பாத்திரங்கள்

பாத்திரங்கள்

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்
நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன்

அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்
ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்
ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும்

வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானது
முன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்
இவை நினைப்பதை விட நிச்சயமானது

நிச்சயமானவை உலகில் உள்ளவரை
நாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டு
நடந்து ஒளியுடன் செல்வதற்கு
இருள் சூழ்ந்த பாதைகளுண்டு
ஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்க நடிகர்கள் உண்டு

லைட்ஸ் ஒன்.

TAGS
Share This