29: பாலை உரைத்தது
“ஆடற் சித்தர் என்ன சொன்னார் அக்கா” என ஈச்சி ஆர்வம் அரணையென விழிகளில் நாநீட்டியாட வினவினாள். ஈச்சி வனக்குடிலுக்கு வந்து இருபருவம் கடந்து விட்டது. அங்கு நுழைந்த போதிருந்த வறுமையும் உடல்மெலிவும் நீங்கி எருக்கம் பூக்களின் மென்னீல ஒளி அவள் சருமத்தில் மிளிர்வு கொண்டிருந்தது. தன் குடிகளுடன் சென்று இணைந்து கொண்டாள். குழந்தைகளைக் கொஞ்சி வானிலெறிந்து ஏந்தி விளையாடுவாள். சிறுவர்களுடன் காட்டு முயல் வேட்டைக்குச் செல்வாள். ஆடவர்கள் விற்பயிற்சி செய்யும் பொழுது நோக்கி நோக்கிக் காதல் கதைகள் சொல்வாள். “நாளுக்கொருத்தனைக் காதலிக்காதேயடி பாதகத்தீ” என மாதுமியாள் அவளை எள்ளுவாள். “நாளுக்கொரு புதுமலர் சூட்டுவது போல அக்கா” எனச் சொல்லி ஈச்சி நகை சிந்துவாள். அவள் சிரிக்கும் பொழுது உமிழ்நீரில் குமிழ்கள் தோன்றும். சிறிய மாந்தளிர் உதடுகள் விரியச் சிரிப்பாள். நிலவையை எப்போதாவது சென்று பார்ப்பாள். இருவரும் குளத்திற்குச் சென்று நீராடுவார்கள். குளத்தில் நீர்ப்பாம்பு நெளிந்து மறைந்து வெளிவருவது போல் ஈச்சி நிலவைக்கு மாயம் காட்டுவாள். ஈச்சியின் குறும்பும் துடுக்கும் மெல்ல மெல்ல நிலவையைத் தன் இருள் மடிப்புகளிலிருந்து வெளியே அழைத்து வந்தது. ஒரு சொல்லுக்கு மறுசொல் ஈச்சியில் பகடியெனவே எழும். சொல்லில் நகை நிகழ்ந்ததும் குமிழிகள் மிதந்து பறக்கச் சிரிப்பாள். அவள் எங்கிருந்து இத்தனை நகைகளை எடுத்து விசிறுகிறாள் என நிலவை நோக்கி நோக்கி மகிழ்வதுண்டு.
ஈச்சி தன் குறுங் கால்களால் உந்தி விண்ணில் மிதப்பவள் போல் எழுந்து நீரில் குதிப்பாள். தாமரைகளை அள்ளி நிலவையுடன் நடந்து வருவாள். “நடக்கும் தாமரை” என நிலவை அவளை விளிப்பாள். அவளின் வியர்வையில் தாமரையின் வாசம் மெல்ல மெல்ல இழைந்து விட்டதென அவள் சொல்லிய போது “வண்டுகள் அறியாத தாமரை அக்கா” எனச் சொல்லிச் சிரிப்பாள். “நான் அறிவேன் ஈச்சி. உன் தாமரையில் எங்கு என்ன நறுமணங்கள் பொலிகிறது” என அவள் முதுகில் அடித்துச் சொல்லி கூட நடப்பாள் நிலவை. ஈச்சி அவளுக்கு முன்னே நடந்து எருக்கம் பூவிதைகள் எழுந்து சுழன்று பறப்பதைப் போல் சுழன்று வண்டல் மண்ணில் கால்கள் புதைய மிதந்து சுற்றி வேடிக்கை காட்டுவாள். அவள் கூந்தல் எருக்கம் பூவிதையின் வெண்மயிர்த் தலைச்சுழல்வின் எழில் கொண்டிருக்கும். நிலவை அவளை நோக்கி நோக்கி தன் அகம் பூவிதையெனச் சுழல்வதாக எண்ணுவாள். நிலவையின் கால்களில் ஈச்சியால் துடி மீளக் கிடைத்திருக்கிறதென மாதுமியாள் நிலவைக்குச் சொன்னாள். “அவள் உன் அகவுரு நிலவை. நீ ஈச்சியாக ஆக எண்ணிய பெண். அன்றோடு அன்றை வாழ்ந்து சுகித்து அடுத்த நாளில் அப்போது மலர்ந்து அன்று முழுவதும் கமழ்ந்து துயிலில் உதிர்ந்து புலரியில் முகை விழிக்கக் காத்திருப்பவள். அவள் சிரிக்கும் போது உன் விழிகளை நோக்கியிருக்கிறேன். அதில் பேராசையொன்று சுடர்ந்து வெள்ளி
மீன்களெனத் துள்ளித் தாவும். ஈச்சி வனத்தின் யட்சி. வனங்களின் யட்சிகள் களியும் மெளனமும் தினம் விளையும் விழிகள் கொண்டவர்கள். ஈச்சியும் அப்படியானவளே. அவளில் தோன்றும் மகிழ்ச்சியை நீ பொருள் கொள்ளும் விதம் வேறு. அவள் அதில் திளைப்பவள். அக்கணம் எத்தனை அரியது என்பதை அவள் வாழ்க்கை அவளுக்கு உணர்த்தியிருக்கிறது. நீ மதி கொண்டவள். மகிழ்ச்சியைச் சொற்களாலும் அளப்பவள். உன்னால் ஒருபோதும் அவளாக ஆக முடியாது. ஆனால் சொற்களில் நீ அவளை இணைத்துக் கொள்ளலாம். உன்னுலகில் அவளை விளையாட விடலாம். நீ என்றோ கொள்ளப் போகும் சிறு மகிழ்ச்சியின் களிப்பிலும் இனிப்பின் சுவையிலும் ஈச்சி என நீ உன்னை உணரும் கணம் வாய்க்கும்” என மாதுமியாள் சொல்வாள். ஈச்சியை துடித்து மிதக்கும் பல்லாயிரம் எருக்கம் பூக்களின் காடுகள் என எண்ணினாள் நிலவை.
