தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்
தடை செய்யப்பட்ட புத்தகம்
நண்பா,
தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்
ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்
சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றி
நீ அறிந்து வைத்திருந்தால்
அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்
நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்
கவிஞனை நீ சந்தித்திருந்தால்
யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்
பாட்டிகள், எங்கேனும் இன்னுமிருந்தால்
இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்
பரிசுப் பொருட்கள் எதையாவது
தற்செயலாய் நீ தொட நேர்ந்தால்
அலையும் கடலிலிருந்தோ அல்லது
அக் காட்டிலிருந்தோ, ஏதோ ஒரு வாசனை
உன்னை அதனுள் இழுத்திருந்தால்
அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்
யாரேனும் சிறு நீர் கழிப்பதை
‘கைகளை மட்டும் கட்டியபடி நீ பார்த்திருந்தால்
நாளை, உனது கைகளிலும் ஒரு தடை செய்யப்பட்ட புத்தகம்
இருக்கலாம். அல்லது
நாளை கழித்து.
*
Prohibited Book
Friend,
If you knew a person at the least
Who quests and reads prohibited books
If you know about anyone
Who makes coffins
If you do not believe
In the arrival of incarnations
If you have met the poet
Who writes only one poem in a hundred years
If there are grandmothers anymore
Who tells stories of the wars
If you had to accidently
Touch the gifts kept
In memory of your dead lovers
If any smell
From the wandering seas
Or that forest
Pulls you inside it
If you had to silently watch
Somebody urinating
In the lamp you burn
In memory of the destroyed
Then, tomorrow
There may be a prohibited book
In your hands, too
Or perhaps
Day after tomorrow.
அசீபா
*
A banned book
My friend,
If you know someone
who seeks out banned books,
If you are acquainted with
someone who makes coffins,
If you do not believe in incarnations,
If you have met a poet
who writes a single poem
in one hundred years,
If there are still grandmothers
somewhere narrating
stories of war,
If, by accident,
you happen to touch
the presents given by
beloveds who are long dead,
If the smell of
turbulent sea
or murky forest
possessed you,
Arms folded,
if you have
watched someone
urinate on the lamp
you lit in memory
of the dead,
there will be a banned book
in your hands
tomorrow
or
the day after.
கீதா சுகுமாரன்