Author: Kiri santh

ஒற்றைக்கோடை

Kiri santh- October 8, 2024

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி ... Read More

125: மழைக்குயில்

Kiri santh- October 8, 2024

சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். ... Read More

124: ஆழிசூடிகை : 04

Kiri santh- October 7, 2024

"துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்" என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் ... Read More

123: ஆழிசூடிகை : 03

Kiri santh- October 6, 2024

இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் ... Read More

122: ஆழிசூடிகை : 02

Kiri santh- October 5, 2024

ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ... Read More

121: ஆழிசூடிகை

Kiri santh- October 4, 2024

தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் ... Read More

120: சிலைப் புன்னகை : 02

Kiri santh- October 3, 2024

விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் ... Read More

119: சிலைப் புன்னகை

Kiri santh- October 2, 2024

தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென. பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி ... Read More

118: ஒரு தீச்செந்தழல்

Kiri santh- October 1, 2024

"எத்திசை செல்வதென எண்ணாது திசை தோறும் பொழிந்திட்ட பெருமழைப் பெருக்கிலும் ஆழ்சுனை ஊற்றுகளின் கனவுகளிலும் உருவேறி ஓடிய மகத்தான ஆறொன்று எத்திசையும் திறக்காத பாழிருளில் தான் எங்கு பிரிகிறேன். எங்கு அழிகிறேன். இருக்கிறேனா. உலர்ந்தேனா ... Read More

117: நீர்க்கொடி : 02

Kiri santh- September 17, 2024

உளத்தில் கசந்து கொண்டிருந்த நச்சில் ஒருதுளியை எச்சிலென மண்ணில் உமிழ்ந்தான் வாகை சூடன். "பாணரே. காமம் கூடாதவன் பழக வேண்டியது போரே. உடலை ஒருக்கி அதைப் படைக்கலமென மாற்றினால் ஒழிய ஆணால் காமத்தை வெல்ல ... Read More