“சித்தர் என்ன சொன்னார் அக்கா” எனத் திரும்பவும் கேட்டாள் ஈச்சி. இருவரும் குளத்தின் கரையில் இருந்த வண்டல் மணல் நிறைந்த மணற் பரப்பில் நடந்து கொண்டிருந்தார்கள். இருபுறமும் அந்தியின் செம்மஞ்சள் திரவத்தை சரித்து ஊற்றியபடி நின்றன பெரு மரங்கள். அணில்களும் குறு முயல்களும் அவர்களை விலத்திக்கொண்டு ஓடியலைந்தன. வண்ணத்துப் பூச்சிகள் பெரிய விழிகள் போன்ற நீலமும் மஞ்சளும் கருமையும் கொண்ட சிறகுகளை அசைத்தபடி ஆயிரக்கணக்கில் சுற்றி வந்தன. வெண்ணிறச் சிறகுகளைக் கொண்ட சிறு வண்ணாத்திப் பூச்சிகளின் நீண்ட படையொன்று வனத்தை ஊடறுத்து வெண்சங்கிலி சிறகு கொண்டது போல் நீள மிதந்து லட்சக்கணக்கான வெண்ணிறச் சிற்றுயிர்களின் களிவிழாவுக்குச் செல்பவை போல் சென்றன. ஈச்சி அருகிருந்த தளிரிலைகளைப் பிய்த்து வாயில் போட்டு மென்று துப்பியபடி இளமானின் கால்கள் பூண்டு துள்ளியோடினாள். நிலவை அவளைத் துரத்தி ஓடத் தொடங்கினாள். ஈச்சி வேட்டைக்குத் தப்பும் மானெனத் தாவியும் அசைந்தும் பின்சாய்ந்தும் பாய்ந்தோடினாள். ஈச்சிக்கு மூச்சு நிறைந்து உடலில் குருதி கொப்பளித்து ஆடி வியர்வை மேனியில் நுரைத்தது. அங்கிருந்த முறிந்து வீழ்ந்து கிடந்த நீள்பாலையின் தண்டொன்றில் தாவியேறி உடலை வளைத்துப் போட்டு வானை நோக்கியபடி படுத்தாள். நிலவை தன் பேருடலின் சதைகள் வனப்பில் ததும்ப இளங் கரடியொன்று தேனை நோக்கி விழிகூர்ந்து பின்னியிருப்பதைப் போல் ஈச்சியை நோக்கியபடி தொடர்ந்து வந்தவள் அருகே தானும் வளைந்து படுத்துக் கொண்டாள். இருளின் முதற் கால்கள் காட்டில் மெல்ல நடக்கத் தொடங்கின. காட்டுக் கோழிகள் கூட்டமொன்று அலம்பியபடி மேய்ச்சலை முடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தன. இரவின் உயிர்கள் விழிகள் பெற்றன. அவ்வுயிர்கள் வனத்தின் இருள் வீதிகளில் தம் இரைகளை நோக்கி தூவி அடியெடுத்து வந்தனர். சாம்பல் மேனியும் கருஞ்சிலை வண்ண முகமும் கொண்ட நீண்ட வால்களையுடைய மந்திக்கூட்டமொன்று அருகிருந்த மாமரக் காட்டுக்குள் நூற்றுக் கணக்கில் அமர்ந்து சண்டையிட்டும் கூக்குரல் எழுப்பியும் இரவை வரவேற்றன.
