முக்காலமும்

முக்காலமும்

நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டு
நீலம் கலையாத ஆழிகளுண்டு
மீன்கள் வாழும் மலைகளுண்டு
நிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன

தூண்டிலைப் பிடித்திருப்பவர்
ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார்

பிறகு விழித்துக் கொள்கிறார்
ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல.

ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்
எரியாது சுடரும் சுடர்
பூத்திருக்கிறது
முக்காலமும்.

TAGS
Share This