56: நூறு தேனீக்கள்

56: நூறு தேனீக்கள்

பராக்கிரம வீர தன் கழலில் கட்டியிருந்த கரும்புண்ணை நோக்கியபடி அன்ன சத்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது உச்சிவெயிலின் கனற்கட்டியொன்று தன் கழலில் துடிக்கிறதென எண்ணினான். தன் தோள்களை அழுத்தி நரம்புகளை இறுக்கிக் குருதியை உந்திய போது கழலுள் குருதி சுழன்றோடும் வேகம் இதமாயிருந்தது. அன்ன சத்திரம் நிரம்பி வழிந்து கொண்டு கூச்சலும் வசவுமாய் அன்னமும் கறியுமெனக் குழைந்தது. வாழையிலைகளும் தேக்கிலைகளும் குவிக்கப்பட்டிருந்த கழிவுத்தொட்டியின் அருகே அத்திரிகளும் காளைகளும் நிற்கவைக்கப்பட்டிருந்தன. அவை இலைகளையும் உணவையும் மென்று அரைத்து முகர்ந்தபடி தலையாட்டிக் கொண்டு மணிகள் குலுங்க முண்டியடித்தன. பராக்கிரம அருகில் நின்ற வேப்பமரத்தின் அடியே வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாய்களில் ஒன்றை எடுத்து விரித்து அது அலைமடிவெனச் சுருள இருகைகளாலும் அரிசி புடைப்பவனைப் போல் பாயை விசிறினான். அவனருகே நின்று கொண்டிருந்த பாம்பாட்டி கணையான் பாயின் மறுவிளிம்பைப் பற்றி நீட்டிப் பாயை விரிக்க உதவினான். பராக்கிரம தன் தலைப்பாகையை ஒருக்கி மேற்துகிலால் மார்பை அரைமூடி மரத்தில் ஊன்றியபடி மெல்ல அமர்ந்தான்.

“காலில் நோவா” எனத் தடித்த பறைத்தோல் ஒலியென எழுந்த குரலில் கேட்டான் கணையான். “ஓம். கழலின் உள்ளே கண்டலொன்று. கழலைத் தான் என ஆக்கிக் கொண்டு வதைக்கிறது” என்றான் மெல்லிய வலிகொண்ட எருதுக் குரலில் பராக்கிரம. தன் வண்ணக்குவியலென நீண்ட துகிற்பையிலிருந்து சிறிய பழுப்புத் துணியால் சுற்றப்பட்ட பொடிக்குழைவை எடுத்து சிறுகுப்பியில் இருந்த கருநிற எண்ணையைச் சிரட்டையில் ஊற்றிப் பொடியிட்டுக் குழைத்தான் கணையான். சுண்ணத்தின் நிறத்திலிருந்த பொடியும் கருவண்ண எண்ணையும் குழைந்து கரும்பாகெனத் தடித்தது.
சிரட்டையிலிருந்த மருந்துக்குழைவைக் வலக்கரத்தில் ஊற்றிக் கையை நெற்றிமேல் குவித்து உதட்டில் சில வார்த்தைகள் எழுப்பி பரக்கிரமவின் நீட்டப்பட்டிருந்த வலக்காலின் கழலில் தடவத் தொடங்கினான். அதிரும் தோற்பரப்பில் வலிமிகுவதைக் கண்ட பராக்கிரம கடுமுள் தைத்து நோக்கொண்டவனென நெளிந்தான். கணையான் சிரித்துக் கொண்டே அவன் நெளிவதை ரசிப்பவன் போல் அழுத்தி அழுத்தித் தேய்த்தான். கழலில் வீங்கிய பகுதியைச் சுற்றி அழுத்தி மேலிருந்து கீழாக மருந்துக் குழைவை வழித்தான். பராக்கிரம தன் பற்களை இறுக்கிக் கொண்டு விழிகள் சிவந்து நரம்புகள் கீச கணையானை அறைந்து விடுபவனைப் போல முகம் நெரித்தான். அவன் முகத்தில் வியர்வை வழிந்து கசகசத்து நிரம்பித் தள்ளியது.