“நான் நீலழகரை மணமுடிக்க விரும்புகிறேனா எனச் சித்தர் கேட்டார் ஈச்சி” என மூச்சில் ஒரு இனிமை கூடியிருக்கச் சொல்லத் தொடங்கினாள் நிலவை. “தேம்பவாவியைக் கொன்று விட்டு போரில் வென்று நீலன் திரும்புகிறார் என்ற செய்தியை குடிலுக்கு வந்து மாதுமியாள் சொன்ன போது முதல் முறையாக குடிலுக்கு வெளியே பகலில் இறங்கும் எண்ணம் என்னுள் துறுதுறுத்தது. தமிழ்க்குடியில் யாராவது ஒருவரால் சிங்கை அரசனைக் கொல்ல முடியுமென்றால் அது நீலரால் தான் முடியும் என நான் கருதியிருந்தேன். அந்தக் கணிப்பு என்னை நானே வியந்து கொள்ள மெய்யாகியது ஈச்சி. அவருடன் இணைந்து கொள்ளச் சொல்லி என் அண்ணனை நான் கேட்டுக் கொண்டேன். நிலமையை விளங்கிக் கொள்ள முடியாமல் சினமும் ஆணவமும் குடிப்பிரிவுகளின் பூசல்களும் அவன் கண்ணை மறைத்திருந்தன. நீலனை நான் நம்புகிறேன் என்ற சேதி கூட அவனை மிகவும் நோகடித்திருக்கலாம். தங்கை வேறொருவனை ஆண்மகன். வீரன் என்று புகழ்பாடுகிறாள் என அவனுள் வஞ்சம் எழுந்திருக்கலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குடிக்குள் நீலனைப் பற்றி உருவாகி வந்த கதைகளும் பாடல்களும் அவனைச் சிறுமை கொள்ளச் செய்திருக்கலாம். அப்படித் தான் நினைக்கிறேன். ஒருவரைத் தலைவர் என நாம் ஏற்றுக் கொள்ளும் போது நமது கால்கள் ஒரு அடி உட்சுருங்கி விடுகிறது. அதை நம் அகம் உணரும். அதுவே தலைவர்கள் அடையப் போகும் அழிவின் தொடக்கங்கள். அது சொந்தக் குடியிலேயே முதலில் நிகழும். எதிரிகளை விடச் சொந்த மக்களே அழிக்கும் எண்ணத்தைக் கூர்மையாக்கி வைத்திருப்பார்கள். அதை நான் நாள் தோறும் கேட்டு வந்தேன் ஈச்சி.
அவனெல்லாம் ஒரு தலைவனா. நம் நாட்டை ஒரு பரதவனை நம்பியா ஒப்படைப்பது. நிலம் தான் எங்களின் நாடு. கடலில் வாழ்க்கையை வாழ்பவனுக்கு நிலமும் அளிக்கப்படுவது ஏன். அரசு சூழ்கையென்றால் என்னவென்றாவது அந்த வாலிபனுக்குத் தெரியுமா. மீசை கூட ஒழுங்காக முளைக்கவில்லை. வாள் ஏந்த வந்துவிட்டான் வலை வீசுபவன். கொலைகாரன். சொந்தக் குடிகளையே துரோகிகள் எனக் கொன்றொழிபவன். எதிரிகளை விட துரோகிகளை முன்னரே கொல்லத் தொடங்கியவன். இவன் பிணக்காட்டைத் தான் ஆளப் போகிறான். நரமாமிசம் தின்பவன். இரக்கமற்றவன். அவன் விழிகள் கொலைவெறியில் திளைப்பவை. அவன் படை நடத்தினால் எந்தக் குடிகள் அவனுடன் இணைந்து கொள்வார்கள். வனத்திலும் கடலிலும் இளம் வீரர்களை பயிற்சியின் பேரில் துன்புறுத்துகிறான். குடிகளிடம் கப்பம் சேகரிக்கிறான். செல்வந்தர்களின் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறான். கொள்கைக்காரன். இன்னும் எத்தனை நூறு நூறு சொற்களால் பழிசொல்லப்பட்டார் நீலன்.
நான் நேரில் அவரை நோக்கிய கணம் என்னுள் எழுந்தது என்னவென்று இப்போதும் விளங்கவில்லை. அவரது விழியை ஒரு கணம் நோக்கினேன். அதில் தெரிந்தது அச்சமும் தயக்கமும் தவிப்பும் கொண்ட சிறுவன். இவனை எண்ணியா இத்தனை சொற்கள் எழுந்தன. பேருருளைகளென விரிந்த தோள்களும் மாகரங்களும் விரிந்த வாயும் கூர்நெடும் பற்களும் குருதியொட்டிய தாடியும் மீசையும் கொண்ட கொடூரனையே நான் கற்பனை செய்திருந்தேன். தலையில் ஒரு கொட்டு வைத்து என்னடா செய்கிறாய் இங்கே எனக் கேட்டால் அழத் தொடங்கிவிடும் அப்பாவியைப் போல் அவன் அங்கு நின்றான். அவன் என்றா சொன்னேன். சரி, அவன் என்றே இருக்கட்டும். அவன் சிறுவன். ஆனால் அவனது ஆணைகள் இங்கே ஏற்கப்படுவது அவனுள் எழும் ஆண்மகனினால் என எண்ணுகிறேன் ஈச்சி. வனக்குடிலுக்கு வந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் அவனையன்றிப் பிறிதொன்றை நான் இருட்டில் நோக்கியிருக்கவில்லை. என் அண்ணனைக் கொன்றவன் என்ற எண்ணம் சில நாட்களில் மறையத் தொடங்கிய போது அதை வலுவாகப் பற்ற விரும்பினேன். அப்பற்றே என்னை நீலனிடமிருந்து விலக்கி வைக்கும் என அறிவேன். அந்த நஞ்சை ஒவ்வொரு சொல்லாக ஊட்டி வளர்த்தேன். ஒருநாளைக்கு ஒருவேளை உண்டு நோன்பென அவனை வெறுத்தேன். வெறுக்க வெறுக்கச் சொற்கள் உதிர்ந்தன ஈச்சி.
