இளம் எழுத்தாளர்களுக்கு

இளம் எழுத்தாளர்களுக்கு

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது. காலத்தைப் போலவே அறிதலும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு மட்டுமே முன்னேறக் கூடியது.

அண்மையில் வாசித்த கற்றலைப் பற்றிய ஜெயமோகனின் சில வரிகளும் இக்காணொலியின் சவால்களை எதிர்கொள்ளும் இளம் எழுத்தாளர்கள் வேறொரு தளத்தில் உணரக்கூடியது.

“உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து, அதன் சவால்களைச் சந்தித்து, அச்சவால்களைத் தாண்டுவது போல சிறந்த கல்வி என எதுவும் இல்லை. அது மிகமிகக் கூர்மையான கல்வி. உங்கள் ஆர்வம் திசை திரும்பாது. அது செயல்முறைக் கல்வி ஆதலால் ஒரு போதும் வெற்றுத் தகவல் சேகரிப்பாக அது நின்றுவிடாது. உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்றால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது.

ஜெயமோகன்”

TAGS
Share This