பிரியத்துக்குரிய பெண்ணுக்கு
நானொரு புணர் மிருகமாக என்னைக் கற்பனை செய்து கொள்கிறேன். அது அந்தரத்தில் என் விலாவை விறைக்கச் செய்கிறது. புழுக்கள் என் தோலில் வளர்கின்றன. மயிர்களைப் போல. கொலைக் கணத்திற்கும் விலங்குப் புணர்ச்சிக்கும் மூளை என்னை அழைக்கின்றது. அதற்கு உடலெல்லாம், வெறும் உடல். பிறிதொன்றுமற்ற உடலாக உன்னை ஆக்கிக் கொள்கிறேன். இந்தக் கற்பனை என்னை சிலிர்க்க வைக்கிறது. நொதிக்கும் திராவகங்களை உன்னில் பொழிந்து கொண்டே கேவும் உன் முகத்தசையில் என் விந்தைத் தெளிக்கிறேன்.
உன்னை, உன் சகோதரியை, தாயை, வெளியெங்கும் உள்ள எல்லா உடல்களையும் புணர்ச்சிக்கு அழைக்கிறேன். மூளையின் நரம்புகள் விடைத்துச் சர்ப்பங்களெனக் குழைந்திருக்கின்றன. என் நஞ்சில் பதனிட்டிருக்கிறேன் என்னை.
எனது மூளை எதனால் இப்படி நிரம்பியிருக்கிறது. நானே அறியும் குற்றங்களால் நானேன் ஆகியிருக்கிறேன். எனது ஆண் ஏன் இத்தனை விலங்காயிருக்கிறான். நானேன் அலறலின் கொடுங் கனவில் இத்தனை பிரியமாயிருக்கிறேன். எனது பிரியமென்பதே இத்தனை அதீதமா. இத்தனை பிறழ்வா. இத்தனை சூழ்ச்சிகரமானதா.
தீயிலைகள் எரியுமென் உதட்டில், கொடுங்கனவுகள் பிரளும் என் மூளையில், கூர் முனையென நீண்டிருக்கும் என் நாவில், நீயேன் வந்தமர்ந்தாய் சின்னஞ்சிறு குருவியே. உன் இளைய இறக்கைகளின் ஒவ்வொரு மயிர்க்கணுவிலும் நான் அச்சமாய் வாழ்கிறேன். என் கண்களை நீ அஞ்சுகிறாய், என் அசைவில் உடல் விதிர்விதிர்க்க, நீ உன் சின்ன இதயத்தைப் பற்றிப்பிடிக்கிறாய். அதற்கொரு உதறல் இருக்குமா. கனவு இருக்குமா. நம்பிக்கைகள் அலைக்கழியுமா. நான் எதுவும் அக்கறைப்படேன். நீ என் அடிமை. என் நாய். என் விலங்கு. உன்னை நீயொருபோதும் மீட்கப்போவதில்லை. என் நரகத்தில் உனக்கொரு ஆசனம் வைத்திருக்கிறேன். அதிலமர். நான் பார்க்கிறேன். என் தண்டனைகளை வாங்கிக் கொள். அதுவே உனக்கு நானளிக்கும் காதல்கள். என் சித்திரவதைகளின் அடியில் உனக்கொரு சின்னஞ்சிறு இதயமிருப்பதை நான் மறப்பேன். நினைத்துக் கொண்டே மறக்கும் அந்த நினைப்பு நீள வடுக்களிருக்கின்றன. சவுக்குகளின் பிசிர்களைப் போல. முழந்தாளிடு, உன் இறைவனை ஏற்றுக் கொள். என் பிரியத்துக்குரிய பெண்ணே, உன்னைச் சாக விடமாட்டேன். கொல்வேன்.
(2024)