வெறுப்பினைக் கடந்து நம் அகத்தை நெருங்கும் தோறும் ஒருவர் நம்மை தீக்குழம்பாகக் கரைக்கிறார். ஒவ்வொரு நாளும் அக்குடிலின் இருளில் நான் கரைந்தேன் ஈச்சி. காணொணாத கரம் ஒன்று என்னைத் தொட்டு எழுப்பும் “அஞ்சாதே” என்றோ “நானிருக்கிறேன்” என்றோ அந்தத் தொடுகை தலையைக் கோதும். தொடுகை மட்டுமேயான ஒரு உரையாடல். ஒரு தொடுகை அணைப்பென ஆகுமா ஈச்சி” என வானில் எழுந்த பிறை நிலவை நோக்கியிருந்தாள் நிலவை.
“காதலென்றால் என்னிடம் கேள் அக்கா. தினமும் ஒருவரையோ அல்லது இருவரையோ கூடக் காதலிக்கிறேன். அவர்கள் ஒரு அருங்கணத்தில் காதலனாகவும் மிச்ச நேரங்களில் தேவாங்குகளாகவும் தோன்றுகிறார்கள். உனது சொற்களில் பெருமளவு எனக்கு விளங்காத பொருள்களே எழுகின்றன. நீ கற்றவள். நான் கல்லாத வன மகள். எனது தலைக்குள் சேர்வது மனிதரில் கணங்களில் மின்னும் பேரழகு. அதை நான் இடைவிடாது காதலித்து என் காதலையும் உயிர் விழைவையும் பெருக்கிக் கொள்கிறேன்.
நான் குடிலுக்கு வந்தது முதல் ஏராளமான இளம் வீரர்களை நோக்கியிருந்தேன். அவர்கள் வாள்களைச் சுழற்றி மின்பொறிகள் சீறும் பொழுது விழிகள் குதித்தாடும். கதைகளைச் சாற்றி பொருமும் உடல் ஓய்வு கொள்ளும் போது மலைப்பாம்புகளென தசைகள் ஊரும். இடையிலும் மார்பிலும் துளித்துக் குமிந்தும் ஓடி வழிந்தும் படரும் வியர்வையில் சுடரும் வெய்யிலொளியில் மேனிகள் கருந்தங்கங்கள் என ஒளிவீசும். அம்பில் விழிநுனி தீண்டி அப்பால் இலக்கை அறியும் கூர்கணத்தில் கலைந்து சீறும் குழல்களும் கைவிரல்கள் கொள்ளும் முத்திரைகளும் அவர்களை எழிலர்கள் என வியக்கத் தோன்றும். பாடல்களைப் பாடித் தீச்சுற்றியமர்ந்து தாளங்கள் எழுப்புகையில் அவர்களில் எழும் சிறுவர்களின் களியாட்டில் உளம் விசையூன்றித் துடிதுடிக்கும். அழகர்கள் எனக் கூவிச்சிறகடிக்கும்.
ஆனால் அவர்கள் வேறொருவர் எனவே மிச்சப் பொழுதுகள் கழியும். அவர்கள் எனக்கு வெளியே ஏதோவொரு வெளியில் அம்பைத் தொடுக்கிறார்கள். கதைகளை மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் உடல்களைப் போலவே இதயமும் உலோகமென்றாகி யிருக்கிறது எனத் தோன்றும்.
நீலழகரையும் சிலதடவைகள் காதலித்திருக்கிறேன். ஆனால் அவரை அணுகி நோக்க நோக்க அன்னையென ஆகிவிடுவார் போலத் தோன்றியது. மாதுமியாளுக்குக்கும் அவர் மேல் காதலிருக்கலாம் அக்கா. இங்குள்ள பெண்களில் பலர் அவரைக் காதலிக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. ஆனால் மாதுமியாள் அக்காவிடம் ஒரு பக்தி இருக்கிறது. தெய்வத்தின் முன் நிற்பவர் போல் உடல் தழைந்து நிற்கிறார். அக்காதல் வேறொன்று. என்னால் பக்தி கூட முடியாது அக்கா. அது விழைவைச் சுருட்டி தன்னை ஒடுக்கிக் கொள்ளும் வன சர்ப்பம். அதைக் கண்டதுமே கல்லெடுத்து வீசிவிரட்டி விடுவேன். விழைவில் பெருகும் நுண்மைகளால் ஆனது என்னுடலும் அகமும். அதற்கு மெய்யகணங்கள் வேண்டும். சொற்களைக் கற்பனையில் பெருக்கிச் சிறகுகளாக்கும் கலையறியாதவள்.
எனக்குப் பெண்களையும் அதேயளவு பிடிக்கும் அக்கா. கூந்தலின் குழைவு மணங்கள். கழுத்து நரம்புகளில் மின்னும் தவிப்புகள். விழிகளில் சுழித்து நீந்தும் மீன்கள். இமைகளின் படபடப்புகள். உதடுகளின் பேரிதழ் மடிவுகள். உமிழ்நீரின் தேன் எச்சில். முலைகளின் பெருமலைகள். குன்றுகள். பாறைகள். அவற்றில் விழித்திருக்கும் முளைத்தளிர்கள். இடைகள். அல்குல்கள். அவற்றின் இன்மணங்கள். தொடைகள். பிருஷ்டங்கள். மோகத்தின் கனல் மேனிகள். ததும்பும் கன்னங்கள். தழையும் கணங்கள். குழையும் வண்ணங்கள். கருமை. செம்மை. மாநிறங்கள். மாந்தளிர் நிறங்கள். மண்ணிறங்கள். உடற் புள்ளிகள். விரி மச்சங்கள். புணர்வொலிச் சங்கீதங்கள். எல்லாமே எனக்குள் மயக்கின் கீற்றுகள் எழுப்புபவை. எனக்கு உடலை அறிந்தே உளம் நெருங்குகிறது அக்கா. ஒருநிலையில் உளம் ஒரு பொருட்டேயல்ல என உடல் என்னை விழுங்குகிறது. மதனம் ஒரு மாயத்திரவம். எச்சொடுக்கும் அதை அவிழ்க்கிறது என்றே எண்ணுகிறேன். காதல் ஒரு உடல் மெய்ப்பு திரவம் மட்டுமே. உடல் என்பதே விழைவு. உளம் அதைத் தூண்டும் சிறுவிழைவு” எனச் சொல்லி எழுந்து முதலையின் தோல்போல்க் கிடந்த பாலை மரத்தண்டின் மேல் அமர்ந்து சோம்பலை முறித்து விரல்களைச் சொடுக்கினாள்.
