எழுநா : 43

எழுநா : 43

ஈழத்து புலத்தில் பண்பாட்டு ஆய்வுகளை பரந்துபட்ட தளத்தில் தொடர்ந்தும் வெளியிடும் எழுநா இதழின் 43 இதழினைத் தற்போது அவர்களின் இணையத்தளத்தில் வாசிக்க முடியும்.

வரலாறும் தத்துவமும் இலக்கியத்தின் இரண்டு சிறகுகள். ஈழத்து இலக்கியச் சூழல் இது இரண்டும் முயங்காத வெறுவெளி. வரலாற்று ஆய்வுகளுக்கு புனைவு வெளியில் பல அடுக்குகள் கொண்ட முக்கியத்துவம் உண்டு. காலகட்டத்தை புரிந்து கொள்ளவும், வரலாறு இயங்கும் ஓட்டத்தை அறியவும் ஒரு புனைவெழுத்தாளர் ஓயாது ஆய்வுகளை வாசிக்க வேண்டும் என்பது எனக்கு நானே வகுத்துக் கொண்டிருக்கும் நெறி.

புனைவில் காலமென்பது திரைச்சட்டகம் மட்டும் தான். அங்கு நிகழும் மானுட நாடகமே முக்கியமானது. ஆனால் ஈழத்தைப் பொறுத்த வரைக்கும் அதன் பண்பாட்டு, வரலாற்று நிலம் எழுதியெடுக்கப்படவில்லை. அதன் மைய ஆளுமைகளும் சம்பங்களும் இயக்கமும் புனைவில் நிகழ்த்திப் புரிந்து கொள்ளப்படவில்லை. இவை நிகழாமல் வெறும் மாதிரிச் சம்பவங்களின் பத்திரிகை உண்மைகளையே இங்கு இலக்கியமென நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்கள் வாசிக்கிறார்களா என்பது வேறு. எழுத்தாளர்கள் என்று தங்களை நம்புபவர்கள் கூட வாசிப்பதில்லை என்பதே நான் கண்ட உண்மை.

இத்தகைய பின்னணியில் எழுநாவின் வரலாற்றுப் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. தொடர்ந்து செயல் புரிக!

இதழை வாசிப்பதற்கான இணைப்பு : எழுநா 43

TAGS
Share This