Category: அழிகளம்
130: செண்டுவெளியாட்டம் : 02
"மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ... Read More
129: செண்டுவெளியாட்டம்
விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது ... Read More
128: நதிவழி
ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் ... Read More
127: மழைக்குயில் : 03
மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத ... Read More
126: மழைக்குயில் : 02
நீலன் உருவிய வாளுடன் சங்கறுத்து விழுவது போல சூர்ப்பனகரின் கனவு விரிந்தது. நீலன் மன்றில் உருகம் ஏந்தி என்னை அன்னையர் எவரேனும் கொல்க என இரந்து நிற்பவன் போல எழுந்தபோது தனது அனிச்சையாய் கால்கள் ... Read More
125: மழைக்குயில்
சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். ... Read More
124: ஆழிசூடிகை : 04
"துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்" என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் ... Read More
123: ஆழிசூடிகை : 03
இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் ... Read More
122: ஆழிசூடிகை : 02
ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ... Read More
121: ஆழிசூடிகை
தன் மெய்யாற்றல் எதுவென அறியாதவர் பெருங்களங்களை வெல்ல இயலாது. எத்தனை சிறியவையாய் இருந்தாலும் அறிந்து கணித்துப் பெருக்கிக் கொண்ட விசையே பெருவுருவென்றாகும். அதுவே களம் வெல்லும் படைக்கலம். வேறுகாடார் அகன்ற மார்பில் வெண்பாசியென மயிர்கள் ... Read More