அருகே இருந்த முதுபாம்பாட்டி ஒருவர் தன் வெண்கூந்தல் போன்ற தாடியைத் துழாவிக் கொண்டு “நல்ல நெறி போட்டிருக்கிறது. விடுபட ஐந்தாறு நாள் ஆகலாம். இக் களிம்பு நெறியைக் கூட்டிப் பின் வற்ற வைக்கும். உன் தந்தையின் கைவளம் உன்னிலும் சேர்ந்திருக்கிறது கணையா” என்றார். புன்னகைத்துக் கொண்டே “எல்லா நெறிகளுக்கும் களிம்பு தேவை தானே மூப்பரே” என்றான் கணையான்.

“உடலை எண்ணாமல் சுழுக்கியோ போதமறியாமல் முட்டுண்டோ முடங்கியோ வளைந்தோ நெறிகள் உண்டாகின்றன கணையா. அவை உடலை உணரச் செய்யும் கட்டுகள். நோய் நெறி நீங்க வேண்டியது. குடி நெறி காக்கப்பட வேண்டியது” என்றார் மூப்பர்.

“மூப்பரே. குடி நெறிகளும் கட்டுவதால் நோயென உடலை அழுத்தக் கூடியது. பாம்புகளில் சாரையையோ விரியனையோ ஓலைப்பாம்பையோ அல்ல நாகங்களையே நாங்கள் தேர்கிறோம். அவை முன்னும் பின்னும் தலை கொண்டவை. புறந்தலையின் ஓவிய முகமே மெய்நாகமென நூல்கள் சொல்கின்றன. குடி நெறியென்பது நாகத்தின் புறந்தலை விரிந்து உலகு நோக்கிச் சீற்றமெழுகையிலேயே அவை விரியும். அன்றாட வாழ்வுக்கு அந்நெறிகள் தேவையற்றவை என்பதே எனது வாதம். தோழர்களுடன் இரவு முழுவதும் அதையே விவாதித்தோம்.

உடல் நெறிகளோ விடக்கடியோ நோயோ எதுவாகினும் அது உளத்தையும் கட்டுவது. குடி நெறியும் சட்டங்களும் அறங்களும் அவ்வாறே மானுடரை வடிவமைக்கின்றன” என்றான் கணையான். அவனுடைய சொற்களில் தெரிந்த மிதப்பைக் கண்ட மூப்பர் முகம் சுழித்து “கணையா நாகங்களை தெய்வமென்று சூடியவர்கள் நம் குடிகள். அறம் நம் புறந்தலை. சீறும் பொழுது அறமே நம் முகமெனக் கொள்ள நூல்கள் சொன்ன சொற்களவை. குடி நெறிகளோ அறங்களோ சட்டங்களை விட முதன்மையானவை. ஏன். உடல்களை விட முதன்மையானவை எனச் சொல்வேன்.

இளவயதில் அனைத்து நெறிகளும் அறங்களும் பிடிகாப்புகளெனவே தோன்றும். வாழ்வு வாசுகிப் பாம்பைப் போன்று நீளமானது. அதில் வாழ்வைக் கடைந்தால் நஞ்சும் அமுதும் கிடைக்கும். அமுது நெறியுள்ளவர்களுக்கும் விடம் நெறிமீறியவர்களுக்கும் அளிக்கப்படும்” என்றார் மூப்பர்.

தன் காலடியில் இருந்த பாம்புப் பெட்டியின் மேல் காலைப் போட்டபடி “ஓம் மூப்பரே. நான் ஆலகாலத்தை உண்டு மிடற்றில் அடக்குவேன்” எனப் புன்னகைத்தான். இளமையின் செருக்கில் அவன் உடலில் தெரிந்த மிதப்பை மேலும் மேலும் வெறுத்த மூப்பர் திரும்பிக் கொண்டார்.