“ஈச்சி, நானும் பெண்களை விரும்புகிறேன். ஆனால் எனக்குள் உள்ள ஆண் ஆணையே விரும்புகிறான். ஆச்சரியம் தான்” என நகைத்தாள் நிலவை.
“நீங்கள் நீலழகரை மணமுடிக்க உறுதியளித்து விட்டீர்களா அக்கா” என்றாள் ஆவல் ஒரு குரலென எழுந்த ஈச்சி.
“ஆணவம் முற்றென எழுவதே ஆண்மை என்றாகிறது. அதுவே பெண்மையிலும் முற்றுவது. அங்கிருந்தே தலைவர்களும் கலைஞர்களும் பிறக்கிறார்கள். எளிய ஆணவங்களிலிலிருந்து ஆயிரம் காதங்கள் கடந்த பேருருக் கொண்ட ஆணவம். அங்கு நின்றபடி எளிய ஆணவங்களை அவர்கள் ஆள்கிறார்கள். ஆள்வதினாலேயே ஆணவம் அழகெனப் பொலிகிறது.
என்னுள் வற்றாத ஆண்மை வாழ்வதை உணர்கிறேன் ஈச்சி. நீ குடில் வந்த அன்று என்னில் உணர்ந்தது ஒரு ஆணைத் தான். உடலை நீவும் பொழுது அவன் உன்னைத் தொட்டான்” என சிரிப்பு முகத்தில் விரிய நாணமுற்றாள் நிலவை.
“நான் அவனை அறிந்தேன் அக்கா. அவனையே நான் கூடினேன். அவனுக்கு அழகிய முகம். ஆளும் குணம். கூடும் வெறி. குலையும் சரீரம். மேலும் இரு குலங்கும் முலைகளும் நன்மண அல்குலும் இருந்தது அக்கா” எனக் கொட்டிச் சிரித்து நிலவையின் இடக்கை விரல்களை எடுத்து சொடுக்கெடுக்கத் தொடங்கினாள்.
“ஆடற் சித்தர் குடிலின் வாயிலில் என் விழியை உற்றுநின்றார் ஈச்சி. என் மனதில் தழைந்து தழைந்து கிடந்த புலன்கள் ஒவ்வொன்றும் வேலென எழுந்து விறைப்பதை அவர் நோக்கியிருப்பார். ஒரு மின்சொடுக்கில் என் விழிகளில் அனைத்தும் பொலிந்தன. அனைத்தும் சொற்களென எழுந்து விடப்போவதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அவர் மெல்லிய புன்னகையுடன் “நீலனில் ஒளியென அமைவது உன்னில் இருளென உறைவதை நான் அறிவேன் மகளே. அவனில் இருளென உறைவதை நீ ஒளியாக்கு. உன்னில் இருளென அமைவதை அவன் ஒளியம்புகளால் எரிப்பான்” என ஆசீர்வாதம் போன்ற ஒரு மென்சிரிப்பை அளித்தார். “அது ஒரு வாக்குப் போல என்னில் அமைந்துவிட்டது ஈச்சி. வெல்லப்பட முடியாத ஆணும் பெண்ணும் அகங்காரங்களின் சிகர நுனிகள். இரண்டும் மட்டுமே ஒன்றையொன்று பார்த்துக் கொள்ள முடியும். வெல்லப்பட முடியாத ஆணொருவன் பல்லாயிரம் ஆண்டுகளாய் பெண்கள் திரட்டிய செருக்கை ஒரு சருகென நோக்குகிறான். அந் நோக்கில் அச்சருகுக் காடு பற்றியெரிகிறது. நான் பற்றியெரிகிறேன் என்பதை உணர்கிறேன் ஈச்சி. நீ பறித்த தாமரைகளை அவர் மஞ்சத்தில் தூவிட ஆசை எழுகிறது. அவரை நான் வெறுமனே ஒரு வாக்கின் நிமித்தமாக மணமுடிக்கப் போவதில்லை ஈச்சி. காதலின் நிமித்தம். என் செருக்கின் நிமித்தம். அவருள் உறையும் இருளுக்கு தீ வேண்டும். அது நான் என உணர்கிறேன்” எனச் சொல்லிச் சொல்லி சொற்களை வியந்தாள் நிலவை. அவள் உணர்வதை ஒருவிரலால் கூடத் தொடமுடியாத சொற்கள்.
வனக்காற்று உவகை கொண்டெழுந்தது. வன யட்சிகள் விழிநிறைந்து புன்னகைத்தன.
