Category: கவிதை

இந்த முறையாவது

Kiri santh- May 13, 2024

இடையில் எழுந்தமர்கிறதுஒரு தணற் பாம்பு எவ்வளவு நிரப்பியும் ஓட்டையாய் வழியும்எங்கு திரும்பினும் நெற்றியில் இடிக்கும் வாழ்வு. ஆலகாலத்தைக் கடையக்கயிறு வேண்டும்ஓயாத தலைவலியில் கிடந்த உன் தலையை மத்தாக்கினோம்உடம்பைக் கயிறாக்கினோம்இரண்டு பக்கமும் அசுரர்கள் கூடிக் கடைந்தோம் ... Read More

தங்கமே குட்டியே

Kiri santh- May 11, 2024

நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் ... Read More

முத்து

Kiri santh- April 23, 2024

எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லைஅவ்வளவு நேர்த்திஅவ்வளவு அசாத்தியம் சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம் அம்மா சத்தியமாக நடந்ததைச் ... Read More

குகை ஓவியங்கள்

Kiri santh- April 15, 2024

நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்இரண்டு தடவை அதைச் செக் செய்வேன் அமைதியாக இருக்கிறது குகைபச்சை வாசனையெழுகிறதுகனவுகளின் சங்கிலியோசை உடன்வரபாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்குச்சிக் குச்சிக் கால்களுடன் ... Read More

முதற் குட்டி

Kiri santh- April 14, 2024

வீட்டிலிருந்த எல்லாவற்றிலிருந்தும்அம்மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டேன். பக்கத்து வீட்டிலிருந்து கசிந்தசாம்பிராணிப் புகையின்நுனியில் அவள் இருந்தாள் எங்கும் எப்போதும் கைவிடமாட்டேன்என்று குடிகொள்பவள் போல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகமுதற் குட்டி பிறந்தது முதல். (2024) சிற்பம் : Venus ... Read More

சூது

Kiri santh- April 13, 2024

நான் அளவில் பெரிய சூதுகளை ஆடியிருக்கிறேன்அவற்றில்வாழ்க்கையிடம் வாழ்க்கையைவைத்து ஆடிய சூதுதான்அளவில் மிகச் சிறியது. (2024) Read More

வாழ்க்கைக்குத் திரும்புதல்: 12 புத்தகங்கள்

Kiri santh- March 16, 2024

எனது முதற் கவிதைத் தொகுப்பு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நூல் வடிவமைப்பு மற்றும் அச்சாக்க உதவிகளைக் குக்கூ சிவராஜ் அண்ணாவும் சந்திரசேகர், பாரதி முதலிய குக்கூவின் நண்பர்கள் தொடக்கம் பெயரறியாத பலரும் ... Read More

ஆகுதல்

Kiri santh- March 16, 2024

எங்கோ நான் எரிவது நீ பார்க்கத் தானெனஒளிரும் நட்சத்திரம் இவ் வாழ்க்கை. எங்கோ நான் அலைபடுவதுஉன் கண்களில் விழ. எங்கோ எனது பெயர் சல்லடையாக்கப்படுவதுஉன்னில் ரணமென விழுந்த புண்ணைவடுவாக்க. அழியாமல் உன்னில் வாழும் வேட்கையைஅழியாமல் ... Read More

சுய அழிவு

Kiri santh- March 4, 2024

எது கடைசியில்மிக மிக ஆழமான பள்ளத்தாக்கோஅதில் நான் வீழ்வேன் மீண்டும் எழ முடியாதபடிகாயம்பட்ட உடலுடன்கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில் கைவிடப்படுவேன்கால் நுனிகள் அசையமுடியாதபடி தறையப்படுவேன். விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடிதைக்கப்பட்ட இமைகளுடன் கழுகுகள் கொத்திப் ... Read More

திரிச்சுடர்

Kiri santh- March 3, 2024

யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024) Read More