Author: Kiri santh

86: அதியா

Kiri santh- August 8, 2024

"இது கலிமுற்றி ஊழிமுதல்வன் எழுங்காலமென எரிவிண்மீன் ஆகாயத்தில் தோன்றிய அன்றே காலக் கணியர்கள் வகுத்துவிட்டனர் அங்கினி. நாம் காணும் அனைத்துக் களியும் ஊழியின் தாண்டவத்திற்கான ஒத்திகையே" என்றார் ஆடற் சித்தர். களியிரவில் அரவொன்று தன்னை ... Read More

85: நஞ்சு மழை

Kiri santh- August 7, 2024

முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை ... Read More

84: பெருவூஞ்சல்

Kiri santh- August 6, 2024

மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க ... Read More

83: புலரியாட்டம்

Kiri santh- August 5, 2024

"முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே" எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ... Read More

82: புலரிப்பனி

Kiri santh- August 4, 2024

புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி ... Read More

81: வெறுந்தேகம்

Kiri santh- August 3, 2024

சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் ... Read More

80: விழவின் தெய்வம்

Kiri santh- August 2, 2024

"எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே" என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று ... Read More

79: மாயச்சிறகுகள்

Kiri santh- August 1, 2024

நீலழகன் பொற்தேரில் குருளையெனப் பாய்ந்து ஏறுவதை நோக்கிய தமிழ்ச்செல்வன் புன்னகை மீண்டான். ஒவ்வொரு முறை நீலன் உடலும் உளமும் சோர்ந்து நோயுறும் போதும் ஓரிழை புன்னகை தமிழ்ச்செல்வனிடமிருந்து உதிருவதை எவரும் அறியார். இரவின் மாயப்போர்வை ... Read More

78: காலத்தூண்

Kiri santh- July 31, 2024

விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு ... Read More

77: வட்ட மலர்

Kiri santh- July 30, 2024

ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது ... Read More