மரத்தண்டில் எழுந்து நின்று கால்களும் கூந்தலும் கைகளும் காற்றென ஆக ஈச்சி ஆடினாள். குதித்தாள். விரல்களில் முத்திரைகள் சூடி அபிநயித்தாள். சிரித்தாள். மேனி குலுங்கினாள். “வானகமே. விரிவெளிகளே. இருட் காடுகளே கேளுங்கள். என் காதலி மணமுடிக்கப் போகிறாள். வெல்லப்பட முடியாத ஆண் மகனை வீழ்த்தப் போகும் வெல்லப்பட முடியாத பெண்” எனக் கூவினாள். நிலவை சரிந்து படுத்துக்கொண்டு “பித்தி என்ன செய்கிறாய். நிறுத்தடி” எனத் தடுக்க விருப்பமில்லாத குரலில் தழைந்தாள். ஒரு கணம். ஈச்சியின் ஆடலின் பித்தில் எழுவது தான் எனக் கண்டாள். தன் அகத்தில் ஆடும் ஆயிரமாயிரம் ஆடிகளின் பெருக்குரு அவள். “அக்கா, எழுந்து ஆடு. எழுந்து கூவு. உன் காதலைக் கொண்டாடு” எனக் கூச்சலிட்டு தெய்வங்களுக்குப் படையலிட்ட சோற்றை உண்ட மஞ்சையென வளைந்து வளைந்து ஆடினாள்.
ஈச்சியின் சிற்றுடலில் பொங்கும் பெருக்கை நோக்கி உளமெழுந்தாள் நிலவை. அவள் விரல்கள் தடதடத்தன. கால்கள் எழுந்து மிதப்பதைப் போலுணர்ந்தாள். மரத்தண்டில் எழுந்து நின்றாள். காற்று அவள் கூந்தலைக் கலைத்து ஆடியது. வனம் வெறியெழும் புலியெனத் தன் உடலை நோக்கி வருவதை உணர உணர அவள் இதயம் அச்சம் கவ்வும் வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. மின்கணத்தில் நூறு துடிகளென இதயம் எழுந்தடங்கியது. இன்னொரு கணத்தில் ஆடியென உறைந்தது. அதில் தன்னைக் கண்டாள். அவளின் முகத்தில் நீலனின் புன்னகை ஒரு பொழுதென விரிவதை நோக்கினாள். மறுகணம் எல்லையில்லாமல் நீலமும் கருமையும் படர்ந்து ஆடியை அழித்தது. தான் மட்டுமே பார்த்துக் கொள்ளும் தானென அவள் கால்கள் எழுந்தன. கரங்கள் இன்று முளைத்தவையென தளிர் எடை கொண்டசைந்தன. ஓசைகள் உள்ளிருந்து எழுந்து பரவி இசையென விரிந்து செவிகளில் பின்னியது. ஆடினாள். பித்தி. செருக்கி. மடந்தை. வெறும் காற்று. சிலம்பி. சூரழகி. விரிசடையாள். உவகையூற்று. இன்மலர்ச் சாரல். விடம் பற்றுபவள். பாகமொன்றாகியவள். நூறு தலைகள் அவிழ. ஆயிரம் கரங்கள் திகைக்க. காற்றின் குழவிகளென ஆயிரமாயிரம் கால்கள் அலைப்ப. ஆடினாள். ஆடியெழுந்தாள் காமுகி. காமத்தின் விளை நாக்கு. மதன தேவி. மாயச் சிலை. நறும்புகை மேனியாள். கூத்தனின் கூத்தி. விழைவுகளின் தொல் தெய்வம். பெண். பெண். பெண்ணென எழுந்தாள். பெண்ணென்பது கட்டற்றதின் பெருக்கென உணர்ந்தாள். உடலைக் களையும் மாயக்கன்னியானாள். மயக்கு ஒரு மொழியில் அவளைக் கவிதையென்றது. புலன்கள் அவளை மெய்யென்றது. சுவை அவளை அமுதென்றது. தொடுகை அவளை இன்பமென்றது. விழி அவளைக் காலமென்றது. செவி அவளைத் தீண்டலென்றது. சுவாசம் அவளை நாகமென்றது. வனம் அவளை ஊற்றென்றது. வானம் அவளை விரிவென்றது. தீ அவளைத் தவிப்பென்றது. காற்று அவளைத் துள்ளலென்றது. நீர் அவளைப் பெருக்கென்றது. ஒளி அவளை கூசலென்றது. இருள் அவளை மேனியென்றது. இச்சை அவளை மாயையென்றது. ஊழ்கம் அவளைத் தேவியென்றது.
ஈச்சி புடவியில் தம்மைத் தவிர எவரும் இல்லையென்பது போல் பித்துற்று ஆடினாள். வனத்தின் கொல்விலங்குகள் விழி விரித்து அவர்களை நோக்கின. பறவைகளின் கண்கள் துஞ்சல் மறந்து அவர்களை ஒற்றியிருந்தன. வேழங்களில் மதனம் கூடி விழிகள் சுரந்தன. காட்டு மலர்கள் கனிந்து கனிந்து தம் நறுமணங்களைப் புயல் வெளியாக்கி விசிறியெறிந்தன. மரங்கள் கிளைகளை விரட்டி தம் இலைகளை அங்கு போவன ஆர்ப்பரித்தன. உடலும் உளமும் இரு பித்தென எழுவது போல் ஈச்சியும் நிலவையும் ஆடலானார்கள்.
