ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன்.

அந்தர நதி

பேரழுகையின் உப்பு நதியில்
வழித்தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்

இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக்
கரை தொட்டதில்லை

என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.

TAGS
Share This