நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

நானொரு துயரம் நானொரு வாழ்வு

பழமையிலும் பழமையானது துயரம்.

நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்
நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்
நானே வாழ்வின் பலியும் இரக்கமும்.

வற்றா அனல் வெளியில் பெருமெளனம்
என் இருப்பு.

அலறிச் சிறைபடும் ஒவ்வொரு
பறவையிலும்
துடிக்கும் சிறகு நானே

அறையும் ஓலமும்
அடங்கும் இதயமும்
நானே.

நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்
நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்
நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன்

கைவிடப்பட்டவன்.

நானே மகா மூர்க்கனும் புனிதனும் ஆனேன்
எனது சதையையே உண்டனர் பகிர்ந்தனர்
நானே மரணமும் சாட்சியும் ஆவேன்.

உருகும் மெழுகின் திண்மம்
என் கண்ணீர்
உறையாக் கடலின் அலைச்சல்
என் வாழ்வு

நானே தீயுள் சுடரும் காத்திருப்பு
நானே வார்த்தையுள் நெருடும் மறுதலிப்பு
நானே பூமியுள் உறங்கும் பெருவெடிப்பு

நானே எரியும் நிலமும் ஆற்றும் மழையும்.

*

I am a tragedy, I am a life

The oldest among the old is my tragedy.

I am the greatest tragedy and the endless grief
I am the tear and the ash of the new era
I am the sacrifice and the compassion of life.

A great silence is my existence
In the perennial space of heat.

I am the throbbing wing
Of each and every bird
That gets imprisoned with a howl of cry.

I am
The slap and the lament
And The heart that subdues.

I am the one whose hands are chained
I am the forlorn one dragged in the streets

I am the one who pleaded with God and was abandoned.

I am the hoodlum as well as the pure one
My meat was eaten and shared
I am the death and the witness.

My tears
Are solid melting wax
My life
Is the drift of the sea that never freezes

The wait that exists in the fire is me
I am the denial in the Word
I am the big-bang resting inside earth.

I am the burning land and the soothing rain.

மொழிபெயர்ப்பு: Azeefa
(2018)

(அசீபா)

அசீபா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஊடகவியலாளராகப் பணியாற்றுபவர். பொதுச்சுகாதரம், சுற்றுச்சூழல், காலநிலை நெருக்கடி, தொழிலாளர் நலன்கள், தொல்லியல், கலாசாரமெனப் பரந்துபட்ட தளங்களில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாசிப்பிலும் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பிலும் ஆர்வமுள்ளவர். இக் கவிதையை அவர் 2018 இல் மொழிபெயர்த்திருந்தார்.

முகப்புப் படம்: The Massacre of the Innocents, by Gustave Doré (1832–1883)

TAGS
Share This