சிரிக்கும் புத்தனுக்கு

சிரிக்கும் புத்தனுக்கு

தமிழின் மகத்தான ஒரு உடல்
மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது
அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன
அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன

இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள்
கேவலைப் போல
ஒரு மெளனமான மலரிதழ் விழுவதைப் போல
முகத்தை அள்ளிக் கொள்வதைப் போல

அவ்வளவு பெரிய உருவம் என நான் எண்ணியிருந்த அந்தக் குழந்தை
ஒரு சாதாரண மலர்ப்பேழைக்குள் படுத்திருக்கிறது

ஒரு மொழி என்பது
தன் வாலைச் சுருட்டி வாயில் கவ்வும் பாம்பு என கூறுபவன்
உடலை உடல் கடந்தது என நம்புபவன்
இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற இறந்தவன்
ஒரு முத்தம் போல
நூற்றாண்டுகளாக மொழியின் கன்னத்தில் இருக்கப் போகிறவன்

போய் வருக பெருங்குழந்தையே
உடல் கடந்த உடலே.

(ரமேஷ் பிரேதனுக்கு)

https://www.youtube.com/live/09oYaHeTbJc?si=AXXF9NlP4NRPqVfR

TAGS
Share This