பாராக்கிரமவின் கழலில் துணியால் களிம்பைச் சேர்த்துக் கட்டியவன் அவனை நோக்கி “இப்பொழுது வலி சற்றுக் குறைந்திருக்கிறதா” என்றான் கணையான். “இல்லை. பாறைக் கல்லைக் கட்டியதைப் போலிருக்கிறது” எனக் கடுகடுத்தபடி சொன்னான். கணையான் தன் புன்மீசையைத் தடவிக்கொண்டு “நல்லது. மருந்து வேலை செய்கிறது. இன்னும் ஒரு நாழிகையில் மலையைக் கழலில் கட்டியிருப்பதைப் போல் தோன்றும்” என நகைத்தான். இவனிடம் காலைக் கொடுத்தேன் மலையைக் கட்டிவிட்டான் என எண்ணி நொந்து கூடி நின்றான்.
“எப்பொழுது வலி நீங்கும்” எனக் கேட்டான். “மலையாகி விட்டால் எல்லாம் பாறையென உடைந்து மண்ணென உதிர்ந்து விடும். இரு நாழிகையில் நீங்கள் எழுந்து நடனமாடவில்லையென்றால் என் நாகத்தை எடுத்து நாவில் கடிக்க வைக்கிறேன்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான். “அதுவரை என்ன செய்வது. தீயிலை உருண்டைகள் உண்டா” எனக் கேட்டான். “இல்லை. நீங்கள் இப்போது எந்த மயக்கிலும் மூழ்கக் கூடாது. வலியின் உச்சியை நோக்கினால் ஒழிய வலி அழியாது நண்பரே” என்றான். ஒரு வரியில் மடைஞனெனவும் இன்னொரு வரியில் அறிஞனெனவும் தோன்றும் கணையானை நோக்கிய பின் தன் வலியை உற்று நோக்கினான்.

கணையான் மந்தணம் உரைப்பவனென தன் நாகப்பெட்டியைக் கைகளில் எடுத்து மடியில் வைத்தபடி சொல்லெடுத்தான். “நண்பரே. வலிகள் நெறிகளை விட மேன்மையானவை. வலி நெறியை உடைக்கும் அம்பு நுனி. வலிகளில் உச்சமென ஒன்றுண்டெனில் அது உடலறியும் மெய்வலிகளிலேயே சாத்தியம். காவியங்கள் புனைவது போல் அகத்தின் வலிகள் மெய்யானவை அல்ல. அவை சொற்களின் நோச்சாவிகள். சொற்களாலேயே அகவலி பெரும்வாதைக் காடெனப் பெருகி நிற்கிறது. நினைவோ சொற்களோ அற்ற குழவிக்கு அகவலியென ஒன்றுமில்லை. அன்னையை விட அன்னம் கேட்கும் வயிற்றின் வலியே பிரதானமானது. முதன் முறையாக எறும்பின் கடியில் துடிக்கும் குழவியின் தோலில் வலியென்பது என்ன. அது ஒரு மெய்ம்மையின் தீண்டல். உலகென்பது வலிகளின் நாகப்பெட்டியென்பதின் தொடக்கத் தொடுகை.

எங்கள் குடியில் நாகங்களைப் பற்கட்டி கரங்களில் கொத்த வைப்போம். அகவலிக்கு மருந்து அகத்தைக் கட்டுவது என்பதை இளவயதில் அங்கனம் அறிந்தேன். அகம் நாகமெனச் சீற்றம் கொண்டது. விடம் மிகுந்தது. கொத்த எந்நேரமும் உமிழ்நீரென விடம் கொண்டது. ஆனால் அதன் எல்லைகள் மாறுபடும். அதைச் சொற்களே மேலும் விசை கொண்டதென மாற்றுகின்றன. நாகம் தீண்டிய உடலை விட அகமே கொடியது. சாவின் அச்சம் வலியைப் பெருக்கும். அதுவே குருதியை அலைக்கொதிப்பென ஆக்குவது. சில கடுவிடப் பாம்புகள் குருதியைப் பனிக்கட்டிகளென உறையச் செய்பவை. சொற்கள் அகத்தை அங்கனம் ஆக்கும் நச்சு. அகச்
சொற்களை விரட்டிக் குழவியென உங்கள் வலியை நோக்குக நண்பரே. அதை ஊழ்கமெனக் கொள்க” என்றான்.

