Tag: தர்மு பிரசாத்

கலையும் வாலும் : 2

Kiri santh- November 27, 2025

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ... Read More

கலையும் வாலும்

Kiri santh- November 26, 2025

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் 'படுபட்சி' எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ... Read More

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

Kiri santh- June 12, 2025

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ... Read More

விவாதத்தின் அடிப்படைகள்

Kiri santh- April 16, 2025

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே. அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது ... Read More

சிருஷ்டி கீதம்

Kiri santh- December 16, 2024

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ... Read More

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

Kiri santh- November 20, 2024

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் ... Read More

நோவிலும் வாழ்வு : உரைகள்

Kiri santh- November 11, 2024

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024 யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு. https://dharmupirasath.com/archives/2746 Read More

வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

Kiri santh- May 5, 2024

இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். ... Read More

கவிப்புதிர்

Kiri santh- April 19, 2024

ஓர் அறிவிப்பு 52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் ... Read More