அறிமுகம்
கிரிசாந். பிறந்தது, 14. 01. 1994. யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி என்னும் ஊரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை யாழ் புனித சென் ஜோன்ஸ் பொஸ்கோவில் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் வரை பயின்றார். யாழ் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் உயர் தேசிய ஆங்கில டிப்பிளோமாவை பூர்த்தி செய்திருக்கிறார்.
அப்பா : சிவசுப்பிரமணியம், அம்மா : பாக்கியலட்சுமி, துணைவி : பிரிந்தா.
ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மயான காண்டம் என்ற கூட்டுத் தொகுப்பில் சில கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. யாழ். இலக்கிய குவியம், யாழின் கரங்கள், விதை குழுமம் ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பாட்டாளராக செயற்பட்டிருக்கிறார்.
விதை குழுமம் வெளியீடான ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ எனும் கவிதைத் தொகுதி இவரது முதற் கவிதை நூல் 2024 ஆம் ஆண்டு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்தது.
இவரது முதற் குறுநாவலான ‘கொடிறோஸ்’ ஆக்காட்டி பதிப்பகத்தினால் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இவரது முதல் நாவலான ‘கல்விரல்’ கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


