உதடுகளைக் குவித்து உறியத் தொடங்கினார். பலாச்சுளையென நீண்ட இருதியாளின் நாக்கை சுவைத்து அருந்தினார். எச்சிலைக் குடித்தார். அது சுடுபாலில் கரைந்த பனங்கட்டிக் கூழென இனித்தது. அருந்தியபடியே இருதேர்களில் ஒன்றைப் பற்றினார். அதன் கோட்டுகளில் விரல்நடவுகள் பயின்றார். சுழித்து இழுத்தார். இருதியாள் சினங்கொண்டு நாவைச் சுழற்றி போர்வெறியுற்று மூங்கில் புடைப்புகளென விரிந்திருந்த வேறுகாடாரின் தோள்களைப் பற்றினாள். இறுக்கி உடைப்பவளென உதடுகளைத் தின்னக் கொடுத்தபடி மூச்சுச் சீறலில் திகைக்கும் நறுமணப் பூக்களால் மூர்ச்சையடைபவள் போல எழுந்தாள். எழ விழைந்தவளை மூங்கில் தரையில் விழுத்திச் சாய்த்து மேலாடையை இழுத்து அவள் முலைகள் குலுங்கிச் சேர்வதை நோக்கினார். காம்புகள் எனும் வாயிலில் உதடுகளால் நுழைந்தார். இருதியாளின் தேகம் நடுங்கத் தொடங்கியது. புயற்சுழலில் பட்டாடையென அவள் சுழன்றாள். வேறுகாடார் இருமுலைகளையும் இருகனவுகளென மாறி மாறி நுழைந்து திரும்பினார். ஒரு பாடலின் ஒவ்வொரு வரியுமெனக் கீழிறங்கினார். இடையில் தாடிமயிர்கள் முள்முத்தங்களெனக் குத்தின. இடையாடை தானே அகன்று வழிவிட்டது. கருவறைக்கு முன் நந்தியென அது அகன்று சென்றது.

புற்செறிவென வளர்ந்திருந்த இருதியாளின் அல்குலில் நாகக்குழவியென நாநுழைத்தார் வேறுகாடார். நத்தை நகர்ந்த வழியென அல்குலெங்கும் ஈரம் பரவியது. மதனமேட்டின் தெய்வத்தை அருட்டினார். யோனியின் வாயிலை வணங்கி முகர்ந்தார். தயங்கி நுழைந்து வெளியேறும் நாகமென அவரது நாக்கு அல்குலில் நுழைந்து நுழைந்து திரும்பிக் கொண்டிருந்தது. நாகக் கொத்தல்களென முத்தங்கள் இட்டார். இருதியாளின் விழிவரைகள் அலைக்கரையென நீர் ததும்பின. அவரது தலையை இருகைகளாலும் மலர்ப்பந்தென அள்ளி யோனியில் வைத்துக் கொண்டாள். தீயிலை மணந்து வாடிவீடு மயக்காடியது.

தொடையிலிருந்து ஏணியில் வழுக்கும் வீரனெனச் சரிந்து இறங்கினார். தொடை மயிர்களை மூக்காலும் உதட்டாலும் உரசினார். கன்னங்களால் முத்தமிட்டார். முழங்கால் மடிவில் நாவால் நக்கினார். பின்காலால் வழிந்து கெண்டைக் கணுக்கள் கவ்விப் பாதங்களை முத்தமிட்டு விரல்களை வாயில் நுழைத்து பத்து ஆண்குறிகளென விளைந்து நிற்கும் அவள் விரல்களை உறிந்தார். இருதியாள் மோகம் மையங் கொண்ட கடலென ஆர்ப்பரித்தாள். முனகல்கள் விம்மிக் கனிந்தன. உடல் முழுதும் உப்பில் கரையும் சூரியஒளியென உவகை பரவியது.

வேறுகாடார் எழுந்து நின்று இடையாடை உருவினார். சீறும் துதிக்கையென வளைந்து முன்பாய்ந்த ஆண்குறியைக் கண்ட நோக்கிலேயே மின்னல்கள் கூச்சலுடன் விரிந்து நரம்புகளில் பரவ இடியள்ளி எறிந்த காற்றென மேனியெழுந்தாள் இருதியாள். பத்தி விரித்தாடும் நாகத்தை மகுடியெனச் சுற்றி வந்தாள். இருகை விரல்களும் பதறி நடுங்கின. தெய்வமொன்றின் படைக்கலத்தைத் திருட எண்ணித் தொட விழைபவளென அகம் கூவலடைந்திருந்தாள். நெஞ்சு நடுங்கியது. காற்றில் மசமசப்பும் கடலின் கூர்மணமும் நாசியைத் தொட்டு உள் நுழைந்தது. முழந்தாளில் எழுந்து தவளையைப் பாம்பெனக் கொத்தி விழுங்கினாள் இருதியாள். நாவில் எழுந்தன வேட்கையின் கொல்வெறிச் சுழல்வுகள். ஆண்குலையைப் பற்றி அளைந்தாள். தொடைகளை அறைந்தாள். மதனம் பெருகிய அல்குலின் ஈரத்தையென ஆண்குறியை உறிந்து நனைத்தாள்.