ஆடலில் ஆடலை மறந்தார்கள். ஆடிக்கொண்டே அழலென ஆனார்கள். வீழ்ந்திருந்த பாலைக்குள் சுரப்பெழுந்தது. காதலின் பித்துற்ற நாகங்கள் வாலெழுந்து சிரசு ஏறுவது போல் பூமிக்கும் வானுக்கும் குதித்தார்கள். வியர்வையைக் காற்று வருடியது. உதடுகளில் கழுத்து வளைவுகளில் முலைகீழ் வரைகளில் இடை மேடுகளில் வியர்வை வழிந்து வழிந்து ஒளிந்து கொண்டு ஆடலை நோக்கியது. காற்றில் எழுந்த பனியும் பூமணங்களும் அவர்களை உருவேற்றியெழுப்பின. இரு அகங்களும் இரண்டையும் இழந்தன. அறியாத ஒரு கணத்தில் இரண்டையும் அறிந்தன. நாணின. கோபம் கொண்டன. விலகின. சேர்ந்தன. கழுத்துகளில் முகம் புதைத்து வியர்வை குடித்து தாகமாற்றின. முலைகள் அழுந்தி காம்புகள் விழிபெருக்கி கோடிகோடியென முலைகள் பெருகின. ஈச்சி ஆடை களைந்தெறிந்தாள். மென் பிறையொளியில் அவள் மேனி கொல்லீட்டியென விசை கொண்டு ஒளிர்ந்தது. நிலவையை இழுத்து அணைத்தும் விலக்கியும் ஆடினாள். காற்றில் ஒலியும் இசையும் அறிந்தன செவிகள். வெளியின் தாளமும் தாவலும் அறிந்தன கால்கள். மழை பொழிவது போல் தேகங்களை உற்று மீண்டனர். ஆந்தைகளும் கூகைகளும் அலறின. பறவைகள் குரலெடுத்துப் பாடத் தொடங்கின.
“வன தெய்வங்கள் நம்மை ஆசீர்வதிக்கின்றன அக்கா” என்றபடி நிலவையை இழுத்து பிறை நோக்கியெழுந்த அவள் தலையை தன் சிறுவிரற் கைகளால் பற்றினாள் ஈச்சி. நிலவை குனிந்து அவளை நோக்கினாள். முகம் வியர்வையால் குளித்து மேனியுருகி மின்னி நின்றாள் ஈச்சி. கொல்லெழில் இரு விழிகளாய் ஆகிய வேட்டை தெய்வமென அவள் சீறிக்கொண்டிருந்தாள். ஒருகணம் நிலவை உடல் குலைந்து அல்குல் சீறி மதனம் நுரைத்தது. “ஈச்சி என் கனவுப்பெண்ணே. என் காதலனைக் கண்டுற்றேன் ஈச்சி” என ஈச்சியின் மூச்சை சுவாசித்துக் கொண்டு உடல் விதிர்விதிர்க்கச் சொன்னாள் நிலவை.
ஈச்சியின் விழிகளில் மயக்குக் கூடி மேனி நழுவுவது போல் வழுகினாள். நிலவை அவளை இறுக்கி அணைத்து வியர்வையைப் பூசினாள். “ஈச்சி நீ என் பெண். நீலன் என் ஆண்” எனச் செவிகளில் அகவினாள் நிலவை. வழுவிய மெழுகு திரண்டு பாறையென எழுவதைப் போல் ஈச்சி எழுந்து நிலவையின் பேரிதழ்களில் தேன்சிட்டென தேன் அளைந்தாள். நிலவை அவளை இடையில் தூக்கியமர்த்தி அவளை உண்ணும் விலங்கென சிற்றுதடுகளை விரித்து ஆயிரம் சிறு நாக்குகள் வாயில் எழ அவளை உறிஞ்சினாள். பாலும் தேனும் கலந்த அமுத மணம் பரவி உடல்களின் கணுவிலும் கணுவிடை வெளியிலும் வெளியிடை முகைக்கும் புன்சிறு கணுவிலும் அதனிடை வெளியிலுமென மதனம் ஊறி ஊறிச் சுரந்து வழிந்தார்கள். மதனம் இரு மேனிகளாகி ஒன்றையொன்று தழுவுவது போல் ஆடினார்கள்.
