ஆகப் பெரிய கனவுகள்
கடந்த வருடம் தும்பி சிறார் இதழ்
நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகிய போது அதன் பயணத்தைத் தொடருபவர்கள் அடைந்த இழப்புணர்வும் துக்கமும் தும்பி எனும் மகத்தான கனவினை நீங்குவதன் துயரே. இவ்வருடம் தும்பி இதழ் மீளவும் சித்திரை முதல் நாள் வெளிவரும் எனும் பெருமகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.
தும்பி மீளவும் பறக்கும் என்பதை ஆழத்தில் ஒரு குரலாய் என்றும் அறிந்திருந்தேன் என எண்ணுகையில் வியப்பாயிருக்கிறது. மகத்தான கனவுகள் அப்படித் தான். பெருந்துயர்களை அடைந்து மீறும் கனவுகளே மானுடத்தை முன்னகர்த்தும் வேட்கையும் அறிதலும் கொண்டவை.
மகிழ்ச்சி.
TAGS தும்பி