காமம் ஒவ்வொரு முறை புதியதெனத் துய்க்கப்படுகையிலும் வேறுகாடார் வெறியாட்டு எழுந்த கொல்தெய்வமென ஆகுவார். அவரின் ஊழை வகுத்த தெய்வம் அதுவே. காமம் தெய்வமென அருளப்பட்ட மானுடன் புடவியில் வெல்வது அக்களம் மட்டுமே. பிறிதனைத்தும் விலக்கியே தன்னை அடையக் கோரும் கொடுந்தெய்வமது. அதன் முன் தலையைக் கொடுப்பவர் மீள்வே அற்றவர். மீளவும் விழையார்.

இருதியாள் எழுந்து நின்று அவரின் மார்பை உறிந்தாள். வலமார்பை உறிந்தபடி இடக்கையால் இடமார்பின் காம்புகளில் எச்சிலிட்டுத் தடவினாள். காம்புகள் குறிகளென்று ஆட மார்பில் அவளின் தலையை அழுத்தினார். கைவிட்டார். அவளை அவளென ஆடச் சொன்னார். சொற்களால் எழுப்பப்படும் காமம் மந்திரங்களால் வாக்கெழுந்த தெய்வம். அதை கற்பனையின் பேராடலிலேயே முழுதேற்றி அணைக்க இயலும். இருதியாளை ஆடைகளின் மேல் சரித்து அல்குலில் குறி நுழைத்துப் புணரத் தொடங்கினார். ஆழிக்கொதிப்பில் கலனென அவரது ஆண் குறி இருதியாளுள் குத்தி ஏறியது. ஆடும் படகிலென வாடிவீடு மிதக்கத் தொடங்கியது.

காமம் நிகழ்த்தப்படுகையில் சொல்லின்மை எஞ்சக் கூடிய சில கணங்களுக்கு அப்பால் நிறைவது கனவுகளே என எண்ணினாள் இருதியாள். களமெங்கும் எழுந்து நிற்கும் எதிரிப்படையை விழைந்து புணரக் கேட்பவளெனத் தன்னை உணர்ந்தாள். கொடுமிருளை அருளெனக் கேட்பவள். பித்தில் தன்னை தெய்வமென்று அறிபவள். அவளிடம் எழுந்த கனவுகளின் ஒவ்வொரு உலுக்கலிலும் வேறுகாடார் பூக்காம்பை வண்டெனப் பற்றியபடி உலைந்தார். இருதியாள் புணர்ச்சி வேகத்தில் தன்னை இழந்தாள். மூழ்கிக்கொண்டே அடையும் பேரின்பம். இறந்து கொண்டே அறியும் இறப்பு. விழிக்காமல் நிலைக்கும் கனவு. எஞ்சும் கணங்களை நீட்டிப்பது மட்டுமே காமத்தின் கணக்கு. புலரி வரை ஓயாத பெரும்புணர்ச்சியில் நூறு முறை உச்சங் கொண்டாள் இருதியாள். அல்குல் எத்தனை பெரிய ஆற்றின் சுனை முகம் என எண்ணியபடி அயர்ந்தாள். மயக்காடிய தேகத்தில் தழல் பொலிவது போல வேறுகாடார் எழுந்து கடலை நோக்கி இருகரத்தையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்றார். இருதியாளின் இமைகள் சரிந்து துயிலுக்கும் நனவுக்குமிடையில் ஊசலென ஆடிய போது அவள் கண்டாள் அவர் தேகத்தின் பின்னொரு வெண் நாகத்தை. அது வெண்கொற்றக் குடையென அவர் மேல் பத்தி விரிக்கிறதென்று. பிறகு அது துயில் மயக்கென்றெண்ணி இமைகள் மூடினாள். துயில். நெடுநாள் மறந்திருந்த இனிய கனவொன்று அணைத்துக் கொண்டது போல.

*

காலம் விந்தையானது என எண்ணினாள் இருதியாள். வேறுகாடாரிடம் புறமெங்கும் மாறிக்கொண்டிருக்கும் பாவனைகளுக்கு அடியில் வேர்நுனியில் எஞ்சிய கசப்பென என்றுமிருக்கும் ஒன்று குறையவேயில்லை. அது அவரின் ஆன்மாவின் சுடரென அவரை எழச் செய்கிறது. தன் பொருட்டுப் பணிகளை ஆற்றுக எனக் கட்டளையிடுகிறது. அவர் அதன் முன் எப்போதும் பணிகிறார். அவர் அஞ்சும் எதுவும் புவியில் இல்லை என்பதை இருதியாள் அறிவாள். நஞ்சு அடையப்பட்ட பின்னர் பின்னொழியாத ஞானத்திற்கு எடை வைக்கும் படிக்கல்லென எண்ணிக் கொண்டாள். அதை ஒழிவது அவர் ஒழிவதே. அவரை அழிக்கும் ஒன்று அவரை ஆக்கவும் செய்கிறது. அவரை அவரென்றாக ஆக்குவது அதுவே. அதை அவள் வெறுத்தாள். ஆழத்தில் கசப்பு அருமணியென ஒளிகொண்டு வீசியது. அக்கணம் அதை ஒரு கிரீடத்தில் பொருத்தி அவருக்கு அளித்தாள்.

