Category: அபிப்பிராயங்கள்
நடைக் கவிதைகள்
தேவதேவனின் புதிய கவிதைகளை அவரது வலைப்பூவில் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளையின் கவிதைக் கொப்பி போல எளிமையான சொற்களும் வியப்பும் கொண்டவை. பலநூறு முறைமுறை சொல்லில் அமையப் பெற்றவை. ஆனால் அவை ஒரு நடைப் ... Read More
கவனச் சிதறல் பற்றி..
நம் காலத்தில் சலிப்பினாலும் பொருளற்ற வெற்றுக் கேளிக்கைகளாலும் தொடர்ந்து தங்கள் கவனிக்கும் திறனை இழந்து வரும் நூற்றுக்கணக்கானவர்களை நானும் அறிவேன். நானும் கூட இந்தச் சிக்கல் கொண்டவன். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சமூக ... Read More
நோக்கின்மை
உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் ... Read More
சங்கறுத்துக் குருதிப்பலி
இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் ... Read More
Master class
பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் ... Read More
ஒரு வியத்தல்
கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை 'ஒன்று விட்ட சித்தப்பா'. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி ... Read More
காதற் கடிதம் வாசிப்பவன்
கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் ... Read More
மகத்தான ரத்தத்துளி
கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை ... Read More
நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?
இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் ... Read More
ஒரு பஞ்சுத் துக்கம்
கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. ... Read More