Tag: கவிதை

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

Kiri santh- March 2, 2024

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் ... Read More

காலச்சுவடு: கவிதைகள்

Kiri santh- March 1, 2024

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ... Read More

திராவகத்தின் மொழி

Kiri santh- March 1, 2024

ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் ... Read More

ஆதித் தூசு

Kiri santh- February 28, 2024

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ... Read More

நறுங்காற்றின் இசை

Kiri santh- February 28, 2024

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், ... Read More

மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

Kiri santh- February 27, 2024

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை ... Read More

தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்

Kiri santh- February 25, 2024

தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், ... Read More

நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

Kiri santh- February 24, 2024

நானொரு துயரம் நானொரு வாழ்வு பழமையிலும் பழமையானது துயரம். நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்நானே வாழ்வின் பலியும் இரக்கமும். வற்றா அனல் வெளியில் பெருமெளனம்என் இருப்பு. அலறிச் சிறைபடும் ... Read More

வெற்றிடத்தால் எழும் வீடு

Kiri santh- February 24, 2024

ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ... Read More

நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

Kiri santh- February 23, 2024

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ... Read More