பராக்கிரம உடல் தளர்ந்து வேப்பமரத்தின் தடிதோலில் சாய்ந்தான். கிளைகளில் காற்று மருந்தென நாசி நிறைந்து நெஞ்சு நிறைத்தது. காற்றை அளவளாவும் வேப்பமிலைகளின் துளிர்நாவுகளை நோக்கினான். அசையும் கிளைகளில் முரசின் சீர்தாளமென அமைதி கூடியது. கழலில் பூசிய களிம்பினால் நோய் விலகிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு மேலும் தளர்வை அளித்தது. கூர்ந்து வலியை நோக்கி அதனை ஒரு பெருந்தேன் கூடென எண்ணிக் கொண்டான். அவனது கிராமத்தில் முதுமரங்களில் ஒன்றெனத் தன்னைக் கற்பனை செய்து கொண்டான். கழலில் தூங்கும் தேன்கூடென கண்டலை எண்ணி நோக்கினான். தேனீக்கள் மலர்களில் அமர்ந்தெழுவது போல் மேனியில் வலி நுண்கரங்களால் குத்திக் குத்தி வலிக்கூட்டைச் சேகரித்தன. நினைவு கூட்டிலிருந்து ஒழுகும் தேன் துளிகளென ஊற்ற அகவிழியில் சொட்டும் தேனால் உறக்கம் விழிகளைச் சொருகியது.

பராக்கிரம தன் கிராமத்தின் நெடுமரத்திலிருந்து நூறு தேனீக்களாய் விரிந்து ஒவ்வொரு மனையின் மீதும் குவியலாகப் பறந்தான். அருவிகளில் குளிக்கும் இளம் பெண்களின் மேனியழகிலிருந்து ஒவ்வொரு துளிவடிநீரிலும் உள்ள தேன்மையைச் சேர்த்தான். முலைமுனைகளில் அமர்ந்து தேன்குடித்தான். இதழ்களின் ஓரங்களில் ஊர்ந்தான். இடைகளில் குந்தி ஓய்வெடுத்தான். வதனங்கள் எனும் பெருமலர்களை ஓய்வேயின்றிச் சுற்றிப் படர்ந்தான். எழிலின் வண்ணக் குழைவுகளை மென்மாறுதல்களை விழைந்து விழைந்து மொய்த்தான்.

அங்கிருந்து பறந்து சென்று அரண்மனையின் வழிகளை இருநூறு குறுவிழிகளால் நோக்கி ரீங்கரித்தான். குடிகளின் அன்றாடப் பணிகளை நோக்கி வந்தான். கிழங்கு பொறுக்கினார்கள். வேட்டையாடினார்கள். கழனி புகுந்திருந்தார்கள். முற்றங்களில் அமர்ந்து வற்றல்கள் போட்டார்கள். பாக்கும் வெற்றிலையும் சுண்ணமும் குதப்பினார்கள். போர் வீரர்களை நோக்கினான். அவர்கள் புரவிகளில் இளவரசர்களெனச் செருக்குடன் வீதிகளில் சென்றார்கள். களம் கண்ட வீரர்களைக் குடிகள் பணிவுடன் உடல் குழைந்தனர். இளம் பெண்களின் சருமங்கள் நாணிச் சிவந்தன. வீரர்கள் அவர்களின் எழிலை நோக்கி சீழ்க்கையடித்தபடி நகர்ந்து சென்றனர்.

