Category: அபிப்பிராயங்கள்

நோக்கின்மை

Kiri santh- January 1, 2025

உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் ... Read More

சங்கறுத்துக் குருதிப்பலி

Kiri santh- December 20, 2024

இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் ... Read More

Master class

Kiri santh- December 19, 2024

பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் ... Read More

ஒரு வியத்தல்

Kiri santh- December 19, 2024

கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை 'ஒன்று விட்ட சித்தப்பா'. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி ... Read More

காதற் கடிதம் வாசிப்பவன்

Kiri santh- December 18, 2024

கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் ... Read More

மகத்தான ரத்தத்துளி

Kiri santh- December 18, 2024

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை ... Read More

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

Kiri santh- December 17, 2024

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் ... Read More

ஒரு பஞ்சுத் துக்கம்

Kiri santh- December 17, 2024

கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. ... Read More

கவிதை தெய்வமன்றோ

Kiri santh- December 13, 2024

தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. தமிழில் தெய்வங்களை அழைக்கும் ... Read More

மியாவ்

Kiri santh- December 5, 2024

விலங்குகளுக்கும் எனக்கும் எப்பொழுதும் இருக்கும் உறவு சுகுமாரனின் தந்தை பற்றிய கவிதையொன்றில் வருவது போல அன்போ வெறுப்போ அற்ற நிலை தான். அவையும் இங்கு வாழ்கின்றன. என்னைப் போலவே. ஒருமுறை யாழ் குயர் விழாவில் ... Read More