நிலவையின் ஆடைகளை ஈச்சி களைந்தெறிந்தாள். காட்டில் தூவும் மலர்களென அவை மண்ணிறங்கின. நோக்கியிருந்த பறவைகளினதும் விலங்குகளினதும் உடல்களில் கனிந்த மதனங்களின் அறியாத புது வாசனைகள் அவ்வெளியை ஒரு காற்று மஞ்சமென ஆக்கியது. ஈச்சியின் குறுமுலைகள் கொல் கொல் என்பது போல் குலுங்கியாடின. நிலவையின் குலைமுலைகள் அள் அள் என்பன போல் ஆடின. கால்கள் விண்ணையளக்க என ஒன்றும் பாதாளங்களுக்கென இன்னொன்றுமெனச் சுழன்றாடின சர்ப்ப நெளிவுகளென இருவர் கால்களும் பின்னிக் கொண்டாடின. வியர்வையில் மதர்த்த முலைகள் விம்மிச் சீறி தம்மைத் தாமே சிலுப்பிக் கொண்டன. முலைவிழிகள் நான்கும் தங்கள் எதிர்முனைகளை அறிந்த அம்புகளெனப் பொருதியெழுந்தன. முலைகள் நான்கும் கதைகளென மோதிக்கொண்டன. கரங்கள் நான்கும் யானைத் துதிகளென ஆகிக் கொல்வெறியுடன் ஒன்றையொன்று இறுக்கிக் கொண்டன. வழிந்த வியர்வை இரு யோனிக்காட்டிலும் பெருமழையெனப் பொழிந்தூறின. ஈச்சி தண்டில் அமர்ந்து தலை தூக்கி நா நீட்டினாள். நிலவை அல்குலை அவளுக்கு அளித்து பெருந்தொடையை ஈச்சியின் தோள்களில் போட்டாள். அதன் எடையைத் தன் தோள்களால் உந்தியபடி வியர்வையும் மதனமும் நனைத்த பெருங்காட்டை மதவேழமொன்று குலைத்தெறிவது போல் யோனியுண்டாள். அல்குலருந்தினாள். விடாய் தீர்த்தாள். நிலவை மோகம் முற்றிய நுனிச்சிகரங்களில் அகத்தால் எழுந்து ஆடலானாள். அவள் கூந்தல் சுழன்று சுழன்று தன்னை விசிறிக் கொண்டது. இன்னும் இன்னுமென ஈச்சியுள் எழுந்த பேரரக்கி மதனமுண்டாள். பாசியூறிய பாறைகளென இருவர் உடல்கலிலும் வழுக்குப் படர்ந்தது. வீசியெறியப்பட்ட ஆடைகளினைக் குவித்து அதில் நிலவையைக் கிடத்தினாள் ஈச்சி. மேலேறி கழுத்தில் கடித்து முலையிறங்கி உண்ணா நோன்பிருந்த முதியவனின் நாக்கொண்டு அம்முலைகளை பித்துற்று உண்டு களித்தாள். நிலவை எழுந்தமர்ந்து ஈச்சியின் அக்குளில் நிரம்பிய வியர்வையை நாவால் நக்கினாள். அக்குளைக் கடித்தாள். ஈச்சியின் சிரசில் ஓராயிரம் சர்ப்பங்கள் பின்னிக் கொண்டன. இருமுலைக் காம்புகளையும் ஒன்றென அள்ளி வாய்க்குள் வைத்து உறிஞ்சினாள் நிலவை. மதனம் ஆழியென விம்ம எழுந்து அல்குலை நிலவையின் வாய்க்குள் வைத்தாள் ஈச்சி. கொல்தெய்வத்திடம் விரும்பித் தலைகொடுத்த பக்தனைப் போல் ஈச்சியின் அல்குல் நடுங்கிக் கொண்டிருந்தது. வேட்டைகளின் பெருந்தெய்வம் நிலவையில் எழுந்தாள். அல்குலை வெறியென்றால் என்னவென அறியக் காத்திருந்த தவத்தின் வரமென அள்ளிச் சுவைத்தாள். ஈச்சி விழிகள் போதையில் சொருகிக் கொண்டன. மெல்ல விழுங்கப்பட்டு தன்னுடல் யோனியிலிருந்து நிலவையின் வாய் வழியாக அவள் உடலுக்குள் வழுகி விழுகிறதென மயக்குக் கொண்டாள். மதனம் அடங்கி அல்குல் இதழ்கள் நடுங்கித் துடித்த போது மெய்ப்புல்கள் எழ சித்தமென ஒன்று தனக்கும் இருப்பதை நோக்கி அமைந்தாள். ஆடைகளின் மேல் கால்களை ஊழ்கத்திலென அமர்ந்திருந்த நிலவையின் முன் அவளின் வளர்ப்பு விலங்கைப் போல் நான்கு கால்களில் நின்று நேர் நோக்கி “ராட்சசி. காமசொரூபி. கொல்விழைவி. பேரரசிகளின் தெய்வம்” எனச் சொல்லிச் சிரித்தாள்.
மேகங்கள் சுரந்து முடிந்த வெண்மையென பாலைத் தண்டின் படுக்கையில் சென்று வளைந்து படுத்துக் கொண்டார்கள். மரம் இளகித் தெப்பமென அசைந்தசைந்து நழுவுவது போல் தோன்றியது. ஒரு அரவு மரத்தண்டின் அடியிலிருந்து பரபரவென ஓடத்தொடங்கியது. அதை நோக்கிய ஈச்சி “அக்கா, நீலழகரின் அன்னை நம்மை ஒற்றுக் கேட்டு விட்டாள். மகனிடம் உளவு பகரச் செல்கிறாள்” எனச் சொல்லி நகைத்து வெளிர்ந்து மேனியைத் தளர்த்தி மீண்டும் படுத்தாள். காற்று அணைந்து வீசி இரு உடல்களும் குளிர்ந்து விறகாகின. புலியொன்று தன் கால்களைப் பின் தழைத்து இருளில் மறைந்தது. நிலவை அவ்விழிகளையே நோக்கியிருந்தாள். இருளில் ஒரு நீலன் என எண்ணியபடி புன்னகை உதடென ஆனாள். பிறை அவன் புன்னைகையென வானில் எதிர்நின்றது.