பயிற்சிக் கூடங்களில் புதிய வீரர்கள் தம் ஆற்றல்களைக் காட்டி ஆசிரியர்களை ஈர்க்க கடும்பாடுபட்டுக் கொண்டிருந்தனர். அரண்மனை முன்வாயிலை அவன் அடைந்த போது மலைவாசலில் முட்டுண்ட எளிய நூறு தேனீக்களென உருவம் சிறுத்து நின்றான். அப்பால் ஒரு கயிறு வடிவில் நூற்றுவரும் எழுந்து பறந்து முன்கோட்டை வாயிலைக் கடந்தனர். மலகந்தகமவின் சிங்கைபுரிக் கோட்டை ஆயிரம் வேழங்களின் பேருருவுடன் மலைக்கோட்டையென நின்றது. கருங்கற்களும் பாறைகளும் பவளக் கற்களும் கொணர்ந்து நுண்மையாகச் செதுக்கப்பட்டு பல்லாயிரம் கரங்களினால் உண்டாக்கப்பட்டது அந்த அரணமனை. அதை முழுதாய்ப் பார்க்க அவனுக்கு ஆயிரம் தேனீக்களின் ஈராயிரம் விழிகள் வேண்டுமெனத் தோன்றிற்று.

மலர்வனத்தில் சென்று கொண்டிருந்த போது கொடிகொடியாப் படர்ந்திருந்த முல்லைகளின் கீழ் மென்மஞ்சமொன்றில் இளவரசன் மங்கல குமார இரு தமிழ்ப்பெண்களை தனது ஆண்குறியைச் சுவைக்க விட்டு அவர்கள் தலைகளை வருடிக் கொண்டிருந்தான். பராக்கிரம முல்லைப்பூக்களின் மேலே அமர்ந்திருந்து அதை நோக்கினான். தமிழ்ப்பெண்களின் செழிமுலைகள் அவன் தொடைகளில் அழுத்தியது ஒருகையில் மதுக்கோப்பையுடன் அவர்களின் வாய்களில் நுழைந்து வெளியேறும் இன்பத்துடன் முனகியவனை அவன் பொறாமை கொள்ள நோக்கினான். அப்பால் யவனப் பெண்கள் பாரதப் பெண்கள் சிங்கைப் பெண்களென அவனைச் சுற்றி நூறு தேனீக்களென அமர்ந்திருந்தன. பராக்கிரம வட்டமிட்டு எழுந்து ஒவ்வொருவரின் மேலாய்ப் பறந்து அவர்களின் மேனியழகை நோக்கத் தொடங்கினான். யவனப் பெண்களின் பேருடல்கள். பாரதப் பெண்களின் மாந்தளிர் நிற உடல்கள். நாணம் கொண்ட விழிகள். குமாரவின் புணர்ச்சி வேகத்தைக் கண்டு நடுங்கும் உதடுகள். சிங்கைப் பெண்கள் தங்கள் தொடைகளை விரித்து தமிழ்ப்பெண்களை அவர்கள் அல்குல்களை நாவால் அளைய விட்டிருந்தார்கள். குமார அவ்விருவரையும் எழுப்பி அவனருகில் படுக்கச் சொல்லி அவர்கள் பிருஷ்டங்களில் தலைவைத்தபடி ஒரு யவனப் பெண்ணையும் தென்னகப் பெண்ணையும் அழைத்து மார்பை உறிஞ்ச வைத்து சிங்கைப் பெண்களை அவன் கால்களை அழுத்தச் சொன்னான். அவர்கள் தங்கள் முலைகள் அழுத்த அவன் விரல்களை நாவால் நக்கி உறிஞ்சு தொடை வரை நாவாலும் ஈரமுலைகளாலும் தடவியழுத்தினர்.

