Tag: கவிதை

கவிதைகள். In

Kiri santh- January 24, 2025

கவிதைகளுக்கான இணைய மாத இதழாக வெளிவரும் கவிதைகள்.in இன் ஜனவரிக்கான இதழ் வெளிவந்திருக்கிறது. மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியர்கள். Read More

கவிஞர்களைக் காதலிப்பவன்

Kiri santh- December 18, 2024

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ... Read More

சிருஷ்டி கீதம்

Kiri santh- December 16, 2024

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ... Read More

கருணையான பைத்தியம்

Kiri santh- December 15, 2024

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் ... Read More

முதற் குட்டி : மொழிபெயர்ப்பு

Kiri santh- December 9, 2024

"முதற் குட்டி" கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பினை இப்னு அஸ்மத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். தொடர்ச்சியான அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்துகள். (இப்னு அஸ்மத்) * පළමු පැටියා නිවසේ තිබූ සියඵ දේවලින් ... Read More

பாத்திரங்கள்

Kiri santh- December 6, 2024

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே ... Read More

ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்

Kiri santh- November 24, 2024

நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக ... Read More

வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு

Kiri santh- November 23, 2024

எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு ... Read More

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

Kiri santh- November 20, 2024

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் ... Read More