ஈழத்து நாட்டார் தெய்வங்கள்
![ஈழத்து நாட்டார் தெய்வங்கள் ஈழத்து நாட்டார் தெய்வங்கள்](https://kirishanth.com/wp-content/uploads/2025/01/Screenshot_20250118_212047.jpg)
எழுநா இணைய இதழில் தி. செல்வமனோகரன் எழுதி வரும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்று மற்றும் சமகாலப் பயில்வுகள் குறித்த புறச்சித்திரத்தை அளிப்பவை. வாசிப்பில் ஒரு நேர்கோட்டை இழுத்துக் கொண்டு செல்வது போல ஒன்றன் பின் ஒன்றாக நீள்பவை.
உள்ளூர் பயில்வுகளையும் தெய்வங்களையும் அறிமுகம் செய்து கொள்வது புனைவெழுத்தாளர்களின் கனவுகளை நிரம்பச் செய்ய உதவும். நமது பண்பாட்டு மனத்தை உண்டாக்கிக் கொள்ள வழிவகை செய்யும். இத்தொடரை எழுநா இணையத் தளத்தில் இலவசமாக இறக்கி வாசித்துக் கொள்ளலாம். சமகாலத்தில் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படும் ஓர் ஈழத்தமிழ் மாத இதழ். பெரும்பணியைச் செய்யும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
![](https://kirishanth.com/wp-content/uploads/2025/01/dsc06427460638250197081465-650x433.jpg)
இணைப்பு : எழுநா