Category: கவிதை

முக்காலமும்

Kiri santh- January 13, 2025

நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டுநீலம் கலையாத ஆழிகளுண்டுமீன்கள் வாழும் மலைகளுண்டுநிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன தூண்டிலைப் பிடித்திருப்பவர்ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார் பிறகு விழித்துக் கொள்கிறார்ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல. ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்எரியாது சுடரும் ... Read More

நான் இப்போது ஒளி

Kiri santh- January 5, 2025

எந்த இருட்டிலும் என்னை நீங்கள் எறிந்து தள்ளலாம்எரிவதால் அல்லஒளிர்வதால் நான் ஒளி என்னை எரித்து மிஞ்சும் கரியில் வைரங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்பிறகுவைரங்களில் ஒளிர் விடும் பட்டைகளில்ஊர்ந்து செல்லும் நீர்த்துளியென என்னைக் கண்டு கொண்டேன் ஒளிக்கு இருளேயில்லை. Read More

கவிஞர்களைக் காதலிப்பவன்

Kiri santh- December 18, 2024

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ... Read More

கருணையான பைத்தியம்

Kiri santh- December 15, 2024

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் ... Read More

பாத்திரங்கள்

Kiri santh- December 6, 2024

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே ... Read More

ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்

Kiri santh- November 24, 2024

நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக ... Read More

வாழ்க்கைக்குத் திரும்புதல்

Kiri santh- June 27, 2024

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள ... Read More

நோவிலும் வாழ்வு

Kiri santh- June 10, 2024

கவிஞர் வசிகரனின் முதற் கவிதை நூல் 'நோவிலும் வாழ்வு' ஆக்காட்டி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. எமது தலைமுறையில் எழுந்து வரும் புதிய நிலமும் சொல்லூற்றும் கொண்டவர். அவருடைய முதற் தொகுதிக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நிலம் அசைய ... Read More

மலரினைச் சாத்துமென்!

Kiri santh- May 18, 2024

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் ... Read More