நஞ்சே அணிந்திருந்தாலும் அவர் அரசன். நஞ்சால் நிறைந்தவர் மானுடருக்கு அரசர். எஞ்சும் கடைசித் துளி நஞ்சை அணிந்தவர் கடையோரின் அரசர். கடையோர்களால் ஆளப்படுவதே புவி என எண்ணினாள் இருதியாள். இளமழையின் தூவல்களில் நீலஒளி கொண்ட கடலுயிரிகள் வீழ்வதாக விழிகள் மயக்குக் கொண்டன. வேறுகாடாரின் வெண்குழலில் அவை தூங்குவதைப் போலவும் அவை அவரை நீலவண்ணங் கொண்டு தோற்றுவதையும் கண்டு ஒருகணம் அஞ்சினாள். நீலன் எனும் சொல் அவருக்கும் அவளுக்குமிடையில் ஒரு கடலளவுக்கு தொலைவுகளில் மட்டுமே பார்த்துக் கொள்ளப்படுவது. அந்த நஞ்சை அவர் எடுத்துக் கொண்டார். அந்த நஞ்சால் ஆளப்படுகிறார். ஆனால் மானுடர் ஏதோ ஓர் அருங்கணத்தில் அந்த நஞ்சை உமிழவும் கூடும். அந்த எண்ணம் அவளில் ஒரு நடுக்கெனக் கடந்தது. வேறுகாடாரின் கூகை விழிகள் ஒருகணம் சலித்தது. பின்னர் அணியப்பட்ட புன்னகையுடன் உலகை நோக்கியது. அக்கணம் தான். அதுவே அவரது வாயில் திறந்து மூடும் கணம். அதை அவள் கண்டாள்.

காதலைக் கூடப் பற்றில்லாமல் நிகழ்த்தமுடிவது ஆண்களாலேயே கூடுவது என இருதியாள் கண்டடைந்திருந்தாள். அந்தரத்தில் மிதக்கும் கடல் என அதை எண்ணிக் கொள்வாள். அடித்து மடிந்து திரும்பக் கரைகள் தேவையற்றவை. எண்ணிய பொழுதில் கரைந்து விடுபவை. ஒவ்வொரு ஆணும் அவளுக்கு அளித்தது அக்கடலில் சிலகணங்கள் நீந்தும் இன்பத்தையே. பிறகு அவள் கரையை மடியாகக் கொண்ட தன் கடலுக்குத் திரும்ப வேண்டும். அங்கு அவள் பல்லாயிரம் முறை அறைந்து வாழ்வைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஆணை அறிந்த பெண் அறிவது புடவியில் எவ்வளவு தனிமை கொண்டவள் அவள் என்பதையே. நிழலுமற்ற ஒளித்தனிமை. ஒழிச்சலற்ற காற்றின் தனிமை. ககனத்தின் நீலத் தனிமை. மண்ணின் தாங்கும் தனிமை. நீரின் திரவத் தனிமை. பெண் ஆறாவது பூதமென புவியில் உறைபவள். ஆண் என்பவன் துய்க்கும் எளிய விலங்கு. எளியவன் என்பதாலேயே சற்று மந்தமானவன். மந்தமானவன் என்பதாலேயே மகிழ்ச்சி கொண்டவன். தனிமையை அவன் விரும்பி அடைகிறான்.

பெருங் கப்பலின் அடியில் விரிசலிட்ட சிறுகீற்றென வேறுகாடாரில் உடைபட்டது எதுவென எண்ணிப் பார்த்தாள். அதைக் கணம் கணமெனப் பெருக்கி அதன் பேருருவைக் கற்பனையில் கண்டாள். நீலன் எனும் பெருந்தெய்வத்தின் முன் தானும் ஒரு இணைத் தெய்வமென உணர்ந்தும் கூட தன்னுள் அடைந்த சிறுதுளி நஞ்சை உமிழாமல் கரந்து உண்டாக்கிய நச்சுக்கல் மணியொன்று கப்பலில் விரிசலென அவரைக் கீறியது. ஒவ்வொரு தருணமும் விலக்கி வைக்கப்பட்ட நிகர்த்தெய்வமொன்று தன்னைப் பணித்து அமைகிறதென்றால் அது ஊழ் வெட்டிப் பிளக்கும் மெய்க்கணத்தில் தன்னை அப்பீடத்தில் சிலகணம் வைத்தே அகலும். அந்த நஞ்சு அவ்வளவே ஆனாலும். பெருஞ்செயலாளிகளில் கூடும் நஞ்சு ஊழை அறுக்கும் மர்மக் கணங்களை அவர்களுக்கு அளிப்பது. தன் கையைத் தானே வெட்டித் தன் குருதியில் தானே சுவையறியும் நாவு போன்றது ஊழ்கணம். இரைக்கென இல்லாது மகிழ்ச்சிக்கெனக் கொல்வது போன்றது என எண்ணினாள் இருதியாள்.

TAGS
Share This