மெளனமான ஒரு கல்

மெளனமான ஒரு கல்லிலிருந்து
பெருகும் ஒரு நீர் போல
இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று
மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல
இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர்
என்றோ கட்டிலிருந்த பேயொன்று
அறுந்து விலகுகிறது
மூச்சை இழுத்துப் பிடிக்கிறது
நழுவி விழுகிறது
கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள்.
(கட்டைக்கு)
14.10.2025
ஒளிப்படம் : சுகிர்தா சிவசுப்பிரமணியம்