பராக்கிரம நெஞ்சில் அனல் கொள்ள எழுந்து பறந்து மலகந்தகமவின் அந்தப்புரம் நோக்கிப் பறந்தான். செல்லும் வழியில் நின்ற புரவிகளின் தினவையும் யானைக் கொட்டகையில் நின்று மலகந்தகம உரக்கப் பேசி அங்கிருந்த வேழமொன்றின் துதியை இடக்கரத்தில் தூக்கி எடை பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டான். யானைகளைப் பயிற்றுவிக்கும் போது அவன் நேரிலேயே அதைச் செய்வான். அவன் வேழங்களின் அகமறிந்தவன் என ஊர்ச்சொல்லுண்டு. அவன் பின்னால் இருந்த வேழம் ஒரு விளையாட்டுத் தோழனென அவனிடம் கரத்தைக் கொடுத்து நின்றதை நோக்கினான். எழுந்து பறந்து அரண்மனையின் குகை போன்ற பாதைகளால் பறந்தான். இருளில் தீப்பந்தங்கள் ஒளிர்ந்தன. நிர்வாணமான பெண்களின் ஓவியங்கள். போர்க்களக் காட்சிகள் என நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வண்ணச் சாந்துகளால் தீட்டப்பட்டிருந்தன.

மலகந்தகமவின் பன்னிரு மனைவியிரில் தான் காமுறும் சுகுமாரியைத் தேடி ஒவ்வொரு மஞ்சத்தறையாய் நுழைந்து வெளியேறினான் நூறு தேனீயான். தேனீக்களெனத் தேடிப் பறந்து கொண்டிருந்த போது உளம் கொண்ட வேகத்திலும் உவகையிலும் அவனது கழலின் வலி மறைந்து கொண்டிருப்பதை மறந்தான். மிதக்கும் சிற்றுடல்களில் அமைபவனென அவன் சுகுமாரியை எண்ணிய போது மின்சிறகுகள் கொண்டான். அவளின் பெரும் காமத்தை அவன் கண்டிருந்தான். அவர்களின் மூதாதையர் தொல்கதை போல் சிங்கத்தைப் புணர்ந்து உண்டாகிய வம்சக் கதைகளில் கேட்டது போல் சுகுமாரி எனும் பெருங் காமுகி புரவியைப் புணர்பவள். புரவியின் நீள்குறியை சுகுமாரி வாயிலிட்ட போது பராக்கிரம மீசை அரும்பாத சிறுவனென அக்காட்சியை நோக்கியிருந்தான். இரு பெண்கள் புரவியின் கால்களைக் கட்டி அதை இழுத்துப் பிடித்திருந்தனர். முன்னங்கால்கள் தூண்களுடன் கட்டப்பட்டிருந்தன. அந்த வெண்ணிறப் புரவியின் முன் மூன்று பெண்புரவிகள் மூவண்ணத்தில் கட்டப்பட்டு அவை காமத்தில் கனைத்துச் செரும நின்றிருந்தன. ஆண்புரவி தவித்து எழுந்து குறி விடைத்து நீண்டு வாழைக்குருத்தென நீளம் கொண்டிருக்கையில் அதைத் தன்னிரு கைகளால் பிடித்து உருவிக் குலுக்கி மாமதர்த்த கொல்முலைகளில் குறிவிழியால் முலைமுகைகளைத் தொட்டாள். முலைக்கோட்டுகள் செம்மாதுளை வண்ணத்தில் கனன்று கொண்டிருந்தன. அவன் புரவிக் கொட்டகையின் இருளில் தன் ஆண்குறி அவளைக் கண்டு விதிர்த்துத் துடிப்பதை முதன்முறை அறிந்த போது குறிக்குள் சர்ப்பங்கள் நெளிவது போல் இடைத்துண்டுடன் பற்றிக் கொண்டான். அவனது இதயம் புரவிகள் குதித்தோடும் புல்வெளியென அதிர்ந்து கொண்டிருந்தது.

TAGS
Share This