பித்தும் கவிதையும் : 01

கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு. * வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்..” என்று நெஞ்சறைந்து உரிமையுடன் தெய்வமெழ வைக்கும் அந்தத் தேவாரங்களின் சொற்களிலே கவிதை எத்தனை அரிய சொற்களின் மூலம் ஒன்றை … Continue reading பித்தும் கவிதையும் : 01